Select Menu

Slider

Powered by Blogger.

Travel

Performance

‹
›

Cute

My Place

Slider

Racing

Videos

கமலுடன் தேவர் மகன், குருதிப்புனல் உள்பட சில படங்களில் வில்லனாகவும் நடித்தவர் நாசர். ஆனால் வில்லனாக வேகமாக வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில் அவதாரம் படம் மூலம் திடீரென நாசர் ஹீரோவாக மாறினார். அதனால், அதையடுத்து அவரை வில்லன் வேடங்களுக்கு யாருமே அழைக்கவில்லை. அதனால் அப்பா, மாமா என்று முழுநேர கேரக்டர் நடிகராக மாறினார் நாசர். இந்தநிலையில், தனது விஸ்வரூபம் படத்தில் நாசருக்கு ஒரு தீவிரவாதி வேடம் கொடுத்த கமல், இப்போது தனது உத்தம வில்லன் படத்தில் மீண்டும் அவரை வில்லனாக்கியிருக்கிறார். இப்படத்தில் 8-ம் நூற்றாண்டு, 21ம் நூற்றாண்டு என இரண்டு காலகட்டத்து நடிகராக கமல் நடிக்கும் நிலையில், 8-ம் நூற்றாண்டு கமலுடன் மோதும் வில்லனாக நாசர் நடிக்கிறாராம்.
 அதிலும் சமீபகாலத்து படங்கள் போல் இல்லாமல், எம்ஜிஆரும், நம்பியாரும் சீன் பை சீன் மோதிக்கொள்வது போன்று இருவரும் மோதிக்கொள்கிறார்களாம். அதனால் இப்படத்தில் நடிக்க 25 நாட்களுக்கு மேல் கால்சீட் கொடுத்திருக்கிறார் நாசர். அதோடு, நீண்ட நாளைக்குப்பிறகு ஒரு பெரிய வில்லன் வேடம் கிடைத்திருப்பதால், தற்போது பிரகாஷ்ராஜ் போன்ற வில்லன் நடிகர்கள் சரிவை சந்தித்திருக்கும் இந்த நேரத்தில் அந்த காலி இடத்தை தான் நிரப்பி விட வேண்டும் என்றும் வரிந்து கட்டியிருக்கிறார் நாசர்.
-
சமீபகாலமாக மாஜி நடிகைகள் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுப்பது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், ராதிகா, மீனா, ரோஜா, நதியா, அம்பிகா, ஊர்வசி, சிம்ரன், தேவயானி, மதுபாலா உள்ளிட்ட பல நடிகைகள் மீண்டும் சினிமாவில் கோலோச்சி வருகின்றனர். குறிப்பாக, தமிழ், மலையாளத்தில் அதிகமாக நடித்து வரும் இவர்களில் இப்போது கெளசல்யாவும் என்ட்ரி கொடுத்துள்ளார். தாமிரபரணிக்கு பிறகு டைரக்டர் ஹரியும், விஷாலும் இணையும் பூஜை படத்தில் கெளசல்யாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடம் கொடுத்திருக்கிறார்களாம். காலமெல்லாம் காதல் வாழ்க என்ற படத்தில் முரளியுடன் நடித்த கெளசல்யா அதன்பிறகு சொல்லாமலே, ப்ரியமுடன், ஆசையில் ஓர் கடிதம், வானத்தைப்போல என பல படங்களில் நடித்தார்.
 பின்னர் கதாநாயகி வாய்ப்பு குறைந்தபோது, ஜெயம்ரவி நடித்த சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் அவருக்கு அண்ணியாக நடித்தார். தொடர்ந்து படங்கள் இல்லாததால் சொந்த ஊரான பெங்களூருக்கு சென்று விட்ட கெளசல்யா, இப்போது மீண்டும் பூஜை படம் மூலம் தமிழுக்கு வந்திருப்பவர், வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க விருப்பம் தெரிவித்து தீவிர முயற்சி எடுத்து வருகிறார். 
 மேலும் சில நடிகைகளைப்போன்று வெட்டி பந்தா பண்ணாத இயல்பான நடிகை என்பதால், கெளசல்யாவின் மீது சில படாதிபதிகளின் பார்வை விழுந்திருக்கிறது. அதனால், அடுத்து கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக அவர் ஒரு பெரிய ரவுண்டு வரும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது.
-
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் 2வது படம் கத்தி. இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்க்கு இது 57வது படமாகும். நல்லவன், கெட்டவன் என இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடிக்கும் கத்தியில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். தமிழில் ஒரு சரியான என்ட்ரிக்காக காத்திருந்த சமந்தா, சூர்யாவுடன் அஞ்சான் படத்தில் நடித்த கையோடு இப்போது விஜய்யுடன் கத்தியில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆரம்பத்திலிருந்தே ஆக்ஷன் சம்பந்தப்பட்ட காட்சிகளையே படமாக்கி வந்த முருகதாஸ், இப்போது ரொமான்ஸ், பாடல் என்று அடுத்த கட்டத்துக்கு சென்றிருக்கிறார். அதனால், இதுவரை சமந்தாவை கண்டுகொள்ளாமல் இருந்தவர் இப்போது, அவரையும் வரவைத்து விஜய்யுடன் ரொமான்ஸ் காட்சிகளாக படமாக்கிக்கொண்டிருக்கிறார்.
