Slider
Powered by Blogger.
Blog Archive
-
▼
2014
(832)
-
▼
April
(43)
- மகிழ்ச்சியாக வாழ கற்று தந்தவர் இளையராஜா: பிரகாஷ்ரா...
- கோச்சடையானில் என் தந்தை நடித்தது நான் அவரது மகள் எ...
- சுஜிபாலாவுக்கு கொலை மிரட்டல் விடவில்லை: டைரக்டர் ர...
- சமந்தா அரசியல் பிரவேசம்?: மோடிக்கு ஆதரவு தெரிவித்தார்
- செக்கச்செவேர்ன்னு தக்காளி பழம் மாதிரி இருக்கு மீனா...
- சந்தானத்திற்கு 2.5 கோடியில் வீடுகட்டிக் கொடுத்த தய...
- கோச்சடையானுக்காக தெலுங்கிலும் பின்னணி பாடிய லதா ர...
- காஜல் அகர்வாலுக்கு உதயநிதி கொடுத்த இன்ப அதிர்ச்சி
- அதிர்ச்சி அணுகுண்டுகளை அள்ளி வீசிய தீபிகா படுகோனே!
- நான் சிகப்பு மனிதனில் உதட்டு முத்தக்காட்சியை நீக்க...
- தெனாலிராமன் படத்தை தடை செய்ய தலைமை செயலாளரிடம் மனு
- கோச்சடையான் வருமா? வராதா? புலம்பும் சிறுபடத் தயாரி...
- கதாசிரியர்களின் பெயரை இருட்டடிப்பு செய்த சந்தானம்!
- ஏப்ரல் 9ம் தேதி அஜீத்-கெளதம் மேனன் படம் துவக்கம் –...
- 7 மெகா வில்லன்களுடன் மோதுகிறார் ஆர்யா!
- எல்லா கதாநாயகர்களுடனும் முத்தக்காட்சியில் நடிக்க த...
- கனடாவில் ராஜபக்சே ஆதரவாளர்கள் விழாவில் திரிஷா பங்க...
- விஜய்யின் எளிமையை வெளிச்சம் போட்டு காட்டிய சமந்தா!
- கில்லி விஜய் பாணிக்கு மாறிய சித்தார்த்!
- சினிமாவில் கிங்காக வலம்வருவேன்! - சொல்கிறார் வடிவேலு
- மைக்கேல் ஜாக்சன் கெட்டப்பில் கானா பாலா!
- கோச்சடையான் படத்துக்கு சென்சாரில் சிக்கலா?
- புதிய கெட்டப்புடன் வெளியே தலைகாட்டிய அஜீத்!
- சினிமாவுக்கு முழுக்குப்போடுகிறார் அனுஷ்கா!
- ஏப்ரல் 20 ஆம் தேதி ரஜினியின் புதிய படம் துவக்கம்
- அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை! சமந்தாவின் அவசர டு...
- அஞ்சான் மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுக்கிறார் கரீன...
- தேர்தலில் போட்டியிடும் தமிழ் நடிகை!
- இனி செய்தி வாசிப்பாளராக நடிக்க மாட்டேன்: கோபிநாத்
- ஷங்கருடன் கைகோர்க்கும் அஜீத்!
- விஜய்யின் அடுத்த படம் யாருக்கு?
- விஷால்-லெட்சுமிமேனன் லிப்லாக் : மகளிர் அமைப்பும் க...
- திரைப்படத்துறையினரால் புறக்கணிக்கப்பட்ட தெனாலிராமன...
- கோச்சடையான் படத்தில் நான் திணிக்கப்பட்டேன்: ரஜினிய...
- இசை ஆல்பத்தில் பிரேம்ஜியுடன் குத்தாட்டம் போடும் அக...
- 600 தியேட்டர்களில் மான்கராத்தே ரிலீஸ்!
- 60 படங்கள்: 3 ஹிட்டு, 7 பாராட்டு, 7 ஏமாற்றம் – 201...
- அனைவரையும் சிரிக்க வைப்பதே இனி என் கடமை: வடிவேலு
- கோடை வெளியீடாக வருகிறது திருமணம் எனும் நிக்காஹ்!
- ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நடிகை மனோரமா உடல் ந...
- தமிழ் படங்களில் நடிக்க மறுக்கவில்லை: ஸ்ருதிஹாசன்
- இந்தியனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்: கமல் பேட்டி
- சைவம் படத்தின் மூலம் பாடகியான உன்னி கிருஷ்ணன் மகள்
-
▼
April
(43)
Travel
Performance
‹
›
Cute
My Place
Slider
Racing
Videos
மதுரை தமுக்கம் மைதானத்தில் இளையராஜாவின் மகன் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடந்தது. ராஜாவின் சங்கீதத் திருவிழா என்ற பெயரில் நடந்த இந்நிகழ்ச்சியை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் தொடங்கி வைத்தார். இந்த இசை நிகழ்ச்சியை நடிகை சுஹாஷினி தொகுத்து வழங்கினார். ‘‘நமச்சிவாயா வாழ்க, நாதன்தாழ் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க...’’ என்ற பாடலுடன் இசை நிகழ்ச்சி தொடங்கியது.
