Select Menu

Slider

Powered by Blogger.

Blog Archive

Travel

Performance

‹
›

Cute

My Place

Slider

Racing

Videos

































-
விலங்குகள் மீது அதிக அக்கறை காட்டி வருகிறாராம் ஆங்கில தேவதை எமி ஜாக்சன்.
விலங்குகள் மீது தீராத பற்று கொண்டவர் நடிகை த்ரிஷா. பூனை, நாய் உட்பட ரோட்டில் அனாதையாகத் திரியும் பல விலங்ககளை கைப்பற்றி உரிய இடங்களில் ஒப்படைக்கும் நல்ல செயலை பல வருடங்களாகச் செய்து வருகிறார். இதற்கென்றே தனியாக இருக்கும் அமைப்பான ‘பீட்டா’விலும் (People for the Ethical Treatment of Animals - PETA) நீண்ட நாட்களாக இருக்கிறார் த்ரிஷா.

தற்போது இந்த அமைப்பில் புதிதாக இணைந்திருக்கிறார் ‘ஐ’ பட நாயகி எமி ஜாக்ஸன்.

சமீபத்தில் பரபரப்பான சாலை ஒன்றில் பெட்டிக்குள் வைத்து யாரோ போட்டுச் சென்ற பூனைக்குட்டிகளைக் கைப்பற்றி தானும், சகோதரியும் அதனை வளர்த்து வருகிறார்கள்.

அதோடு, விலங்குகள் மீது அதிக அக்கறை உள்ள எமி தன்னை ‘பீட்டா’வில் இணைத்துக் கொண்டு, சமீபத்தில் ஒரு விழிப்புணர்வு விளம்பரப் படம் ஒன்றிலும் தோன்றியிருக்கிறார்.

அந்த விளம்பரத்தில் ‘‘விலங்குகளுக்கு தேவதையாக இருங்கள், விலங்குகளை வாங்காதீர்கள், அவற்றைத் தத்தெடுங்கள்’’ என்ற வாசகங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

இதுகுறித்து எமியிடம் கேட்டபோது, ‘‘வழக்கமாக நாய் அல்லது பூனைகளை வாங்க விரும்புபவர்கள் அதற்கென்று உள்ள பெட் ஷாப்களில் ஆயிரக்கணக்கில் செலவு செய்து வாங்குகிறார்கள். என்னைப் பொறுத்தவரை இது ஒரு தேவையில்லாத செலவுதான். நம் கண் எதிரேயே எவ்வளவோ விலங்குகள் ஆதரவின்றி ரோட்டில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கின்றன. அவற்றை எடுத்து வளர்ப்பதன் மூலம் அவற்றிற்கு ஆதரவு அளித்த மனத்திருப்தியும் கிடைக்கும். பணமும் மிச்சமாகும் என்று கூறியுள்ளார்.
-
மலையாள சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேரவிருக்கிறார் ராகினி நந்த்வானி. பிரசன்னா, சினேகா இருவரின் காதலுக்கும் அதைத் தொடர்ந்து திருமணத்துக்கும் அச்சாரம் போட்ட ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தை இயக்கியவர் அருண் வைத்தியநாதன். தற்போது இவர் மலையாளத்தில் ‘பெருச்சாழி’ என்ற படத்தை இயக்க உள்ளார். 

இதில் ஹீரோவாக நடிப்பவர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால். தலைவா படத்தில் இரண்டாவது கதாநாயகியாக மும்பைப் பெண்ணாக நடித்த ராகினி நந்த்வானி, மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது.
-
திருமணத்திற்கு பிறகு நடிப்பது குறித்து முடிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார் நஸ்ரியா. நடிகை நஸ்ரியாவுக்கும், இயக்குனர் பாசில் மகன் பஹத் பாசிலுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. 

 இவர்களது திருமணம் வருகிற ஆகஸ்டு மாதம் 2வது வாரத்தில் கேரளாவில் நடக்கிறது. இந்நிலையில் திருமணத்திற்கு பின்னர் நடிப்பது குறித்து நஸ்ரியா கூறுகையில், பஹத் எனக்கு நிறைய சுதந்திரம் கொடுத்துள்ளார். 

