மதுரை தமுக்கம் மைதானத்தில் இளையராஜாவின் மகன் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடந்தது. ராஜாவின் சங்கீதத் திருவிழா என்ற பெயரில் நடந்த இந்நிகழ்ச்சியை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் தொடங்கி வைத்தார். இந்த இசை நிகழ்ச்சியை நடிகை சுஹாஷினி தொகுத்து வழங்கினார். ‘‘நமச்சிவாயா வாழ்க, நாதன்தாழ் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க...’’ என்ற பாடலுடன் இசை நிகழ்ச்சி தொடங்கியது.
பின்னர் இளையராஜா ‘‘ஜனனி ... ஜனனி பரிபூரணியே...’’ என்ற பாடைலை பாடி அனைவரின் கைதட்டலையும் பெற்றார். அதன் பிறகு, பாடகர்கள் ஹரிகரன், எஸ்.என்.சுரேந்திரன், யுவன் சங்கர் ராஜா, பாடகிகள் சித்ரா, பவதாரிணி, பிரியா உள்பட பல பாடகர், பாடகிகள் இளையராஜாவின் இசையில் பிறந்த பாடல்களை பாடி அரங்கையே அதிர வைத்தனர். இசை நிகழ்ச்சியின் இடையிடையே கார்த்திக் ராஜா, நடிகர் பிரகாஷ்ராஜ், டைரக்டர்கள் பாலா மிஷ்கின் ஆகியோர் பேசினர்.
கார்த்திக் ராஜா பேசும்போது, ‘‘எனக்கு கடவுள் கொடுத்த மிகப்பெரிய பரிசு அப்பா, தாய். இசையாக அப்பா பிறந்து இருக்கிறார். எத்தனை பேருக்கு இந்த பாக்கியம் கிடைக்கும்? என்றார். டைரக்டர் பாலா பேசும்போது, ‘‘நான் அடுத்து பண்ணபோகிற படம் ‘தாளம் தப்பட்டை’ இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து உள்ளார். இது அவருக்கு ஆயிரமாவது படமாகும். நான் மதுரைகாரன். இப்படத்தில் மதுரைகாரன் சசிகுமார் நடித்துள்ளார்.
மதுரைகாரர் இசையமைத்துள்ளார். மதுரைகாரன் நான் டைரக்ட் செய்கிறேன். இதைவிட நான் என்ன பாக்கியம் செய்து இருக்க முடியும் என்றார். நடிகர் பிரகாஷ்ராஜ் பேசும்போது ‘‘அய்யாவின் (இளையராஜா) பாடலை நேரடியாக கேட்க வேண்டும் என்பதற்காகவே இங்கு வந்துள்ளேன்.
நடிகராக இருந்து டைரக்டராகியும் இருக்கிறேன். நான் ஒரு படம் எடுக்கிறேன். அதில் மதுரை மல்லிகை பூ, இட்லி பற்றி பாட்டு போட்டு இருக்கிறார். தனியாக இருக்கும்போது அவரது இசையை கேட்பேன். என் படத்துக்கு இசையமைத்து கொடுத்த அவர் எனக்கு பொறுமையையும், எனக்கு வாழ்க்கையையும், இயற்கையாக வாழும் முறையையும் கற்று தந்துள்ளார்.
இதனால்தான் நான் சந்தோஷமாக, மகிழ்ச்சியாக இருக்கிறேன். இதற்காக அவருக்கு என் குடும்பத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். டைரக்டர் பாலா படத்திற்கு இளையராஜா ஒரு பாடலுக்கு இசையமைத்து உள்ளார். அந்த பாடலை கேட்டதும் அழுது விட்டேன். அப்படி ஒரு அற்புதமான பாடலை கொடுத்துள்ளார் என்றார்.
Cinema - Kollywood
ரஜினிகாந்தின் நடிப்பில் நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள கோச்சடையான் திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை ரஜினியின் மகள் சவுந்தர்யா இயக்கியுள்ளார். இந்தியாவிலேயே முதல் முறையாக அவதார், டின்டின் படங்களுக்கு பயன்படுத்தப்பட்ட மோசன் கேப்சரிங் தொழில்நுட்பம் இப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில், படத்தின் இயக்குனர் சவுந்தர்யா மும்பையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- கோச்சடையானில் என் தந்தை நடித்தது, படத்தை இயக்கும் நான் அவரது மகள் என்பதால் அல்ல.