பின்னர் இளையராஜா ‘‘ஜனனி ... ஜனனி பரிபூரணியே...’’ என்ற பாடைலை பாடி அனைவரின் கைதட்டலையும் பெற்றார். அதன் பிறகு, பாடகர்கள் ஹரிகரன், எஸ்.என்.சுரேந்திரன், யுவன் சங்கர் ராஜா, பாடகிகள் சித்ரா, பவதாரிணி, பிரியா உள்பட பல பாடகர், பாடகிகள் இளையராஜாவின் இசையில் பிறந்த பாடல்களை பாடி அரங்கையே அதிர வைத்தனர். இசை நிகழ்ச்சியின் இடையிடையே கார்த்திக் ராஜா, நடிகர் பிரகாஷ்ராஜ், டைரக்டர்கள் பாலா மிஷ்கின் ஆகியோர் பேசினர்.
கார்த்திக் ராஜா பேசும்போது, ‘‘எனக்கு கடவுள் கொடுத்த மிகப்பெரிய பரிசு அப்பா, தாய். இசையாக அப்பா பிறந்து இருக்கிறார். எத்தனை பேருக்கு இந்த பாக்கியம் கிடைக்கும்? என்றார். டைரக்டர் பாலா பேசும்போது, ‘‘நான் அடுத்து பண்ணபோகிற படம் ‘தாளம் தப்பட்டை’ இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து உள்ளார். இது அவருக்கு ஆயிரமாவது படமாகும். நான் மதுரைகாரன். இப்படத்தில் மதுரைகாரன் சசிகுமார் நடித்துள்ளார்.
மதுரைகாரர் இசையமைத்துள்ளார். மதுரைகாரன் நான் டைரக்ட் செய்கிறேன். இதைவிட நான் என்ன பாக்கியம் செய்து இருக்க முடியும் என்றார். நடிகர் பிரகாஷ்ராஜ் பேசும்போது ‘‘அய்யாவின் (இளையராஜா) பாடலை நேரடியாக கேட்க வேண்டும் என்பதற்காகவே இங்கு வந்துள்ளேன்.
நடிகராக இருந்து டைரக்டராகியும் இருக்கிறேன். நான் ஒரு படம் எடுக்கிறேன். அதில் மதுரை மல்லிகை பூ, இட்லி பற்றி பாட்டு போட்டு இருக்கிறார். தனியாக இருக்கும்போது அவரது இசையை கேட்பேன். என் படத்துக்கு இசையமைத்து கொடுத்த அவர் எனக்கு பொறுமையையும், எனக்கு வாழ்க்கையையும், இயற்கையாக வாழும் முறையையும் கற்று தந்துள்ளார்.
இதனால்தான் நான் சந்தோஷமாக, மகிழ்ச்சியாக இருக்கிறேன். இதற்காக அவருக்கு என் குடும்பத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். டைரக்டர் பாலா படத்திற்கு இளையராஜா ஒரு பாடலுக்கு இசையமைத்து உள்ளார். அந்த பாடலை கேட்டதும் அழுது விட்டேன். அப்படி ஒரு அற்புதமான பாடலை கொடுத்துள்ளார் என்றார்.
Cinema - Kollywood
ரஜினிகாந்தின் நடிப்பில் நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள கோச்சடையான் திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை ரஜினியின் மகள் சவுந்தர்யா இயக்கியுள்ளார். இந்தியாவிலேயே முதல் முறையாக அவதார், டின்டின் படங்களுக்கு பயன்படுத்தப்பட்ட மோசன் கேப்சரிங் தொழில்நுட்பம் இப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில், படத்தின் இயக்குனர் சவுந்தர்யா மும்பையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- கோச்சடையானில் என் தந்தை நடித்தது, படத்தை இயக்கும் நான் அவரது மகள் என்பதால் அல்ல.
கதை மற்றும் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன்பிறகே நடிக்க ஒப்புக்கொண்டார். இப்படத்தை சிறப்பாக இயக்க முடியும் என்று எனக்கு நம்பிக்கை இருந்தது.
என் தந்தையும் அனுமதி அளித்தார். எனது முதல் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கு அவரது ஆசீர்வாதம் கிடைத்துள்ளது. இது ஒரு கமர்ஷியல் படம் என்பதுடன் தொழில்நுட்பமும் புதிது. ஆனால், ரஜினிகாந்த் கதை போன்று இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
கமர்ஷியல் படத்திற்கு நவீன தொழில்நுட்பம் புகுத்தப்பட்டிருப்பது நமக்கு இதுவே முதல் முறையாகும். ராணா பட வேலைகளை தொடங்கியபோது என் தந்தைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. குணமடைந்து வந்த பின்னர் அவருக்கு உடல் அளவிலான அதிக அழுத்தங்களை கொடுக்க நாங்கள் விரும்பவில்லை.
ஏனெனில், ராணா வரலாற்றுப் படம். கோச்சடையான் அதற்கு முந்தைய காலகட்டத்தின் படம். கோச்சடையான் ராணாவின் தந்தை. அதனால் கோச்சடையான் முதலில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், என் தந்தைக்கு அழுத்தத்தை குறைக்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்தோம். நேரடியாக காட்சிகளில் நடிப்பதை ஒப்பிடுகையில் இது எளிதானது. இவ்வாறு சவுந்தர்யா கூறினார்.
Cinema - Kollywood
சினிமா டைரக்டர் ரவிக்குமார் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:– என் மனைவி சுஜிபாலா பத்திரிகையாளர்களை சந்தித்து உரையாடிதாகவும், என்மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளைப் படித்து அதிர்ச்சியும் வியப்பும் அடைந்தேன். அவர் கூறியதாக வெளியான தகவல்கள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை, உணமைக்கும் புறம்பானவை.