 ஆரம்பத்தில் கலகலப்பு, கிளுகிளுப்பு என்று காட்சிகளை நகர்த்தியவர், தற்போது ஐதராபாத்தில் விஜய்-சமந்தா கலக்கல் நடனமாடும் பாடலை படமாக்கி வருகிறார். ஏற்கனவே நடனத்தில் புயலான விஜய், இந்த பாடல் காட்சியில் சமந்தாவே அசறும் அளவுக்கு சில நடன அசைவுகளில் பின்னி பெடலெடுத்து விட்டாராம். அதைப்பார்த்து சமந்தா அசந்து விட்டாராம். 
நானும் இதுவரை எத்தனையோ நடிகர்களுடன் நடனமாடியிருக்கிறேன். ஆனால் விஜய்யின் துடிப்பும், வேகமும் வேறு யாரிடத்திலும் கண்டதில்லை. மேலும், அவரைப்போலவே நாமும் அதிரடியாக நடனமாட வேண்டும் என்ற உற்சாகமும் எனக்குள் ஏற்பட்டது என்கிறார்.
-
கடந்த கால நடிகைகளுக்கு ரஜினியுடன் ஒரு படத்திலேனும் நடிக்க வேண்டும் என்று இருந்து வந்த கனவு இப்போது, அப்படியே அஜீத் பக்கம திரும்பி விட்டது. என்றாலும், ரஜினி என்ற அந்த ஒரு வார்த்தைக்கு இருக்கிற ஈர்ப்பு இன்னமும் நடிகைகளுக்கிடையே இருக்கத்தான் செய்கிறது. அதிலும் குக்கூ என்ற படத்தில் நடித்துள்ள மலையாள வரவு நடிகை மாளவிகா, ரஜினியின் தீவிரமான ரசிகையாம். அவரது ஸ்டைலான நடிப்பு அவருக்கு ரொம்ப பிடிக்குமாம். அப்படிப்பட்டவர், சமீபத்தில் தான் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுக்க சென்றிருநதபோது, அதே சேனலுக்கு ரஜினியும் பேட்டி கொடுக்க வந்திருக்கிறார் என்ற செய்தி காதுக்கு வந்ததும் துள்ளிக்குதித்து விட்டாராம். 
ரஜினியை டிவியில் பார்த்தாலே குதூகலிக்கும் நடிகைக்கு, அவரும் தான் இருக்கிற சேனலுக்கு வந்திருக்கிறார் என்றதும் தான் கொடுத்துக்கொண்டிருந்த பேட்டியை பாதியில் நிறுத்தி விட்டு ரஜினியை காண ஆவலோடு ஓடினாராம். ஆனால், ரஜினி பேட்டி அளிக்கும் ஸ்டுடியோவுக்குள் அதிகமான நபர்கள் அனுமதிக்கப்படவில்லையாம். 
இருப்பினும் ரொம்ப தூரத்தில் நின்றபடியே அவரை பார்த்து ரசித்தாராம் மாளவிகா. அதோடு, அவர் பேட்டி அளித்துவிட்டு செல்லும் வரைக்கும் அங்கே நின்று கொண்டிருந்தவர் அவர் செல்லும்போது அருகில் வந்து ரஜினியை பார்த்து மகிழ்ந்தாராம். தமிழ் சினிமாவுக்கு வந்து ரஜினியுடன் நடிக்கிறேனோ இல்லையோ அவரை பக்கத்தில் நின்று பார்த்து விட்டேன். அந்த ஒரு திருப்தி போதும் என்று தனது மகிழ்ச்சியை தெரிவித்துக்கொண்டிருக்கிறார்
-
இது கதிர்வேலன் காதல் படத்தில் நடித்தபோது நயன்தாராவை தனது ஆஸ்தான நாயகி போன்று பில்டப் கொடுத்தார் உதயநிதி. எனது முதல் படமான ஒரு கல் ஒரு கண்ணாடியில் நடிக்கவே அவரைத்தான் அழைத்தோம். ஆனால் அப்போது அவர் நடிக்கிற மூடில் இல்லாததால்தான் ஹன்சிகாவை புக் பண்ணினோம் என்றுகூட சொன்னார். அதோடு தனது மூன்றாவது படமான நண்பேன்டா படத்திற்கும் அவரையே புக் பண்ணியவர் இனி எனது படங்களில் அதிகமாக நயன்தாராதான் நடிப்பார் என்றும் சொன்னார். 
 ஆனால், இப்போது பார்த்தால், நண்பேன்டா படத்திற்கு இரண்டு வாரம் மட்டுமே கால்சீட் கொடுத்து நடித்த நயன்தாரா, சிம்பு, ஜெயம்ரவியுடன் நடிக்கும் படங்களுக்கு கால்சீட் கொடுத்து நடித்து வந்தவர், இப்போது சில தெலுங்கு படங்களுக்கும் கால்சீட்டை வாரி வழங்கி விட்டு உதயநிதி படத்திற்கு கேட்ட நேரத்தில் கால்சீட் கொடுக்காமல் டீலில் விட்டுக்கொண்டிருக்கிறாராம். இதனால் அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு செல்ல முடியாமல் நின்று கொண்டிருக்கிறார்கள்.
 அதோடு, ஏற்கனவே நண்பேன்டா படத்தில் நடிக்க காத்திருநத காஜல்அகர்வாலை கழட்டிவிடடுவிட்டு, நயன்தாராவை கமிட் பண்ணியதை நினைத்து வருத்தத்தில் இருக்கிறாராம் உதயநிதி. ஆக, இதன்பிறகு உதயநிதியின் படங்களில் நயன்தாரா இருக்க மாட்டார் என்று தெரிகிறது
-
தெய்வத்திருமகள் படத்திற்கு பிறகு விக்ரம் நடித்த ராஜபாட்டை, தாண்டவம், டேவிட் என பல படங்கள் வரிசையாக அவருக்கு தோல்வியை கொடுத்தன. அந்த சமயத்தில் கரிகாழன் போன்ற சில படங்கள் ஆரம்பிக்கப்பட்டபோது பிரச்னைகளில் சிக்கியதால் முடக்கப்பட்டன. இதனால் அடுத்தகட்டததுக்கு தாவ முடியாமல் அவர் தடுமாறிக்கொண்டு நின்ற நேரமதான் ஐ படத்துக்கு அழைப்பு விடுத்தார் ஷங்கர். அதனால், மற்ற படங்களை அப்படியே மறந்து விட்டு ஷங்கர் படத்திற்காக தன்னை தயார்படுத்தினார்.