கதை மற்றும் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன்பிறகே நடிக்க ஒப்புக்கொண்டார். இப்படத்தை சிறப்பாக இயக்க முடியும் என்று எனக்கு நம்பிக்கை இருந்தது.
என் தந்தையும் அனுமதி அளித்தார். எனது முதல் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கு அவரது ஆசீர்வாதம் கிடைத்துள்ளது. இது ஒரு கமர்ஷியல் படம் என்பதுடன் தொழில்நுட்பமும் புதிது. ஆனால், ரஜினிகாந்த் கதை போன்று இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
கமர்ஷியல் படத்திற்கு நவீன தொழில்நுட்பம் புகுத்தப்பட்டிருப்பது நமக்கு இதுவே முதல் முறையாகும். ராணா பட வேலைகளை தொடங்கியபோது என் தந்தைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. குணமடைந்து வந்த பின்னர் அவருக்கு உடல் அளவிலான அதிக அழுத்தங்களை கொடுக்க நாங்கள் விரும்பவில்லை.
ஏனெனில், ராணா வரலாற்றுப் படம். கோச்சடையான் அதற்கு முந்தைய காலகட்டத்தின் படம். கோச்சடையான் ராணாவின் தந்தை. அதனால் கோச்சடையான் முதலில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், என் தந்தைக்கு அழுத்தத்தை குறைக்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்தோம். நேரடியாக காட்சிகளில் நடிப்பதை ஒப்பிடுகையில் இது எளிதானது. இவ்வாறு சவுந்தர்யா கூறினார்.
Cinema - Kollywood
சினிமா டைரக்டர் ரவிக்குமார் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:– என் மனைவி சுஜிபாலா பத்திரிகையாளர்களை சந்தித்து உரையாடிதாகவும், என்மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளைப் படித்து அதிர்ச்சியும் வியப்பும் அடைந்தேன். அவர் கூறியதாக வெளியான தகவல்கள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை, உணமைக்கும் புறம்பானவை.
எனக்கும் சுஜிபாலாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் மட்டுமல்ல, திருமணமும் நடந்தது என்பதே உண்மை. இதை என்னால் நிரூபிக்க முடியும். அதற்கான ஆதாரங்கள் அனைத்தும் உள்ளன. அவற்றை வெளியிடுவேன் நான் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறியிருப்பது தவறானது.
உண்மையில் அவரது பெற்றோர்தான் குறிப்பாக, அவரது தாயார் இந்திராதான் ஒவ்வொரு முறை தொலைபேசியில் தொடர்பு கொள்கிறபோதும், என்னை ஆளை வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்து வருகிறார்.
நான் அவரை அடித்து உதைத்ததாக சுஜிபாலா கூறியிருக்கிறார். ஒரு கணவன் என்ற முறையில் நான் அவரது தவறான நடவடிக்கைகளுக்காக பலமுறை கண்டித்துள்ளேன் என்பது உண்மை.
ஆனால் அடிக்கும் அளவுக்கு நான் மோசமானவன் அல்ல. மூன்று திரைப்படங்களை (உண்மை, இன்றைய செய்தி, லவ் பண்ணலாமா வேண்டாமா) தயாரித்தும், இயக்கியும் வருகிற நான் பெண்களுக்கு எத்தகைய மரியாதையையும், கவுரவத்தையும் வழங்குவேன் என்பதை அதில் நடித்த நடிகைகளையும், பெண் கலைஞர்களையும் நீங்கள் விசாரித்துத் தெரிந்து கொள்ளலாம். அவருக்கு கார், பங்களா, தோட்டம் வாங்கித் தந்ததெல்லாம் பொய் என்று கூறியிருக்கிறார்.
நான் வாங்கித் தந்ததற்கான ஆதாரங்களை வைத்திருக்கறேன். ‘உண்மை’ திரைப்படத்தையே முடிக்க முடியாத அளவுக்கு நான் மோசமான பொருளாதார சூழ்நிலையில் இருப்பவன் என்றும், நான் எப்படி வீடு வாங்கித் தந்திருக்க முடியும் என்றும் சுஜிபாலா கேட்டிருக்கிறார்.