எனக்கும் சுஜிபாலாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் மட்டுமல்ல, திருமணமும் நடந்தது என்பதே உண்மை. இதை என்னால் நிரூபிக்க முடியும். அதற்கான ஆதாரங்கள் அனைத்தும் உள்ளன. அவற்றை வெளியிடுவேன் நான் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறியிருப்பது தவறானது.
உண்மையில் அவரது பெற்றோர்தான் குறிப்பாக, அவரது தாயார் இந்திராதான் ஒவ்வொரு முறை தொலைபேசியில் தொடர்பு கொள்கிறபோதும், என்னை ஆளை வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்து வருகிறார்.
நான் அவரை அடித்து உதைத்ததாக சுஜிபாலா கூறியிருக்கிறார். ஒரு கணவன் என்ற முறையில் நான் அவரது தவறான நடவடிக்கைகளுக்காக பலமுறை கண்டித்துள்ளேன் என்பது உண்மை.
ஆனால் அடிக்கும் அளவுக்கு நான் மோசமானவன் அல்ல. மூன்று திரைப்படங்களை (உண்மை, இன்றைய செய்தி, லவ் பண்ணலாமா வேண்டாமா) தயாரித்தும், இயக்கியும் வருகிற நான் பெண்களுக்கு எத்தகைய மரியாதையையும், கவுரவத்தையும் வழங்குவேன் என்பதை அதில் நடித்த நடிகைகளையும், பெண் கலைஞர்களையும் நீங்கள் விசாரித்துத் தெரிந்து கொள்ளலாம். அவருக்கு கார், பங்களா, தோட்டம் வாங்கித் தந்ததெல்லாம் பொய் என்று கூறியிருக்கிறார்.
நான் வாங்கித் தந்ததற்கான ஆதாரங்களை வைத்திருக்கறேன். ‘உண்மை’ திரைப்படத்தையே முடிக்க முடியாத அளவுக்கு நான் மோசமான பொருளாதார சூழ்நிலையில் இருப்பவன் என்றும், நான் எப்படி வீடு வாங்கித் தந்திருக்க முடியும் என்றும் சுஜிபாலா கேட்டிருக்கிறார்.
‘உண்மை’ திரைப்படம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதே சுஜிபாலாவால்தான். அவர்தான் இந்த படத்தின் கதாநாயகி. படப்பிடிப்புக்கு அழைத்த போதெல்லாம் அவரை அனுப்ப மறுத்து, அவரது தாயார் அவரை மறைத்து வைத்ததே படம் தாமதமானதற்குக் காரணம்.
அவர் தேதி கொடுத்தால், உடனே படப்பிடிப்பைத் தொடங்க நான் தயாராகவே இருக்கிறேன். நான் ஏற்கனவே திருமணமானவன் என்றும், எனக்கு குழந்தைகள் உள்ளனர் என்றும் ஏதோ புதிய கண்டுப்பிடிப்பைப் போல கூறுகின்றார்.
எனக்குத் திருமணம் ஆனதும், விவாகரத்துக்குப் பின் நான் பிரிந்து வாழ்வதும் தெரிந்துதானே அவர் எனக்குக் கழுத்தை நீட்டினார்? இப்போது புதியதாக ஏதோ பேசுவதன் காரணத்தை அவரும், அவரது தாயாரும்தான் விளக்க வேண்டும். சுஜிபாலாவுக்கு இருந்த சில தவறான தொடர்புகளை மறைத்து அவர்கள்தான் எனக்கு தீங்கு செய்திருக்கிறார்கள்.
அவரது குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை என்று நிரூபிக்க என்னால் முடியும். இதற்கான புகைப்பட ஆதாரங்கள், சாட்சிகள் அனைத்தும் என்னிடம் உள்ளன. உரிய நேரத்தில் அவற்றை வெளியிடத் தயாராக இருக்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Cinema - Kollywood
சமந்தா அரசியலில் ஈடுபடப் போவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இவர் தமிழில் ‘நான் ஈ’, ‘பானா காத்தாடி’, ‘நீ தானே என் பொன் வசந்தம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் ஜோடியாக கத்தி, சூர்யா ஜோடியாக ‘அஞ்சான்’ படங்களில் நடிக்கிறார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார். சித்தார்த்தும், சமந்தாவும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் பரவியுள்ளன. இந்த நிலையில் பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.
அவர் கூறும் போது, தேர்தலில் அனைவரும் ஓட்டு போட வேண்டும். நல்ல ஆட்சியாளரை தேர்வு செய்ய இது தான் சரியான நேரம் என்றார். மேலும் அவர் கூறும்போது, ‘நமது நாட்டுக்கு நரேந்திர மோடி போன்ற திறமையான தலைவர் தேவை. பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடி தகுதியானவர். அவர் நல்லாட்சி தருவார் என்பது எனது தனிப்பட்ட கருத்து ’ என்றார்.