 ஒவ்வொரு கெட்டப்புகளுக்கேற்பவும் தன்னை முழுசாக மாற்றிக்கொண்டு நடித்து வந்தவர், புதிய படங்களுக்கான கதைகள் கேட்ககூட மறுத்து வந்தார். ஆனால், இப்போது ஐ படப்பிடிப்பு முடிந்து விட்டதால் அடுத்து நடிப்பதற்காக சில டைரக்டர்களிடம் கதை கேட்டு வருகிறார். ஆனபோதும், சில படங்களில நடிக்க சம்மதம் சொல்லியிருக்கும் விக்ரம், இன்னமும் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளாமல் காலதாமதம் செய்து வருகிறார். 
என்ன காரணம் என்று கேட்டவர்களிடத்தில், ஐ படத்தை ரொம்ப எதிர்பார்க்கிறேன். மேலும், பல படங்கள் ஓடாததால் எனது சம்பளமும் இறங்கி விட்டது. அதனால் ஐ படத்தின் ரிலீசுக்குப்பிறகுதான் புதிய படங்களில் நடிப்பதற்கான சம்பளம் பேசுவேன் என்று கூறிக்கொண்டிருக்கிறார். ஆக, ஐ படத்தின் வெற்றியை பொறுத்து விக்ரமின் படக்கூலி கடுமையாக எகிறும் என்று தெரிகிறது.
-
சமீபத்தில் வெளியான நெடுஞ்சாலை படத்தில் நடித்திருப்பவர் ஷிவதா. நெடுஞ்சாலை படத்திற்காக இரண்டு பட வாய்ப்புகளை தவிர்த்தேன் என்கிறார் மேலும் அவர் கூறியதாவது: நெடுஞ்சாலை எனது முதல் படம் என்று மீடியாக்களில் எழுதி வருகிறார்கள். அது தவறு நெடுஞ்சாலைக்கு முன்பு மலையாளத்தில் பாசில் சார் இயக்கிய லிவிங் டூ கெதர் படத்தில் நடித்து விட்டேன். அந்தப் படத்தை பார்த்துவிட்டுதான் கிருஷ்ணா சார் நெடுஞ்சாலை படத்துக்கு அழைத்தார். நெடுஞ்சாலையின் கதை அற்புதமானது. மங்கா கேரக்டர் என் மனசுக்கு பிடித்த கேரக்டர், அதனால் அந்தப் படம் முடியும் வரை வேறு படங்களில் நடிக்ககூடாது என்று முடிவு செய்தேன். 
இரண்டு பட வாய்ப்புகளை தவிர்த்தேன். நெடுஞ்சாலை இரண்டு வருடங்கள் தயாரிப்பில் இருந்தது. பொறுமையாக காத்திருந்து நடித்தேன். 6 மாதங்கள் வரை பயிற்சி எடுத்தேன். படத்தில் மலையாள பெண் கேரக்டர் என்பதால் நானே டப்பிங் பேசியிருக்கிறேன். இப்போது படம் ரிலீசாகி என் நடிப்பை எல்லோரும் பாராட்டும்போது சந்தோஷமாக இருக்கிறது. 
இனி அடுத்த படங்களில் நடிக்க தயாராகிவிட்டேன். தீவிரமாக கதை கேட்டு வருகிறேன். இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று எந்த வரைமுறையும் வைத்துக் கொள்ளவில்லை. கேரக்டருக்கு என்ன தேவையோ அப்படி நடிப்பேன் என்கிறார் ஷிவதா.
-
தமிழில் வாமணன் படத்தில் அறிமுகமானவர் ப்ரியா ஆனந்த். வாமணன் வெற்றி பெறாததால் ப்ரியாவுக்கும் பெரிதாக சான்ஸ் கிடைக்கவில்லை. தெலுங்கு படங்களுக்கு போய்விட்டார். பிறகு திடீரென இங்கிலீஸ் விங்கிலீஸ் இந்திப் படத்தில் நடித்தார். நாடோடிகள் இந்தி ரீமேக்கில் நடித்தார். அசின், ஸ்ருதி மாதிரி ப்ரியா ஆனந்தும் இந்தி நடிகையாகிவிட்டார் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென்னு எதிர்நீச்சல் மூலம் தமிழுக்கு யூ டேர்ன் அடித்து விட்டார். இப்போது வை ராஜா வை, அரிமா நம்பி, ஒரு ஊர்ல ஒரு ராஜா, இரும்பு குதிரை என ஒரே நேரத்தில் 4 படங்களில் நடித்து வருகிறார். இந்திப்பக்கம் திரும்பவில்லை. 
அது ஏன் என்பதற்கு ப்ரியா அளித்துள்ள விளக்கம்: வாமணன் சரியாக போயிருந்தால் தமிழ்ல நல்ல இடத்துல இருந்திருப்பேன். தெலுங்கு, இந்தின்னு எதிர்நீச்சல் போட்டு எதிர்நீச்சல் படம் மூலமாக இப்போ பிசியாயிட்டேன். இந்திப் படத்துல நடிக்கணுங்ற ஆசையெல்லாம் கிடையாது, இங்கிலீஷ் விங்கிலீசுக்கு ஆடிசன் நடந்தப்போ சும்மா கலந்துகிட்டேன் ஓகே ஆயிடுச்சு. அதற்கு பிறகு இந்திப் பட சான்ஸ் நிறைய வந்தது. 
ஆனால் அவர்கள் கேட்ட தேதிகளை தெலுங்கு படத்துக்கு கொடுத்திருந்தேன். அதனால நடிக்க முடியல. இப்பவும் இந்திப் படங்கள் வருது ஆனால் தமிழ் படத்துல பிசியா இருக்குறதால நடிக்க முடியல. விரைவில் இந்திப் படம் ஒன்றில் நடிப்பேன். அதுக்கான பேச்சு வார்த்தை முடிஞ்சிருக்கு. அவர்களே முறைப்படி அறிவிப்பாங்க. என்கிறார் ப்ரியா.
-
இளையராஜா துவங்க இருக்கும் ரசிகர்மன்றத்திற்கு அவரது வாரிசும், பிரபல பாடகியுமான பவதாரணி தலைவராகிறார். இசைஞானி இளையராஜா சினிமாவுக்கு வந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இளையராஜாவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களை ஒரு குடையின் கீழ் இணைக்க அவர் முடிவு செய்திருக்கிறார். இதற்காக இளையராஜா ரசிகர் மன்றம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. வருகிற ஏப்ரல் 5ந் தேதி மதுரை தமுக்கம் மைதனாத்தில் நடக்கும் விழாவில் இது முறைப்படி துவக்கி வைக்கப்பட இருக்கிறது. முன்னதாக இந்த ரசிகர் மன்றத்தின் தலைவராக இளையராஜாவின் மகனும், பிரபல இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜா செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 