திருமணத்திற்க்கு பிறகு நான் படங்களில் நடிப்பேனா என்று எனக்கு தெரியவில்லை. தற்போது நான் ஒப்புக்கொண்ட அனைத்து படங்களில் நடித்து கொண்டு வருகிறேன்.அதை முடித்துவிட்டு பிறகு யோசிப்பேன் என்று கூறியுள்ளார்.
-
சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் இளைய தளபதி விஜய். ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்குப் பிறகு அட்லியின் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார் என கடந்த வாரம் முழுக்க செய்திகள் ரவுண்டு கட்டி அடித்தன. ஆனால், தற்போது திடீரென விஜய் படத்தை இயக்கும் அதிர்ஷ்டம் இயக்குனர் சிம்புதேவனுக்கு அடித்திருக்கிறது. 

 விஜய்யின் நீண்டநாள் மேனேஜரும், பி.ஆர்.ஓ.வுமான பி.டி.செல்வகுமார் தயாரிக்கும் படத்தையே சிம்புதேவன் இயக்க இருக்கிறார். இதற்காக சிம்புதேவன் அட்வான்ஸ் வாங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 தற்போது ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ படத்தை சிம்புதேவன் இயக்கியிருக்கிறார். இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் வேலைகள் முடிவடைந்ததும் விஜய் - சிம்புதேவன் பட வேலைகள் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
-
ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து தயாரிக்கும் படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகவிருக்கிறது.
சமீபத்தில் விஷால் பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தை விஷால் தொடங்கி, அவரே கதாநாயகனாக நடித்து, ‘பாண்டிய நாடு' படத்தை தயாரித்தார்.

சுசீந்திரன் இயக்கிய அந்த படம் வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து விஷால் பிலிம் பேக்டரி சார்பில் தனது அடுத்த படத்தை தொடங்கி இருக்கிறார்.

‘நான் சிகப்பு மனிதன்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை திரு இயக்கி வருகிறார். இந்த படத்திலும் லட்சுமி மேனன் கதாநாயகியாக நடிக்கிறார்.

வருகிற ஏப்ரல் மாதம் இந்த படத்தை திரைக்கு கொண்டுவர விஷால் திட்டமிட்டு இருக்கிறார்.

இதைத் தொடர்ந்து தனது மூன்றாவது தயாரிப்பை கடந்த மாதமே அறிவித்தார் விஷால். இந்தப் படத்தை ஹரி இயக்குகிறார். ஏற்கனவே விஷாலை வைத்து, ‘தாமிரபரணி' என்ற படத்தை இயக்கி வெற்றி பெற வைத்தவர் ஹரி.

விஷால்-ஹரி இணையும் இந்த படத்தை வருகிற தீபாவளிக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
-
நடிப்பதற்கு அவதாரம் எடுத்துள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஹைவே என்ற இந்தி படத்துக்குஇசையமைத்துள்ளார். அலியா பட்,ரந்தீப் ஹூடா ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தில் படகா கட்டி என்றஒரு பாடலையும் பாடியுள்ளார்.

 இந்த படத்தின் பாடல் கம்போசிங்கை, வீடியோ எடுத்து, படத்தை விளம்பரப்படுத்த திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் இயக்குனர் இம்தியாஸ் அலி, அதில் ரகுமானை பாடலுக்கு ஏற்ப நடிக்க வைத்து உள்ளாராம். இதை ரகுமானே இணையதளத்தில் தெரிவித்துள்ளார்.
-
விரைவில் திரைக்கு வரவிருக்கிறது விக்ரம் பிரபுவின் ‘அரிமா நம்பி’. கலைப்புலி எஸ்.தாணுவின், ‘வி.கிரியேஷன்ஸ் தயாரித்து வரும் படம், ‘அரிமா நம்பி’. விக்ரம் பிரபு, ப்ரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கும் இப்படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்குகிறார்.

 படப்பிடிப்பு முடியும் தறுவாயில் இருக்கும் இப்படத்திற்கு ‘டிரம்ஸ்’ சிவமணி இசை அமைக்கிறார். இவர் இசை அமைக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 பரவலான ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் ஓடியோ மற்றும் டிரைலரை மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார் தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ எஸ்.தாணு.
-
அலியா பட் என்னுடன் ஜோடி சேரவில்லை என்று கூறியுள்ளார் தனுஷ். கடந்த சில நாட்களாக இணைய தளங்களில் இடம் பிடித்த பரபரப்புச் செய்தி அடுத்து வெற்றிமாறன் இயக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அலியா பட் நடிக்கிறார் என்பது. 