இதன் மூலம் சமந்தா அரசியலில் குதிக்க தயாராவதாக கூறப்படுகிறது. பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Cinema - Kollywood
தெனாலிராமன் படத்தில் வடிவேலு நடிக்க ஆயத்தமானபோது கோலிவுட்டிலுள்ள பல முன்னணி நடிகைகளிடம் கால்சீட் கேட்டனர். ஆனால், வடிவேலு என்றதும் அத்தன நடிகைகளும் பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடினர். அதற்கடுத்து, வடிவேலுவைப்பற்றிய சங்கதி தெரியாத நடிகையாக கொண்டு வருவோம் என்று மும்பையில் இருந்தும் சில நடிகைகளை கூட்டி வந்தனர். ஆனால், அப்படி வந்த சில நடிகைகளிடம், கோடம்பாக்கத்தில் உள்ள சிலர் அப்படி இப்படி போட்டுக்கொடுத்து அவர்களை சொல்லாமல் கொள்ளாமல் மும்பைக்கே ஓட்டம் பிடிக்க வைத்தனர்.
ஆனால், அப்படி வந்தவர்களில், எதைப்பற்றியும் எனக்கு கவலையில்லை. வடிவேலுவுடன் நடித்தே தீருவேன் என்று தில்லாக நின்ற ஒரே நடிகைதான் மீனாட்சி தீட்ஷித். இவருடன் நடித்த அனுபவம் பற்றி வடிவேலு கூறுகையில், இந்த படத்துக்கு மீனாட்சி ஓ.கே ஆனதும், எனக்கு ஒரே பயம். இந்த புள்ளையையும் எதையாச்சும் சொல்லி ஓட வச்சிடக்கூடாதேன்னு பதட்டமா இருந்துச்சு.
அது ஒருபக்கமிருக்க, என்னை நேருல பாத்தா அந்த புள்ள எங்கூட நடிக்க மாட்டேன்னு சொல்லிடுமோங்கிற இன்னொரு பயமும் எனக்குள்ள இருந்துக்கிட்டே இருந்துச்சு. அதனால, முதல் நாள் படப்பிடிப்புக்கு வர்றது வரை மீனாட்சி தீட்ஷித் கண்ணுல நான் படவே இல்லை.
புல் மேக்கப்போட்டு, அந்த மன்னர் கெட்டப்போடதான் அவருக்கு காட்சி கொடுத்தேன் அதனால் என்னோட சுயரூபம் அந்த புள்ளைக்கு தெரியாம போச்சு. அதுவும் இல்லாம சுமமா சொல்லக்கூடாது புள்ள, நல்ல செக்கச்செவேர்னு தக்காளி பழம் மாதிரி இருக்கு.
நானோ தார் ரோடு மாதிரி இருக்கேன். ஆனாலும் அந்த புள்ள பெரிய மனசு பண்ணி எங்கூட நடிச்சிருக்கு. ரொம்ப நல்லாவும் நடிசசிருக்கு, அதனால் மீனாட்சிக்கு நான்தான் நன்றி சொல்லனும் என்கிறார் வடிவேலு.
Cinema - Kollywood
சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தை தயாரிப்பது பிவிபி சினிமா நிறுவனம். இந்த நிறுவனத்தின் செயல் இயக்குனர் ராஜீவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்த பேட்டியில் கூறியதாவது: எங்கள் நிறுவனம் பல்வேறு தொழில்களை செய்து வருகிறது. அதில் ஒன்றுதான் சினிமா தயாரிப்பு. ராஜபாட்டை, நான் ஈ, ஆயரத்தில் ஒருவன் உள்பட இதுவரை 7 படங்களை தயாரித்திருக்கிறோம். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் 8வது படம். தெலுங்கில் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய சூப்பர்ஹிட் படமான மரியாதை ராமண்ணாவின் தமிழ் உரிமத்தை நாங்கள் வாங்கி வைத்திருந்தோம். அதனையே இப்போது வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற பெயரில் தயாரித்து வருகிறோம்.
சந்தானம் பர்ட்ஸ் காப்பி அடிப்படையில் தயாரித்து தருகிறார். இது ஒரு பேமிலி எண்டர்டயிண்மெண்ட் காமடி படம். ஒரு பாடல் காட்சி தவிர மற்ற பணிகள் அனைத்தும் முடிந்து விட்டது. மும்பை மாடல் அழகி அஷனா ஜவேரி ஹீரோயினாக நடிக்கிறார்.
படத்தின் கதையில் சந்தானத்தின் வீடு முக்கியமானதாக இருக்கும். பூந்தமல்லி ரோட்டில் உள்ள ஈவிபி தீம்பார்க்கில் 2.5 கோடி செலவில் சந்தானத்தின் வீட்டை செட்போட்டு படமாக்கினோம். சந்தானம் சைக்கிளில் மினரல் வாட்டர் சப்ளை செய்பவராக நடிக்கிறார்.
அதிக பலம் இல்லாத சந்தானம் தன் வீட்டிற்கு வரும் ஆபத்தை எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் மே 9ந் தேதி வெளிவருகிறது. அதற்கு முன்னதாக ஏப்ரல் 14ந் தேதி பாடல்களை வெளியிடுகிறோம்.
பாடல் வெளியீட்டு விழாவில் எஸ்.எஸ்.ராஜமவுலிலியும், ஷங்கரும் கலந்து கொள்கிறாஇந்தப் படத்திற்கு பிறகு பிவிபி நிறுவனம் பெரிய ஹீரோ ஒருவர் நடிக்கும் படத்தை தயாரிக்க இருக்கிறது. அதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும். என்றார்ர்கள்.
Cinema - Kollywood
நடிகர் ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினி பாடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். ஏராளமான பக்தி பாடல்களை பாடியிருக்கும் அவர், கமல் நடித்த டிக் டிக் டிக் என்ற படத்தில் நேற்று இந்த நேரம் மற்றும் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் கடவுள் உள்ளமே உள்பட பல பாடல்களை சினிமாவிலும் பாடியிருக்கிறார். இதில் கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே என்ற பாடல் இன்றுவரை கருணை இல்லங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், கோச்சடையான் படத்திலும் ஒரு பாடல் பாடியிருக்கிறார் லதா ரஜினி.