இந்நிலையில், கார்த்திக் ராஜாவுக்கு நிறைய பணிகள் இருப்பதால் அவரால் அந்த பொறுப்பு வகிக்க முடியாத சூழல் உள்ளது. இளையராஜா, எவ்வளவோ சொல்லியும் கார்த்திக் ராஜா தலைவர் பொறுப்பு வகிக்க மறுத்துவிட்டார். கார்த்திக் பதிலாக யுவனிடமும் பேசி பார்த்துள்ளனர்.
 ஆனால் அவரும் படங்களின் இசையில் பிஸியாக இருப்பதால் மறுத்துவிட்டார். அதனால் இவர்களுக்கு பதில் அவர்களது சகோதரியான பவதாரணி தலைவராக பொறுப்பேற்கிறார். மதுரையில் நடக்கும் இசை நிகழ்ச்சியின் போது இதற்கான அறிவிப்புகள் வெளியாக இருக்கின்றன. இதுகுறித்து பவதாரணி கூறுகையில், அப்பாவின் ரசிகர் மன்றம் மூலம் நிறைய நற்பணிகளை செய்ய உள்ளோம்.
 முதற்கட்டமாக பண்ணபுரத்தில் பள்ளிக்கூடம் ஒன்றை கட்ட இருக்கிறோம். தொடர்ந்து எங்களது ஜீவா அறக்கட்டளை சார்பிலும், அப்பாவின் ரசிகர் மன்றம் மூலம் நிறைய நல்ல காரியங்களை செய்ய இருக்கிறோம். தற்போது வரை சுமார் 1 கோடிக்கும் அதிகமானபேர் அப்பாவின் ரசிகர் மன்றத்தில் இணைந்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
-
மலையாள சினிமாவின் அனைத்து ரெக்கார்டுகளையும் உடைத்து எறிந்துவிட்டு 100 நாளை கடந்து விட்டது த்ரிஷ்யம். மோகன்லால், மீனா நடித்த இந்தப் படம் 150 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. இதில் 60 தியேட்டர்களில் தொடர்ந்து ஒடி 100 நாட்களை கடந்திருக்கிறது. சென்னை, பெங்களூரு, புனே, மும்பையில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்களிலும் 100 நாளை கடந்திருக்கிறது. கேரள தியேட்டர்களில் மட்டும் 40 கோடி வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் 10 கோடி வசூலித்துள்ளது. 
தொடர்ந்து ஷிப்டிங் தியேட்டர்களிலும் ஓடி வசூலைக் கொட்டிக் கொண்டிருக்கிறது. தொலைக் காட்சி உரிமம், ரீமேக் உரிமம் அனைத்தையும் சேர்த்தால் த்ரிஷ்யத்தின் வியாபார மதிப்பு 100 கோடியை எட்டும் என்கிறார்கள். இது மலையாள சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனை. 
 த்ரிஷ்யம் தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி மொழிகளில் ரீமேக் ஆகிறது. ஒரே நேரத்தில் அதிக மொழிகளில் ரீமேக் ஆகும் மலையாளப்படமும் த்ரிஷ்யம்தான்.
-
சந்தோஷ் சிவன் இயக்கியுள்ள 'இனம்' படத்திற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. சிங்களர்களுக்கு ஆதரவாக படம் எடுக்கப்பட்டுள்ளதாக எதிர்ப்பு எழுந்துள்ளநிலையில், தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் 'இனம்' படத்திற்கு ஆதரவாக சில கருத்துக்களை வெளியிட்டது. திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் திரைப்படங்களை உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் தமிழர்கள் புறக்கணிக்க முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதை கருத்தில் கொண்டு இனம் படத்திலிருந்து ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கி விட்டதாக திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் லிங்குசாமி தெரிவித்திருக்கிறார்.. 
 “இலங்கையில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம் தமிழர்களின் துன்பங்களையும், துயரங்களையும் உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே 'இனம்' திரைப்படத்தை வாங்கி வெளியிட்டோம். இந்நிலையில் சில முரண்பாடான கருத்துக்கள் உருவானதைத் தொடர்ந்து 'இனம்' படத்தை தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க உறுப்பினர்களுக்கும், சில தமிழ் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் திரையிட்டுக் காட்டினோம்.
 படத்தைப் பார்த்த பிறகு தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கமும், தமிழ் அமைப்பைச் சேர்ந்தவர்களும் கேட்டுக் கொண்டதன்படி கீழே குறிப்பிட்டுள்ள,