 ஆனால் அலியாவுடன் எந்த படத்திலும் தான் நடிக்கவில்லை, வரும் செய்திகளில் உண்மையில்லை என்று தனுஷ் டுவீட் செய்து அந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

 கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அனேகன்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க முதலில் அழைக்கப்பட்டவர் அலியா பட். ஆனால் கே.வி.ஆனந்த் கேட்ட திகதிகளில் அலியா கைவசம் கால்ஷீட் இல்லாததால் ‘அனேகனி’ல் தனுஷுக்கு ஜோடியாகும் வாய்ப்பை இழந்துள்ளார். இப்போது அனேகன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஆமிரா நடித்து வருகிறார்.
-
தன் மீது புகார் கொடுத்த தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்டார் இசை அமைப்பாளர் அனிரூத். மம்முட்டி மகன் துல்கர் சல்மான், நஸ்ரியா நடிக்கும் படம் வாய் மூடி பேசவும். இப்படத்தை பாலாஜி மோகன் டைரக்டு செய்கிறார். வருண் மணியன் தயாரிக்கிறார். இவர் சமீபத்தில் இசை அமைப்பாளர் அனிரூத் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஒரு புகார் செய்தார். அதில்,எங்கள் படத்துக்கு இசை அமைப்பதாக அனிரூத் ஒப்புக்கொண்டார்.

 ஆனால் திடீரென்று இசை அமைக்க மறுத்துவிட்டார். குறிப்பிட்ட கால அளவிற்குள் பணியை அனிரூத் தொடங்காததால் படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் எங்களிடம் வாங்கிய அட்வான்ஸ் தொகையையும் அவர் திருப்பி தரவில்லை. போன் செய்தபோது அதற்கு பதில் அளிக்கவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அனிரூத் தனது செயலுக்கு தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். 

அவர் கூறும்போது,உங்களிடம் பெற்ற அட்வான்ஸ் பணத்தை தயாரிப்பாளர் சங்கம் மூலம் திருப்பி தந்துவிடுகிறேன். படத்திற்கு இசை அமைக்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன். இந்த விஷயத்தை சமாதானமாக முடித்துக்கொள்ளுங்கள். என் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன். எதிர்காலத்தில் உங்கள் படத்தில் பணியாற்ற விரும்புகிறேன். நீங்கள் தயாரிக்கும் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று அவர் கூறி உள்ளார்.
-
கவர்ச்சி நடிகை பூனம் பாண்டேவை கைது செய்ய கர்நாடக ஐகோர்ட் தடை விதித்தது. கடந்த 2011ம் ஆண்டு கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே, உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா வெற்றிபெற்றால் கிரிக்கெட் மைதானத்தில் நிர்வாணமாக தோன்றத் தயார் என்று அறிவித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பெங்களூரை சேர்ந்த எஸ்.உமேஷ் என்பவர் பூனம் மீது வழக்கு தொடர்ந்தார்.

 மத ரீதியான உணர்வுகளை காயப்படுத்தும் அளவுக்கு பூனம் பாண்டே பேட்டி அளித்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி பூனமிற்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. கடந்த புத்தாண்டு தினத்தன்று அவர் பெங்களூர் வந்தார். அப்போதும் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை.

 எனவே அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்று வரும் பிப்ரவரி 12ம் தேதிக்குள் பூனம் பாண்டேவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி 6வது அடிஷ்னல் தலைமை மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதற்கு தடை விதிக்க கேட்டு பூனம் பாண்டே கர்நாடக உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதை ஏற்று கீழ்கோர்ட்டின் கைது உத்தரவுக்கு நீதிபதி எச்.என்.நாகமோகன் தாஸ் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
காதலனை விட்டு பிரியாதே என்று தீபிகா படுகோனுக்கு தோழிகள் அட்வைஸ் தந்ததால் அவர் குழப்பத்தில் உள்ளார். கோச்சடையான் படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் தீபிகா படுகோன். பாலிவுட்டில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக திகழ்கிறார். இவரும் ரன்வீர் சிங்கும் நெருங்கிய நட்புடன் பழகி வருகின்றனர்.


 இந்த நட்பு காதலாக மலரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீபிகாவோ ரன்வீர் சிங்கை கழற்றிவிட முடிவு செய்திருக்கிறார். சமீபத்தில் இவர்கள் ஜோடியாக நடித்த ராம் லீலா படம் திரைக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் புத்தாண்டு தினத்தன்று ரன்வீர், தீபிகா இருவரும் இரவு விருந்துக்காக நட்சத்திர ஓட்டலில் சந்தித்தனர். அப்போது தீபிகாவிடம் ரன்வீர் மனம் விட்டு பேசினார். தனது காதலையும் அவரிடம் தெரிவித்தார். 