‘உண்மை’ திரைப்படம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதே சுஜிபாலாவால்தான். அவர்தான் இந்த படத்தின் கதாநாயகி. படப்பிடிப்புக்கு அழைத்த போதெல்லாம் அவரை அனுப்ப மறுத்து, அவரது தாயார் அவரை மறைத்து வைத்ததே படம் தாமதமானதற்குக் காரணம்.
அவர் தேதி கொடுத்தால், உடனே படப்பிடிப்பைத் தொடங்க நான் தயாராகவே இருக்கிறேன். நான் ஏற்கனவே திருமணமானவன் என்றும், எனக்கு குழந்தைகள் உள்ளனர் என்றும் ஏதோ புதிய கண்டுப்பிடிப்பைப் போல கூறுகின்றார்.
எனக்குத் திருமணம் ஆனதும், விவாகரத்துக்குப் பின் நான் பிரிந்து வாழ்வதும் தெரிந்துதானே அவர் எனக்குக் கழுத்தை நீட்டினார்? இப்போது புதியதாக ஏதோ பேசுவதன் காரணத்தை அவரும், அவரது தாயாரும்தான் விளக்க வேண்டும். சுஜிபாலாவுக்கு இருந்த சில தவறான தொடர்புகளை மறைத்து அவர்கள்தான் எனக்கு தீங்கு செய்திருக்கிறார்கள்.
அவரது குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை என்று நிரூபிக்க என்னால் முடியும். இதற்கான புகைப்பட ஆதாரங்கள், சாட்சிகள் அனைத்தும் என்னிடம் உள்ளன. உரிய நேரத்தில் அவற்றை வெளியிடத் தயாராக இருக்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Cinema - Kollywood
சமந்தா அரசியலில் ஈடுபடப் போவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இவர் தமிழில் ‘நான் ஈ’, ‘பானா காத்தாடி’, ‘நீ தானே என் பொன் வசந்தம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் ஜோடியாக கத்தி, சூர்யா ஜோடியாக ‘அஞ்சான்’ படங்களில் நடிக்கிறார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார். சித்தார்த்தும், சமந்தாவும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் பரவியுள்ளன. இந்த நிலையில் பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.
அவர் கூறும் போது, தேர்தலில் அனைவரும் ஓட்டு போட வேண்டும். நல்ல ஆட்சியாளரை தேர்வு செய்ய இது தான் சரியான நேரம் என்றார். மேலும் அவர் கூறும்போது, ‘நமது நாட்டுக்கு நரேந்திர மோடி போன்ற திறமையான தலைவர் தேவை. பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடி தகுதியானவர். அவர் நல்லாட்சி தருவார் என்பது எனது தனிப்பட்ட கருத்து ’ என்றார்.
இதன் மூலம் சமந்தா அரசியலில் குதிக்க தயாராவதாக கூறப்படுகிறது. பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Cinema - Kollywood
தெனாலிராமன் படத்தில் வடிவேலு நடிக்க ஆயத்தமானபோது கோலிவுட்டிலுள்ள பல முன்னணி நடிகைகளிடம் கால்சீட் கேட்டனர். ஆனால், வடிவேலு என்றதும் அத்தன நடிகைகளும் பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடினர். அதற்கடுத்து, வடிவேலுவைப்பற்றிய சங்கதி தெரியாத நடிகையாக கொண்டு வருவோம் என்று மும்பையில் இருந்தும் சில நடிகைகளை கூட்டி வந்தனர். ஆனால், அப்படி வந்த சில நடிகைகளிடம், கோடம்பாக்கத்தில் உள்ள சிலர் அப்படி இப்படி போட்டுக்கொடுத்து அவர்களை சொல்லாமல் கொள்ளாமல் மும்பைக்கே ஓட்டம் பிடிக்க வைத்தனர்.