 1. பள்ளிக்கூடக் காட்சி 

 2. புத்தமதத் துறவி தமிழ்க் குழந்தைகளுக்கு மாதுளம்பழம் கொடுக்கும் காட்சி

 3. சிங்கள ராணுவத்தான் குழந்தை போட்டோ வைத்திருக்கும் காட்சி 

 4. தலைவர் கொல்லப்பட்டார் என்ற ஒரு காட்சியின் வசனம் 

 5. படத்தின் இறுதியில் காட்டப்படும் கார்டில் 38,000 பேர் கொல்லப்பட்டார்கள் 

என்ற தகவல், என்கிற ஐந்தும் படத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன், ” என்று குறிப்பிட்டுள்ளார் லிங்குசாமி. இதை முதலிலேயே செய்திருந்தால் இத்தனை பிரச்சனை வந்திருக்காதே..
-
பிரபல நடிகை சீதாவின் தந்தை பி.எஸ்.மோகன்பாபு வயது 76 அவர் சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த அவர் இன்று அதிகாலை மூன்று மணியளவில் மாரடைப்பால் காலமானார். இறந்த மோகன்பாபு அவர்களுக்கு பி.எஸ்.சந்திராவதி என்ற மனைவியும் பாண்டு, துஷ்யந்த் என்ற இரண்டு மகன்களும் சீதா என்ற ஒரு மகளும் உள்ளனர். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள புஷ்பா காலனியில் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப் பட்டுள்ளது.
 பின்பு இறுதி சடங்குகள் இன்று மாலை 3.30 மணியளவில் போரூரில் உள்ள மின்மயானத்தில் நடைபெற உள்ளது.
-
தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தின் மகனான சுப்பு பஞ்சு, 'அரசி' தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிகராக அறிமுகமானவர். 2008 ஆம் ஆண்டு வெளிவந்த 'சரோஜா' படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் நடிகராக அறிமுகமான சுப்பு பஞ்சு, தொடர்ந்து 'பாஸ் (எ) பாஸ்கரன்' படத்தில் ஆர்யாவின் அண்ணனாக நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் யதார்த்தமாக நடித்து தமிழ் சினிமாவில் தன்னை ஒரு சிறந்த குணச்சித்திர நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டார். 
அதையடுத்து “மங்காத்தா, கலகலப்பு, மாலைப் பொழுதின் மயக்கத்திலே, சென்னையில் ஒரு நாள், சேட்டை, பட்டத்து யானை, தலைவா, நவீன சரஸ்வதி சபதம், பிரியாணி, சமீபத்தில் வெளிவந்த நிமிர்ந்து நில்' உட்பட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். 
தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். நடிகராக மட்டுமல்லாமல் அவருடைய அருமையான குரல் மூலம் 'வாய்ஸ் ஆக்டர்' ஆகவும் சிவாஜி, கந்தசாமி படங்களில் பின்னணிக் குரல் கொடுத்து 'எங்கேயோ கேட்ட குரல்' மாதிரி இருக்கிறதே என அவரைப் பற்றி பேச வைத்தார். 'சிவாஜி' படத்தில் வில்லனாக நடித்த சுமன், 'கந்தசாமி' படத்தில் வில்லனாக நடித்த முகேஷ் திவாரிக்கும் அவர்களே பேசியது போன்ற பின்னணிக் குரலைக் கொடுத்தார்.
 தற்போது, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில், இந்தியா முழுவதும் மே 1ம் தேதி வெளிவர இருக்கும் 'தி அமேசிங் ஸ்பைடர் மேன் 2' ஹாலிவுட் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ள 'ஜேமி ஃபாக்ஸ்'-க்கு பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார் சுப்பு பஞ்சு. 2012 ஆம் ஆண்டு வெளிவந்த 'தி அமேசிங் ஸ்பைடர்மேன்' படத்தின் அடுத்த பாகமாக வெளிவர உள்ள 'தி அமேசிங் ஸ்பைடர்மேன் 2' திரைப்படம் உலக அளவில் மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 இத்திரைப்படம் 2டி, 3டி, ஐமேக்ஸ் 3டி மற்றும் ஆரோ 11.1, டால்பி அட்மாஸ் தொழில்நுட்பங்களில் திரையிடப்பட உள்ளது. 'மிகப் பிரம்மாண்டமான ஹாலிவுட் படமான 'தி அமேசிங் ஸ்பைடர்மேன் 2' படத்தில் மிக முக்கிய கதாபாத்திரம் ஒன்றுக்கு பின்னணி குரல் கொடுத்தது மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்துப் பார்க்கும் படமாக இந்த படம் அமையும். ஜேமி ஃபாக்ஸ் நடித்துள்ள கதாபாத்திரத்திற்கேற்ப ஏற்ற, இறக்கங்களுடன் இருக்கிற என்னுடைய பின்னணிக் குரலும் இந்தப் படத்தில் பேசப்படும் விதத்தில் இருக்கும், ” என ஹாலிவுட் படத்தில் குரல் கொடுத்ததைப் பற்றி மகிழ்ச்சி பொங்கக் கூறுகிறார் சுப்பு பஞ்சு.
-