ஏ.ஆர்.ரகுமானின் இசையில் அவர் பாடியுள்ள மணப்பெண்ணின் சத்தியம் என்ற அந்த பாடலுக்கு ஏராளமான லைக் வந்து கொண்டிருக்கிறதாம். மேலும், இதே பாடலை தெலுங்கில் பாடுவதற்கு வேறு பின்னணி பாடகி தேடியபோது, தெலுங்கிலும் நானே பாடுகிறேன் என்று ஆர்வத்துடன் கேட்டு வாங்கி பாடியிருக்கிறாராம் அவர்.
தமிழில் பாடியதைப்போலவே தெலுங்கிலும் உணர்வுப்பூர்வமாக பாடியுள்ளாராம் லதா ரஜினிகாந்த். இதையடுத்து, தனது அம்மாவின் குரல் இனிமையாக இருப்பதால், இனி தொடர்ந்து சினிமாவில் பாட வேண்டும் என்று அவரை கேட்டுக்கொண்டுள்ளாராம் கோச்சடையான் டைரக்டர் செளந்தர்யா அஸ்வின்.
Cinema - Kollywood
இது கதிர்வேலன் காதல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே நண்பேன்டா என்ற படத்தில் நடிக்க முடிவு செய்தார் உதயநிதி ஸ்டாலின். அப்போது காஜல் அகர்வால் பரபரப்பான கதாநாயகியாக பேசப்பட்டதால், நண்பேன்டா படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்தார் உதயநிதி. அப்போதே 25 லட்சம் அட்வான்ஸ் பணத்தையும் காஜல் அகர்வாலிடம் கொடுத்தனர்.
அதன் பிறகு இது கதிர்வேலன் காதல் படத்தில் நடித்தபோது நயன்தாரா உடன் உதயநிதிக்கு நல்ல கெமிஸ்ட்ரி உண்டானது. அதன் காரணமாக, நண்பேன்டா படத்தின் கதாநாயகி வாய்ப்பை நயன்தாராவுக்கு வழங்கிவிட்டார். நண்பேன்டா படத்தில் வரும் ஹீரோயின் கேரக்டருக்கு காஜல் அகர்வாலை விட நயன்தாராதான் மிகப்பொருத்தமாக இருப்பார் என்று அப்படத்தின் இயக்குநர் ஜெகதீஷ் சொன்னதால்தான் கதாநாயகி மாற்றம் நடந்ததாக சொன்னார் உதயநிதி.
இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும் காஜல் அகர்வால் கடுப்பாகிவிட்டார். ஆனால் தன் கடுப்பைக்காட்டிக் கொள்ளாமல் நண்பேன்டா படத்துக்கு தான் வாங்கிய அட்வான்ஸ் பணத்தை உதயநிதியிடம் திருப்பிக் கொடுக்க முன்வந்தார். ஆனால் உதயநிதி காஜலிடமிருந்து அட்வான்ஸ் பணத்தை திரும்ப வாங்க மறுத்துவிட்டாராம். பெரிய இடத்துப் புள்ளைங்களுக்கு 25 லட்சம் எல்லாம் பாக்கெட் மணிப்பா
Cinema - Kollywood
கத்தி படத்தில் சமந்தாவுடன் டூயட் பாடிக்கொண்டிருக்கும் விஜய் அடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கும் படத்தில் பிரியங்கா சோப்ராவுடன் டூயட் பாடுவதாக இருந்தது. ஆனால் அவர் கால்சீட் இல்லை என்று கைவிரித்ததையடுத்து, கோச்சடையான் தீபிகா படுகோனேவிடம் பேசினர். ஆனால், அவரோ, ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் வேண்டும் என்று அதிர்ச்சி அணுகுண்டுகளை அள்ளி வீசினாராம்.
இதனால் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய அப்படக்குழுவினர் தெறித்து ஓடி வந்து விட்டனர். இதையடுத்து, மும்பை நடிகை என்று போனாலே அகலக்கால்தான் வைக்க வேண்டியதிருக்கும் என்று யோசித்து, விரலுக்கு ஏற்ற வீக்கமாய் தென்னிந்திய நடிகைகளையே புக் பண்ணுவோம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்களாம்.
அதையடுத்து, தற்போதைய நடிகைகளில் யாரை நடிக்க வைக்கலாம் என்று நடந்த பரிசீலனையில், வேலாயுதத்தில் விஜய்யுடன் நடித்த ஹன்சிகா, சுறாவில் நடித்த தமன்னா ஆகியோரின் பெயர்கள் முன்வரிசையில் உள்ளதாம். இவர்கள் இருவரில் ஒருவர் நடிக்கவே அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது
Cinema - Kollywood
விஷால்-லட்சுமிமேனன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள இரண்டாவது படம் நான் சிகப்பு மனிதன். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள உதட்டு முத்தக்காட்சிதான் கடந்த சில வாரங்களாகவே கோலிவுட்டில் ஹாட் பீட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் பப்ளிசிட்டிக்காக கடைசி நேரத்தில் இந்த விசயங்களை அவுட் பண்ணினார்கள். ஆனால், இப்போது அதுவே படத்துக்கும் வினையாகி விட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில, அப்படத்தைப் பார்த்த தணிக்கைக்குழுவினர், உதட்டு முத்தக்காட்சி இருப்பதால் யு/ஏ சான்றிதழ்தான் தர முடியும் என்று கூறினர்.