ஆனால் அதை கண்டுகொள்ளாமல் வேறு விஷயத்தைபற்றி பேசுவதற்காக பேச்சை திசை மாற்றினார் தீபிகா. இதை புரிந்து கொண்ட ரன்வீர் அத்துடன் பேச்சை முடித்துக்கொண்டார். இதையறிந்த தீபிகாவின் நெருங்கிய நண்பர் களும், தோழிகளும் அவருக்கு அறிவுரை வழங்கி உள்ளனர். ரன்வீர் உன் மீது பைத்தியமாக இருக்கிறார். அவரது காதல் உண்மையானது. 

அவர் காதலை நீ ஏற்க வேண்டும். அவரைவிட்டு பிரியக்கூடாது என்று வற்புறுத்தினர். மேலும் ஏற்கனவே தீபிகாவுடன் நெருக்கமாக இருந்த ரன்பீர் கபூர், சித்தார்த் மல்லையா, யுவராஜ் சிங், நிஹர் பாண்டியா போன்றவர்களுடான காதல் தோல்வி அடைந்ததையும் சுட்டிக்காட்டி, உனக்கு ஏற்ற காதலன் ரன்வீர் சிங்தான் என்று வலியுறுத்தினர். இதையடுத்து ரன்வீரின் காதலை ஏற்பதா? மறுப்பதா? என்ற குழப்பத்தில் தீபிகா இருப்பதாக பாலிவுட்டில் பேசப்படுகிறது.
ஹேப்பி நியூஇயர் என்ற படப்பிடிப்பின் போது பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் காயம் அடைந்தார். மும்பை புறநகரில் 5 நட்சத்திர ஓட்டலில் நடந்த படப்பிடிப்பின் போது ஷாருக்கான் காயமடைந்தார். 

காயமுற்ற ஷாருக்கான் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழ் படங்களில் கவனம் செலுத்துவதை கைவிட்டார் ஜனனி ஐயர். தமிழில் அவன் இவன், பாகன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஜனனி ஐயர். பாலா இயக்கத்தில் அவன் இவன் நடித்தபிறகு தமிழில் நிறைய பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்த ஜனனிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தேக்கடி என்ற ஒரு படம் மட்டுமே தமிழில் அவருக்கு கைவசம் உள்ளது. 

இந்நிலையில் 3 டாட்ஸ் என்ற மலையாள படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அப்படம் வெளியாகி வெற்றிபெற்றதையடுத்து அடுத்தடுத்து வாய்ப்புகள் தேடி வந்தன. மோகன்லால், பரத்துடன் கூதரா மற்றும் மோசயிலே குதிர மீனுகள் உள்பட 4 படங்களில் நடித்து வருகிறார். கோலிவுட்டில் வாய்ப்புகள் இல்லாததால் மனம் வெறுத்த ஜனனி, தமிழ் சினிமாவை கைகழுவிவிட்டு மல்லுவுட்டில் கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறார். 

 தமிழில் நய்யாண்டி படத்தில் இயக்குனருடன் ஏற்பட்ட மோதலையடுத்து தமிழ் படங்களை குறைத்துக்கொண்டு மலையாளத்தில் கவனம் செலுத்திவந்த நஸ்ரியா நாசிமுக்கு திடீரென திருமணம் முடிவாகி இருப்பதால் அவரது இடத்தை பிடிக்க ஜனனி உள்ளிட்ட மல்லுவுட் நடிகைகள் போட்டியில் குதித்துள்ளனர். கோலிவுட் டாப் ஹீரோயின்களும் நஸ்ரியா வாய்ப்புகளை தங்களை நோக்கி திருப்புவதற்கான தூது வேலைகளை தொடங்கி உள்ளனர்.
நயன்தாரா கணவரை காணவில்லை என்று ஒட்டப்பட்ட போஸ்டரால் சர்ச்சை எழுந்துள்ளது. அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் ஹீரோயினாகி விட்டார் நயன்தாரா. சிம்பு, பிரபுதேவா காதல் விவகாரம் அவரை அப்செட் ஆக்கியது. அடுத்து, ஆர்யாவுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். போதாக்குறைக்கு அவருடன் திருமணம் நடந்ததுபோல் ராஜா ராணி படத்துக்காக ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்கள். 