முன்பெல்லாம் நாடகங்களில் நடித்து நடிப்பு பயிற்சி பெற்ற பிறகே திரைப்படங்களில் நடிக்க வருவார்கள். எம்ஜிஆர், சிவாஜி போன்ற ஜாம்பவான்கள் சினிமாவுக்கு வந்தது அப்படித்தான். இன்றைக்கு காலம் மாறிப்போச்சு. யார் வேண்டுமானாலும் ஹீரோவாகலாம் என்ற நிலை. ஆனாலும், நாடகங்களில் நடித்து முறையாக ஏழு ஆண்டுகள் பயிற்சி பெற்று சினிமாவுக்கு வந்துள்ளார் நெடுஞ்சாலை படதத்தின் நாயகனான ஆரி. மேஜிக் லாந்தர்ன், தியேட்டர் நிஷா மற்றும் இன்லேன்ட் தியேட்டர்ஸ் போன்ற நாடகக் குழுக்களில் நடித்த இவர், இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் தாமிரா இயக்கத்தில் 2010-ல் ரெட்டைச் சுழி படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர். 
இந்திய சினிமாவின் சிகரங்களான பாலச்சந்தர் மற்றும் பாரதிராஜாவுடன் நடித்த பெருமைக்குரியவர். பிரகாஷ் ராஜ் தயாரித்த இனிது இனிது காதல் இனிது படத்தில் நடித்த புதுமுகங்களுக்கு நடிப்புப் பயிற்சி கொடுத்தவர் ஆரிதான். இதுபோல பல புதுமுகங்களுக்கு இவர் பயிற்சி அளித்துள்ளார். இவர் ஒரு ஃபிட்னஸ் பயிற்சியாளரும் கூட.
 நடிகர்களை வயதுக்கேற்ற தோற்றத்துக்குக் கொண்டு வருவதில் ஸ்பெஷலிஸ்ட். கற்றது தமிழில் ஜீவா, மிருகம் படத்தில் ஆதி, சுப்பிரமணியபுரம் படத்தில் சசிகுமார், ஆயிரத்தில் ஒருவன் பார்த்திபன், யோகியில் அமீர் ஆகியோருக்கு இந்த ஃபிட்னெஸ் மற்றும் வயதுக்கேற்ற தோற்றம் கொண்டு வந்தவர் ஆரிதான். இதுதவிர ஆடும் கூத்து படத்திலும் ஆரி நடித்துள்ளார்.
 2011-ல் மாலைப் பொழுதின் மயக்கத்திலே படத்தில் நாயகனாக நடித்தார் ஆரி. அடுத்து அவர் நடித்த படம்தான் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியாகியுள்ள நெடுஞ்சாலை. ஆரியின் நடிப்பும் விறுவிறுப்பான கதையோட்டமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. திரையுலகில் ஆரி எதிர்ப்பார்த்த அவருக்கான இடத்தை இந்த நெடுஞ்சாலை பெற்றுத் தந்துள்ளதாகவே இயக்குநர்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.
-
கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் விரைவில் தொடங்கயிருக்கிறது. ஆனால், அப்படத்திற்கான வேலைகள் தொடங்கப்பட்டதில் இருந்தே சில முன்னணி நடிகைகளிடம் கால்சீட் கேட்டு வந்தார் கெளதம். ஆனால் அவர் எதிர்பார்த்த நடிகைகளை விட, எதிர்பார்க்காத த்ரிஷா உள்ளிட்ட சில நடிகைகளே கால்சீட் கொடுக்க நான் நீ என்று முட்டி மோதிக்கொண்டிருந்தார்கள். இதனால், த்ரிஷா தனது விண்ணைத்தாண்டி வருவாயா ஹிட் படத்தில் நடித்தவர் என்பதால் செண்டிமென்ட் கருதி அவரை இரண்டில் ஒரு கதாநாயகியாக்க நினைத்தார். 
ஆனால், அஜீத்துடன் அவர் நடித்த ஜீ, கிரீடம் என இரண்டு படங்கள் தோல்வியடைந்த செண்டிமென்டும் இருப்பதால், இந்தமுறை ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று த்ரிஷாவை தள்ளி வைத்துவிட்டார். அதற்கடுத்துதான், அஜீத்துடன் இதுவரை ஜோடி சேராத நடிகைகளாக பட்டியலிட்ட கெளதம்மேனன், அனுஷ்காவிடம் பேசினார்.
 அஜீத் படம் என்பதால் தெலுங்கில் பிசியாக நடித்து வந்தபோதும், எப்படியாவது கால்சீட் தந்து விடுகிறேன் என்று நம்பிக்கை வாக்குறுதி அளித்தார். அதனால், ஒரு கதாநாயகி ஓ.கே, அடுத்து இன்னொரு நாயகியாக யாரை கமிட் பண்ணலாம் என்று பாலிவுட் பக்கம் அலைந்து திரிந்து கொண்டிருந்தார் கெளதம்.
 ஆனால், இப்போது அஜீத் தரப்பே முன்வந்து, எதற்கு பாலிவுட் நடிகை, அதான் ஐ படத்தில் நடித்துள்ள ஹாலிவுட் நடிகை எமிஜாக்சன் இருக்கிறாரே என்று கெளதமுக்கு எடுத்துக்கொடுத்துள்ளனர். அதனால், என்ன சம்பளம் கேட்டாலும் கொடுத்து எமியை புக் பண்ணி விடுவது என்று அவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் கெளதம்மேனன்.
 ஆக, தாண்டவம் படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்த அனுஷ்கா-எமி ஜாக்சன் ஆகிய இருவரும் மீண்டும் அஜீத்துடன் இணைகின்றனர்
-
கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று எந்த டைரக்டர் லட்சுமிமேனனைப்பார்த்து சொன்னாலும், கோபக்கனல் பறக்க அவர்களைப்பார்த்து கண்களை உருட்டுவார். அதில் தெரியும் ஆவேசம் டைரக்டர்களை அடுத்த வார்த்தை பேச விடாமல் செய்து விடும். அந்த அளவுக்கு கவர்ச்சிக்கு தான் ஜென்ம எதிரி போன்று தன்னை வெளிப்படுத்தி வந்தார் லட்சுமிமேனன். ஆனால், தற்போது விஷாலுடன் நடித்துள்ள நான் சிகப்பு மனிதன் படத்தில், இன்னொரு நாயகியாக நடிக்கும் இனியாவின் கவர்ச்சி தாக்கம் அதிகமாக இருப்பதால், தன்னை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியாக, கவர்ச்சிக்கதவுகளை ஓப்பன் பண்ணி விட்டிருக்கிறார் லட்சுமிமேனன். 