அதையடுத்து, இது ஜேம்ஸ்பாண்ட் படங்களில் வருவது போன்ற ஆபாச முத்தக்காட்சி இல்லையே. சாதாரண காட்சிதானே என்று விஷால்தரப்பு வாக்குவாதம் செய்தபோதும், அதை அதிகாரிகள் செவி கொடுத்து கேட்கவில்லை. அதனால், அதையடுத்து ரிவைசிங் கமிட்டிக்கு சென்றது விஷால் டீம். ஆனால் இப்போது அவர்களும் உதட்டு முத்தக்காட்சியை நீக்கினால் யு சான்றிதழ் தருகிறோம்.
இல்லையேல் யு/ஏ தான். அதில் எந்த மாற்றமும் இல்லை என்று அடித்து சொல்லி விட்டார்களாம். ஆனால் அந்த முத்தக்காட்சியை நீக்கினால் படமே காலியாகி விடும் என்பதால், வேறு வழியில்லாமல் யு/ஏ சான்றிதழுடன் நான் சிகப்பு மனிதனை வெளியிடுகிறார்களாம்.
Cinema - Kollywood
வடிவேலு, மீனாட்சி தீக்ஷித் நடித்துள்ள படம் கஜபுஜபல தெனாலிராமன். கல்பாத்தி சகோதரர்கள் தயாரித்திருக்கிறார்கள். யுவராஜ் இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் வடிவேலு மன்னர் கிருஷ்ணதேவராயகராகவும், தெனாலிராமனாவும் நடித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தெலுங்கு யுவசக்தி தலைவர் ஜெகதீஷ்வர ரெட்டி தலைமை செயலாளரிடம் ஒரு புகார் மனுவை கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: தெனாலிராமன் என்ற படத்தில் 16ம் நூற்றாண்டில் விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயர் என்ற மன்னன் வேடத்தில் வடிவேலு நடித்துள்ளார்.
கிருஷ்ண தேவராயர் சிறந்த அரசாட்சியை வழங்கியவர், நீதி தவறாதவர், திராவிட மொழிகளை போற்றி வளர்த்தவர் அவரை காமெடியாக காட்டுவது அவரை அவமதிப்பதாகும். கிருஷ்ணதேவராயருக்கு 38 மனைவிகளும், 58 குழந்தைகளும் இருப்பது போன்று காட்டியிருக்கிறார்கள்.
வரலாற்று குறிப்புபடி அதில் உண்மை இல்லை. கிருஷ்ணதேவராயரின் வரலாற்று படம் அல்ல என்று படத் தரப்பு மறுத்தாலும் படத்தின் கதையும் காட்சிகளும் அவரைத்தான் குறிப்பிடுகிறது. எனவே படத்தை வெளியிடும் முன் வரலாற்று ஆய்வாளர்கள், பத்திரிகையாளர்கள், தெலுங்கு அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோருக்கு போட்டுக் காட்டவேண்டும்.
அவர்கள் ஆட்சேபம் தெரிவிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும். முழு படமும் கிருஷ்ணதேவராயரை அவமதிக்கும் விதத்தில் இருந்தால் படத்துக்கு தடைவிதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Cinema - Kollywood
‘கோச்சடையான்’ படத்தின் வெளியீட்டுத் தேதி பற்றி படத்துறையில் பலவிதமான செய்திகள் உலா வருகின்றன. இன்னொரு பக்கம், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அவரவர் இஷ்டத்துக்கு ஆளுக்கொரு வெளியீட்டு தேதியை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த குளறுபடிகளுக்கு எல்லாம் காரணம்…கோச்சடையான் படத்தைத் தயாரிப்பவர்களோ, அப்படத்தை இயக்கும் சௌந்தர்யா ரஜினிகாந்தோ படத்தின் ரிலீஸ் தேதியை தெரிவிக்காமல் இருப்பதுதான்.
அதனால்தான் பலரும் ஆளுக்கு ஒரு தேதியை யூகங்களாக சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 11 அன்று கோச்சடையான் ரிலீஸ் என்று சில மாதங்களுக்கு முன் ட்விட்டரில் தெரிவித்தார் சௌந்தர்யா ரஜினிகாந்த். தற்போதைய சூழலில் அந்த தேதியில் கோச்சடையான் வெளிவர வாய்ப்பே இல்லை என்பது உறுதியாகிவிட்டது.
சில தினங்களுக்கு முன் மும்பையில் நடைபெற்ற ‘கோச்சடையான்’ ஹிந்தி பதிப்பின் டிரைலர் வெளியீட்டு விழாவில், படத்தின் ரிலீஸ் தேதி பற்றி முறையான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அங்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை.
கோச்சடையான் படத்தின் ரிலீஸ் தேதி தெரியாததினால், தாங்கள் பாதிக்கப்படுவதாக புலம்புகிறார்கள் படங்களை எடுத்து முடித்து விட்டு வெளியீட்டுக்குத் தயாராக உள்ள சிறு படத் தயாரிப்பாளர்கள். ‘கோச்சடையான்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை வைத்தே தங்களின் படங்களின் வெளியீட்டுத் தேதியை முடிவு செய்யலாம் என இவர்கள் காத்திருக்கிறார்களாம்.