இதெல்லாம் முடிந்து இப்போது இன்னொரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இந்தியில் வித்யாபாலன் நடித்த படம் கஹானி. இப்படம் தமிழ், தெலுங்கில் அனாமிகா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இப்படத்துக்கு வித்தியாசமாக விளம்பரம் செய்வதற்காக, அனாமிகாவின் (நயன்தாரா) கணவரை காணவில்லை என்று பட ஹீரோவின் போஸ்டரை வரைபடம் போல் வரைந்து சென்னை முழுவதும் ஒட்டி உள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்து மக்கள் கட்சி அமைப்பு, இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கணவரை காணவில்லை என்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் நிஜமானதல்ல. 

இதுபோல் ஒட்டி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கது. அதை உடனே அகற்ற வேண்டும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பட இயக்குனர் சேகர் கம்முலா கூறும்போது, யாரையும் குழப்புவதற்காக இந்த போஸ்டர் ஒட்டப்படவில்லை. இந்தியில் இப்படம் வெளியானபோதும் இப்படித்தான் விளம்பரம் செய்தோம். போஸ்டரின் முடிவில் இந்த நபரைபற்றி தகவல் தெரிந்தால் தயாரிப்பாளரை பேஸ்புக்கில் தொடர்பு கொள்ளுங்கள் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.
-
நடிகை தற்கொலை செய்துகொண்ட வீட்டில் ஷூட்டிங் நடத்தினார் பூஜா காந்தி. கொக்கி, திருவண்ணாமலை போன்ற படங்களில் நடித்திருப்பவர் பூஜா காந்தி. இவர் கன்னடத்தில் அபிநேத்ரி என்ற படத்தில் நடித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு, கன்னட நடிகை கல்பனா காதல் தோல்வியால் மனஅழுத்தம் ஏற்பட்டு, அதிகமான தூக்க மாத்திரைகளையும், வைர துகள்களையும் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

அவரது வாழ்க்கை கதையில்தான் தற்போது பூஜா காந்தி நடித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இதை பூஜா மறுத்துவருகிறார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் இப்படத்தின் ஷூட்டிங் கர்நாடகாவில் பெல்காமில் உள்ள ஒரு வீட்டில் நடந்தது. இந்த வீட்டில்தான் கல்பனா தற்கொலை செய்துகொண்டார். 

படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அங்கு படமாக்கப்பட்டதாக பட குழு வினர் கூறினர். கல்பனா தற்கொலை செய்துகொண்டது போன்ற தற்கொலை காட்சியில் பூஜாகாந்தி நடித்ததாக தெரிகிறது. இதுபற்றி பூஜாவிடம் கேட்டபோது, பெல்காமில் கல்பனா வீட்டில் இப்படத்தின் ஷூட்டிங் நடந்தது உண்மைதான். ஷூட்டிங் நடத்த இந்த வீட்டை தேர்வு செய்ததாலேயே இது கல்பனாவின் வாழ்க்கை வரலாறு படம் என்று அர்த்தமல்ல என்றார்.
-
நடிகை சமந்தாவுக்கு ஸ்கின் அலர்ஜி ஏற்பட்டு, ரகசியமாக சிகிச்சை பெற்று வருகிறார். நடிகை சமந்தாவுக்கு ஸ்கின் அலர்ஜி ஏற்பட்டிருக்கிறது. இதனால், அவர் படப்பிடிப்பில் பங்கேற்கும்போது அதிக உஷ்ணம் உமிழும் விளக்குகள் முன் நடிக்கும் போது, அவருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. 

சூர்யாவுடன் அஞ்சான் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது அலர்ஜியால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, ஷூட்டிங்கிற்கு வருவதை சில நாள் தள்ளிப்போட்டுவிட்டு டாக்டரிடம் சென்று சிகிச்சை பெற்றார். இதில் குணம் அடைந்து மீண்டும் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். ஆனாலும், அவ்வப்போது அலர்ஜி ஏற்பட்டு முகத்தில் பருக்கள் தோன்றி அவதிப்படுவதாக கூறப்படுகிறது. 

 அஞ்சான் படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் முடிந்ததையடுத்து மீண்டும் சிகிச்சை பெற டாக்டரை அணுகி உள்ளார். ஏற்கனவே சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனையிலிருந்து வேறு மருத்துவமனைக்கு மாறி சிகிச்சை பெறுகிறாராம். 

மருத்துவமனைக்கு ஒரு நடிகை சென்றாலே, ஏதாவது கதை கட்டி விடுவார்கள் என்று பயந்து ரகசியமாக சிசிக்சை பெற்று வருகிறார் சமந்தா.
-