அதன் எதிரொலியாக பாண்டியநாடு படத்தை விடவும் விஷாலுடன் ஓவர் நெருக்கம் காட்டியிருப்பவர், படம் முழுக்க மாடர்ன் காஸ்டியூமில் கலக்கியிருக்கிறாராம். அதோடு, விஷாலுடன் ஒரு காட்சியில் தண்ணீருக்கு அடியில் முங்குவது போன்று ஒரு செமத்தியான காட்சி உள்ளதாம்.
அதில் லட்சுமிமேனனின் கட்டுப்பாட்டையும் மீறி அவரது கவர்ச்சி வெளிப்பட்டுள்ளதாம். இந்த செய்தி கோலிவுட்டில் வேகமாக கசிந்ததையடுத்து, லட்சுமிமேனனும் கவர்ச்சி கட்சியில் சேர்ந்து விட்டார் என்று, அவரை மனதில் கொண்டு கதை பண்ணியிருக்கும் இயக்குனர்கள், இப்போது சில கிளாமர் காட்சிகளையும் எக்ஸ்ட்ராவாக ஸ்கிரிப்டில் இணைத்து வருகிறார்கள்.
-
விஷாலை வைத்து ஹரி இயக்கும் பூஜை படத்தில் சந்தானத்துக்கு இடமில்லை. படத்தின் பிரதான காமெடியனாக சூரியை ஒப்பந்தம் செய்திருக்கிறார். சிங்கம் - 2 படத்தில் சந்தானம்தான் காமெடியனாக நடித்தார். அப்படத்தில் இடம்பெற்ற அவரது காமெடி சிங்கம்-2 படத்தின் வெற்றிக்கும் பெரிதும் உதவிகரமாக அமைந்தது. அப்படி இருந்தும் தன் அடுத்தப்படமான பூஜையில் சந்தானத்துக்கு கல்தா கொடுத்துவிட்டாரே ஹரி? என்ன காரணம்? என்று விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் இதோ... சிங்கம் -2 படத்தில் நடித்தபோது இயக்குநர் ஹரியை அநியாயத்துக்குப்படுத்தி எடுத்துவிட்டாராம் சந்தானம்.
+ சொன்ன நேரத்தில் படப்பிடிப்புக்கு வராமல் இருந்தது, காமெடி வசனங்களை என் குழுவினரை வைத்துத்தான் எழுதுவேன் என்று கண்டிஷன் போட்டது, படத்தின் புரமோஷனுக்கு அழைத்தும் வராமல் முரண்டு பிடித்தது என்று சந்தானம் கொடுத்த டார்ச்சரினால் ஏகத்துக்கும் ஹரிக்கு பிபி எகிறியிருக்கிறது. 
 அப்போது சூர்யாவின் ஆதரவும் சந்தானத்துக்கு இருந்ததால் ஹரியால் அப்போது தன் எதிர்ப்பைத் தெரிவிக்க முடியவில்லை. அதனால் சந்தானம் விஷயத்தில் அப்போது தன் கடுப்பை கட்டுப்படுத்தி வைத்திருந்தவர் இப்போது பூஜை படத்தில் சூரியை காமெடியனாக்கிவிட்டார். பூஜை படத்தில் சந்தானத்தை கழற்றிவிட்டு சூரியை ஒப்பந்தம் செய்ததற்கு விஷாலின் பரிபூரண ஆசியும் உண்டாம்.
-
சில தினங்களுக்கு முன் தணிக்கைக் குழுவினருக்கு கோச்சடையான் படத்தை திரையிட்டுக்காட்டினார் சௌந்தர்யா ரஜினிகாந்த். படத்தைப் பார்த்தத் தணிக்கைக் குழுவினர் கோச்சடையான் படத்துக்கு யு சான்றிதழ் வழங்கினார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால்… கோச்சடையான் படத்தின் ரீ ரெக்கார்டிங் பணியே இன்னும் தொடங்கப்படவில்லை. ஏப்ரல் மாதம்தான் தொடங்கப்படவிருக்கிறது. கோச்சடையான் படத்தின் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் இறுதிக்கட்ட பணிகள் சீனாவில் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகளை விரைந்து முடித்து அவுட்புட்டை வாங்கி வருவதற்காக சீனாவுக்குச் சென்றிருக்கிறார் சௌந்தர்யா ரஜினிகாந்த். சீனாவிலிருந்து அவர் வந்த பிறகே ரீ ரெக்கார்டிங் பணிகளை தொடங்க இருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். இந்தநிலையில் கோச்சடையான் படத்துக்கு எப்படி தணிக்கை சான்றிதழ் கிடைத்தது என்பதுதான் திரையுலகில் பலரும் கேட்கும் கேள்வியாக இருக்கிறது.
 தணிக்கையின்போது கடைசி நேரத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு அதனால் கோச்சடையான் படத்தின் வெளியீட்டில் சிக்கல் வரக்கூடாது என்று நினைத்தாராம் ரஜினி. எனவே முன் எச்சரிக்கை காரணமாக டம்மியாக ஒரு மியூஸிக் ட்ராக்கைப் பயன்படுத்தி தணிக்கைக் குழுவினருக்கு கோச்சடையான் படத்தைப் போட்டுக்காட்டினார்களாம். 
 கோச்சடையான் படத்தின் ரிலீஸ் பற்றி லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா? மே 1 ஆம் தேதி படம் வெளியாவது உறுதி. தியேட்டர்களை புக் பண்ண ஆரம்பித்துவிட்டனர்.
-