ச்சடையான்’ வெளியீடு எப்போது என்று தெரியாத காரணத்தினால் எங்கள் படத்தையும் வெளியிட முடியவில்லை என்கிறார்கள்.
Cinema - Kollywood
சிரிப்பு நடிகரான சந்தானம் கடந்த வருடம் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்தப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்த தற்போது வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்தப்படத்தை ஸ்ரீநாத் இயக்கி வருகிறார். விஜய் நடித்த நாளைய தீர்ப்பு தொடங்கி இங்க என்ன சொல்லுது வரை பல படங்களில் சிரிப்பு நடிகராக நடித்தவர் இவர். தவிர, மறைந்த ஒளிப்பதிவாளர் ஜீவாவின் மனைவி அனீஸ் தயாரித்த முத்திரை என்ற படு தோல்விப் படத்தையும் இயக்கியவர்.
முத்திரை படம் தோல்வியடைந்ததினால் டைரக்ஷனை மறந்திருந்த ஸ்ரீநாத்தை அழைத்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தவர் சந்தானம்தான். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவுற்றநிலையில், விரைவில் படம் வெளியாகவிருக்கிறது.
இந்தநிலையில், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம் தொடர்பாக ஒரு சர்ச்சை எழுந்திருக்கிறது. 2010 ஆம் ஆண்டில் சுனில் நடிக்க எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகி, சூப்பர்டூப்பர் வெற்றியடைந்த படம் மரியாதை ராமண்ணா. இந்தப் படத்தின் ரீமேக்தான் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம். மரியாதை ராமண்ணா படத்தின் கதையை எஸ்.எஸ். ராஜமௌலி உடன் இணைந்து எழுதியவர் அவரது சகோதரரான எஸ்.எஸ்.காஞ்சி. மரியாதை ராமண்ணா படத்தின் டைட்டிலிலும், பட விளம்பரங்களில் கதை என எஸ்.எஸ்.
ராஜமௌலி, எஸ்.எஸ்.காஞ்சி இருவரது பெயர்களும் இடம்பெற்றன. அப்படத்தின் ரீமேக்காக தயாராகிவரும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் விளம்பரங்களிலோ எஸ்.எஸ். ராஜமௌலி, எஸ்.எஸ்.காஞ்சி இருவரது பெயர்களும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. இவ்விஷயம் எஸ்.எஸ். ராஜமௌலியின் கவனத்துக்குப் போனதும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தைத் தயாரிக்கும் பிவிபி நிறுவனத்திடம் தன் அதிருப்தியைத் தெரிவித்திருக்கிறாராம்.
Cinema - Kollywood
‘வீரம்’ படத்தைத் தொடர்ந்து அஜித்தின் 55-வது படத்தை ஸ்ரீ சத்ய சாய் மூவிஸ் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். இந்தப் படத்தை கெளதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சற்றுமுன் வெளியானது. இது பற்றி தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம் என்ன சொல்கிறார்? “ஆரம்பம் படத்தை தயாரித்த ஸ்ரீ சத்ய சாய் மூவிஸ் அஜித்தின் 55-வது படத்தையும் தயாரிக்கிறது. கெளதம் வாசுதேவ் மேனன் டைரக்ட் செய்கிறார்.
இந்தப்படம் வருகிற ஏப்ரல் 9- ஆம் தேதி புதன்கிழமை ஆரம்பமாக உள்ளது. அஜித்துடன் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களின் விபரம் விரைவில் வெளியிடப்படும்.” என்று ஏ.எம்.ரத்னம் தெரிவித்துள்ளார்.
படம் தொடங்கும்போது அஜித் படத்தின் தலைப்பு அறிவிக்கப்படுவதில்லை. அதுபோலவே அஜித்தின் 55 வது படமாக உருவாகவிருக்கும் இந்தப்படத்தின் தலைப்பும் அறிவிக்கப்படவில்லை.
Cinema - Kollywood
பெரும்பாலும் ஒரு படத்திற்கு ஒரு வில்லன்தான் இருப்பார். ஏ.ஆர்.முருகதாஸ், ஹரி போன்ற டைரக்டர்களின் படங்களில் இரண்டு வில்லன்கள் இருப்பார்கள். ஆனால், மகிழ்திருமேனி இயக்கத்தில் இப்போது ஆர்யா நடித்துக்கொண்டிருக்கும் மீகாமன் படத்தில் மொத்தம் 7 வில்லன்கள் இருக்கிறார்களாம்.அவர்கள் அத்தனை பேருடனும் சண்டை காட்சிகளில் நடிக்கிறாராம் ஆர்யா.
ஆர்யாவுடன் மோதப்போகும் அந்த வில்லன்கள் யார் யார்? என்று கேட்டால், ஆஷிஷ் வித்யார்ஜி, சிறுத்தை அவினாஷ், பாண்டியநாடு ஹரிஷ், தடையறத்தாக்க மஹா காந்தி மற்றும் சுதன்ஷி பாண்டே, அஷிதோஷ் ராணா, பிதாமகன் மகாதேவன் என ஒரு பெரிய பட்டியலே போடுகிறார்கள். இவர்கள் அனைவருமே மெகா வில்லன்கள் என்பதால், அனைவருக்குமே கதையில் முக்கியத்துவம் உள்ளதாம். அதனால் படம் முழுக்க இவர்களுடன் வரிந்து கட்டி மல்லுக்கட்டியிருக்கிறாராம் ஆர்யா.