ஆனால், அப்படி வந்தவர்களில், எதைப்பற்றியும் எனக்கு கவலையில்லை. வடிவேலுவுடன் நடித்தே தீருவேன் என்று தில்லாக நின்ற ஒரே நடிகைதான் மீனாட்சி தீட்ஷித். இவருடன் நடித்த அனுபவம் பற்றி வடிவேலு கூறுகையில், இந்த படத்துக்கு மீனாட்சி ஓ.கே ஆனதும், எனக்கு ஒரே பயம். இந்த புள்ளையையும் எதையாச்சும் சொல்லி ஓட வச்சிடக்கூடாதேன்னு பதட்டமா இருந்துச்சு.
அது ஒருபக்கமிருக்க, என்னை நேருல பாத்தா அந்த புள்ள எங்கூட நடிக்க மாட்டேன்னு சொல்லிடுமோங்கிற இன்னொரு பயமும் எனக்குள்ள இருந்துக்கிட்டே இருந்துச்சு. அதனால, முதல் நாள் படப்பிடிப்புக்கு வர்றது வரை மீனாட்சி தீட்ஷித் கண்ணுல நான் படவே இல்லை.
புல் மேக்கப்போட்டு, அந்த மன்னர் கெட்டப்போடதான் அவருக்கு காட்சி கொடுத்தேன் அதனால் என்னோட சுயரூபம் அந்த புள்ளைக்கு தெரியாம போச்சு. அதுவும் இல்லாம சுமமா சொல்லக்கூடாது புள்ள, நல்ல செக்கச்செவேர்னு தக்காளி பழம் மாதிரி இருக்கு.
நானோ தார் ரோடு மாதிரி இருக்கேன். ஆனாலும் அந்த புள்ள பெரிய மனசு பண்ணி எங்கூட நடிச்சிருக்கு. ரொம்ப நல்லாவும் நடிசசிருக்கு, அதனால் மீனாட்சிக்கு நான்தான் நன்றி சொல்லனும் என்கிறார் வடிவேலு.
Cinema - Kollywood
சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தை தயாரிப்பது பிவிபி சினிமா நிறுவனம். இந்த நிறுவனத்தின் செயல் இயக்குனர் ராஜீவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பேட்டியில் கூறியதாவது: எங்கள் நிறுவனம் பல்வேறு தொழில்களை செய்து வருகிறது. அதில் ஒன்றுதான் சினிமா தயாரிப்பு. ராஜபாட்டை, நான் ஈ, ஆயரத்தில் ஒருவன் உள்பட இதுவரை 7 படங்களை தயாரித்திருக்கிறோம். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் 8வது படம். தெலுங்கில் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய சூப்பர்ஹிட் படமான மரியாதை ராமண்ணாவின் தமிழ் உரிமத்தை நாங்கள் வாங்கி வைத்திருந்தோம். அதனையே இப்போது வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற பெயரில் தயாரித்து வருகிறோம்.
சந்தானம் பர்ட்ஸ் காப்பி அடிப்படையில் தயாரித்து தருகிறார். இது ஒரு பேமிலி எண்டர்டயிண்மெண்ட் காமடி படம். ஒரு பாடல் காட்சி தவிர மற்ற பணிகள் அனைத்தும் முடிந்து விட்டது. மும்பை மாடல் அழகி அஷனா ஜவேரி ஹீரோயினாக நடிக்கிறார்.
படத்தின் கதையில் சந்தானத்தின் வீடு முக்கியமானதாக இருக்கும். பூந்தமல்லி ரோட்டில் உள்ள ஈவிபி தீம்பார்க்கில் 2.5 கோடி செலவில் சந்தானத்தின் வீட்டை செட்போட்டு படமாக்கினோம். சந்தானம் சைக்கிளில் மினரல் வாட்டர் சப்ளை செய்பவராக நடிக்கிறார்.
அதிக பலம் இல்லாத சந்தானம் தன் வீட்டிற்கு வரும் ஆபத்தை எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் மே 9ந் தேதி வெளிவருகிறது. அதற்கு முன்னதாக ஏப்ரல் 14ந் தேதி பாடல்களை வெளியிடுகிறோம்.