முன்னணி ஹீரோக்களை பொறுத்தமட்டில் வளர்ந்து வரும் டைரக்டர்கள் அவர்களிடம் கதை சொன்னால், மொத்த கதையையும் கேட்டு விட்டு, பின்னர் தாங்கள் முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை எப்படி எப்படி வைக்கலாம் என்று ஒரு புதிய ஸ்கிரிப்ட்டையே சொல்லிவிடுவார்கள். அதேசமயம், முன்னணி டைரக்டர்கள் என்றால் மட்டும் தங்களது தலையீடை குறைத்துக்கொள்வார்கள். ஆனால், கெளதம்மேனன், பாலா போன்றவர்களிடம் எதுவுமே சொல்ல முடியாது. காரணம், அவர்கள் எந்த ஹீரோக்களிடமும் முழுக்கதையையும் சொல்வதே இல்லை. இந்தநிலையில், சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த சிவகார்த்திகேயனிடம், நீங்கள் கதையை எப்படி செலக்ட் பண்ணுகிறீர்கள்? என்று மீடியாக்கள் கேள்வி எழுப்பியபோது, கூடுமான வரை கதைகளில் நான் திருத்தமெல்லாம் செய்வதில்லை.
 கதையை கேட்டுவிட்டு எனக்கு பிடித்தால் ஓ.கே சொல்வேன். இல்லையேல் பிடிக்கவிலலை என்பதை நேரடியாகவே சொல்லிவிடுவேன் என்றார். குறிப்பாக, நிஜத்தில் நான் தண்ணி அடிப்பதில்லை, அதேபோல் புகைப்பிடிக்கும பழக்கமும் எனக்கு கிடையாது. அதற்காக நான் நடிக்கும் படங்களிலும் அந்த மாதிரி காட்சியில் நான் நடிக்க மாட்டேன் என்று சொல்ல முடியாது.
 அப்படி சொன்னால், கதைக்கு தேவைப்படுகிறது வைத்திருக்கிறோம் என்பார்கள். அதனால்தான் எனது படங்களில் டாஸ்மாக் பாட்டு இடம் பெற்றாலும் நான் கண்டுகொள்வதில்லை என்றுசொன்ன சிவகார்த்திகேயன், ஒருவேளை எதற்காக இந்த மாதிரி காட்சியெல்லாம் வைக்கிறீர்கள். படம் பார்க்கும் ரசிகர்களை தவறான வழிக்கு திருப்புவது போல் இருக்குமே என்று நான் சமூக அக்கறையுடன் சொன்னால், சிவகார்த்திகேயன் கதையில் தலையிடுகிறார் என்பார்கள். 
அதன்காரணமாக, பீல்டில் கெட்ட பேர்தான் ஏற்படும். அதனால்தான் நான் உண்டு என் வேலை உண்டு என்றிருக்கிறேன் என்கிறார் சிவகார்த்திகேயன்.
-
கடந்த சட்டமன்றத் தேர்தலில் பணத்தை பெற்றுக் கொண்டு தி.மு.க.வுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்தார் வடிவேலு. தி.மு.க. தோற்று அ.தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது வடிவேலுவுக்கு ஆன்ட்டி க்ளைமாக்ஸ் ஆனதால், திரையுலகிலிருந்து ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டப்பட்டார். ஏறக்குறைய மூன்று வருடங்களை நெருங்கிவிட்டநிலையிலும் ஆளும்கட்சியிடமிருந்து வடிவேலுவுக்கு பாவமன்னிப்பு கிடைக்கவில்லை. அ.தி.மு.க. அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் மதுரை ஏரியாவைச் சேர்ந்த அமைச்சர்கள் பலர் தனிப்பட்டமுறையில் வடிவேலுவுக்கு நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள்.
 அவர்களின் நெருக்கத்தைப் பயன்படுத்தி எப்படியாவது தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துவிட கடந்த சில வருடங்களாகவே முயற்சி செய்தார் வடிவேலு. அவரது இந்த முயற்சி நிறைவேறாமல் இழுத்துக்கொண்டே போக, எப்படியும் ஜெயலலிதாவை சந்திக்க வைத்துவிடுவதாக அமைச்சர்கள் வடிவேலுவுக்கு ஆறுதல் சொல்லி வந்தனர். அவர்கள் சொன்னதை நம்பித்தான், ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன் படத்திலேயே நடிக்க முடிவு செய்தார் வடிவேலு.
 தற்போது ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. விரைவில் இசைவெளியீட்டுவிழா நடைபெறவிருக்கிறது. படத்தின் ரிலீஸ் தேதியும் நெருங்கிவிட்ட நிலையிலும் கூட ஜெயலலிதாவை சந்திக்க அப்பாயின்ட்மெண்ட் கிடைக்கவில்லை. எனவே, ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை ஆளும்கட்சி டி.வி.க்கு இலவசமாகக் கொடுக்கவும் தயாரானார்கள். அப்படி கொடுப்பதன் மூலம் ஜெயலலிதாவின் கோபத்தைக் குறைத்து, அவரின் குட் புக்கில் வடிவேலு இடம் பிடித்துவிடலாம் என்று கணக்குப் போட்டனர். 
 இந்த டீலுக்கு சேனல் தரப்பிலிருந்து பாசிட்டிவ்வான ரியாக்ஷன் வரவில்லை. எனவே மேலும் காத்திருப்பது வீண் வேலை என்று முடிவுக்கு வந்து, ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை நான்கரை கோடிக்கு வேறு ஒரு டி.வி.க்கு விற்றுவிட்டனர். இவ்விஷயத்தைக் கேள்விப்பட்ட ஆளும்கட்சி தரப்பு வடிவேலு மீது கூடுதல் கடுப்பில் இருக்கிறதாம். அச்சச்சோ…வடை போச்சே..!
-