பாடல் வெளியீட்டு விழாவில் எஸ்.எஸ்.ராஜமவுலிலியும், ஷங்கரும் கலந்து கொள்கிறாஇந்தப் படத்திற்கு பிறகு பிவிபி நிறுவனம் பெரிய ஹீரோ ஒருவர் நடிக்கும் படத்தை தயாரிக்க இருக்கிறது. அதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும். என்றார்ர்கள்.
Cinema - Kollywood
நடிகர் ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினி பாடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். ஏராளமான பக்தி பாடல்களை பாடியிருக்கும் அவர், கமல் நடித்த டிக் டிக் டிக் என்ற படத்தில் நேற்று இந்த நேரம் மற்றும் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் கடவுள் உள்ளமே உள்பட பல பாடல்களை சினிமாவிலும் பாடியிருக்கிறார். இதில் கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே என்ற பாடல் இன்றுவரை கருணை இல்லங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், கோச்சடையான் படத்திலும் ஒரு பாடல் பாடியிருக்கிறார் லதா ரஜினி.
ஏ.ஆர்.ரகுமானின் இசையில் அவர் பாடியுள்ள மணப்பெண்ணின் சத்தியம் என்ற அந்த பாடலுக்கு ஏராளமான லைக் வந்து கொண்டிருக்கிறதாம். மேலும், இதே பாடலை தெலுங்கில் பாடுவதற்கு வேறு பின்னணி பாடகி தேடியபோது, தெலுங்கிலும் நானே பாடுகிறேன் என்று ஆர்வத்துடன் கேட்டு வாங்கி பாடியிருக்கிறாராம் அவர்.
தமிழில் பாடியதைப்போலவே தெலுங்கிலும் உணர்வுப்பூர்வமாக பாடியுள்ளாராம் லதா ரஜினிகாந்த். இதையடுத்து, தனது அம்மாவின் குரல் இனிமையாக இருப்பதால், இனி தொடர்ந்து சினிமாவில் பாட வேண்டும் என்று அவரை கேட்டுக்கொண்டுள்ளாராம் கோச்சடையான் டைரக்டர் செளந்தர்யா அஸ்வின்.
Cinema - Kollywood
இது கதிர்வேலன் காதல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே நண்பேன்டா என்ற படத்தில் நடிக்க முடிவு செய்தார் உதயநிதி ஸ்டாலின். அப்போது காஜல் அகர்வால் பரபரப்பான கதாநாயகியாக பேசப்பட்டதால், நண்பேன்டா படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்தார் உதயநிதி. அப்போதே 25 லட்சம் அட்வான்ஸ் பணத்தையும் காஜல் அகர்வாலிடம் கொடுத்தனர்.
அதன் பிறகு இது கதிர்வேலன் காதல் படத்தில் நடித்தபோது நயன்தாரா உடன் உதயநிதிக்கு நல்ல கெமிஸ்ட்ரி உண்டானது. அதன் காரணமாக, நண்பேன்டா படத்தின் கதாநாயகி வாய்ப்பை நயன்தாராவுக்கு வழங்கிவிட்டார். நண்பேன்டா படத்தில் வரும் ஹீரோயின் கேரக்டருக்கு காஜல் அகர்வாலை விட நயன்தாராதான் மிகப்பொருத்தமாக இருப்பார் என்று அப்படத்தின் இயக்குநர் ஜெகதீஷ் சொன்னதால்தான் கதாநாயகி மாற்றம் நடந்ததாக சொன்னார் உதயநிதி.
இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும் காஜல் அகர்வால் கடுப்பாகிவிட்டார். ஆனால் தன் கடுப்பைக்காட்டிக் கொள்ளாமல் நண்பேன்டா படத்துக்கு தான் வாங்கிய அட்வான்ஸ் பணத்தை உதயநிதியிடம் திருப்பிக் கொடுக்க முன்வந்தார். ஆனால் உதயநிதி காஜலிடமிருந்து அட்வான்ஸ் பணத்தை திரும்ப வாங்க மறுத்துவிட்டாராம். பெரிய இடத்துப் புள்ளைங்களுக்கு 25 லட்சம் எல்லாம் பாக்கெட் மணிப்பா
Cinema - Kollywood
Subscribe to:
Posts (Atom)

.jpg)

.jpg)
.jpg)
.jpg)

.jpg)
Recent Comments