ஆக இதுவரை காதல், காமெடி என்று கலந்து கட்டி வந்த ஆர்யா, இப்படம் மூலம் அதிரடி ஆக்சன் ஹீரோவாகவும் ஆவேச நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறாராம்
Cinema - Kollywood
நடிகை லட்சுமி மேனனிடம், "விஷாலுடன் மட்டும்தான் முத்தக்காட்சியில் நடிப்பீர்களா? அல்லது எல்லா கதாநாயகர்களுடனும் முத்தக்காட்சியில் நடிப்பீர்காளா?" என்று நிருபர்கள் கேட்டார்கள். அதற்கு பதில் அளித்து லட்சுமிமேனன் கூறியதாவது:- கதைக்கு தேவைப்பட்டால் எல்லா கதாநாயகர்களுடன் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தக்காட்சியில் நடிக்க தயார். மேற்கண்டவாறு லட்சுமி மேனன் கூறினார்.
பேட்டியின்போது, நடிகர்கள் ஜெயப்பிரகாஷ், சுந்தர், சீனு, நடிகை இனியா, டைரக்டர் திரு, உடையலங்கார நிபுணர் வாசுகி பாஸ்கர், ஒளிப்பதிவாளர் ரிச்சர்டு, 'ஆர்ட்' டைரக்டர் ஜாக்கி ஆகியோர் உடன் இருந்தார்கள். விழா நிகழ்ச்சிகளை 'யு' டி.வி. தனஞ்செயன் தொகுத்து வழங்கினார்.
Cinema - Kollywood
ஈழ தமிழர்களை படுகொலை செய்த ராஜ பக்சேவை கண்டிக்கும் விதமாக இலங்கைக்கு நடிகர் – நடிகைகள் போவதில்லை என முடிவு எடுத்துள்ளனர். அங்கு நடக்கும் இசை விழாக்களிலும் பங்கேற்காமல் பின்னணி பாடகர்கள் புறக்கணித்து வருகிறார்கள். மீறி செல்வோருக்கு கடும் கண்டனங்கள் எழுகின்றன. இதுபோல் வெளிநாடுகளிலும் ராஜபக்சே ஆதரவாளர்கள் நடத்தும் விழாக்களை தமிழ் திரையுலகினர் புறக்கணித்து வருகிறார்கள். ஆனால் நடிகை திரிஷா தடையை மீறி ராஜபக்சே ஆதரவாளர்கள் விழாவில் பங்கேற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கனடாவில் இந்த விழா நடந்துள்ளது. அங்குள்ள தமிழர் அமைப்பு ஒன்று இந்த விழாவை நடத்தி உள்ளது. இந்த அமைப்பில் இருப்பவர்கள் ராஜபக்சேவுக்கு நெருக்கமாக உள்ள டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள் என மற்ற தமிழர் அமைப்புகள் குற்றம் சாட்டி உள்ளன. இவர்கள் நடத்திய விழாவில் திரிஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்று உள்ளார். அவரை தமிழ் அமைப்புகள் கண்டித்து உள்ளன.
Cinema - Kollywood
இதுவரை தமிழ் சினிமாவில் எளிமை என்றால் அது ரஜினிதான் என்கிற அளவுக்கு நரைமுடி தாடியுமாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அவர். அவரையடுத்து எளிமை என்று யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாத நிலையில் இப்போது அந்த பட்டியலில் விஜய்யும் இடம் பிடித்திருக்கிறார். அந்த இடத்தில் விஜய்யை இடம்பெறச் செய்திருப்பவர் கத்தி பட நாயகி சமந்தா. அதாவது, சாதாரணமாக முன்னணி நடிகர்களின் படப்பிடிப்பு என்றாலே அங்கே பல கேரவன்கள் நிற்பது வாடிக்கையாகி விட்டது. ஒரு டேக்கில் நடித்து முடித்ததும் அவர்கள் கேரவனுக்குள் ஓடிச்சென்று தங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்டு அதற்பிறகுதான் வெளியே வருவார்கள்.
மேலும், மதிய இடைவேளையில் ஒரு குட்டித்தூக்கம் போடவும் கேரவன்களை பயன்படுத்திக்கொண்டு வருகின்றனர். ஆனால், தற்போது கத்தி படத்தில் நடித்து வரும் விஜய், ஒரு ஷாட் முடிந்ததும் கேரவனுக்குள் செல்வதில்லையாம். ஸ்பாட்டிலேயே சேர் போட்டு அமர்ந்து அடுத்து நடிக்க வேண்டிய காட்சிகளுக்காக தன்னை தயார்படுத்திக்கொண்டேயிருக்கிறாராம்.
அதுமட்டுமின்றி தங்களைச்சுற்றி பல எடுபிடிகளை நிறுத்திக்கொண்டு பில்டப் கொடுக்கும் நடிகர்கள் மத்தியில் விஜய் தனக்கு குடை பிடிப்பதற்குகூட உதவியாளர் வைத்துக்கொள்வதில்லையாம்.
இது கத்தியில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் சமந்தாவுக்கு மிகப்பெரிய ஆச்சர்யத்தைக் கொடுத்துள்ளதாம். தமிழில் முன்னணி ஹீரோவாகி விட்டபோதும், எந்தவித ஆடம்பரமும் இல்லாமல், எளிமையாக அவர் இருப்பதைப் பார்த்து எனக்கு பெரிய ஆச்சர்யமாக உள்ளது என்று யூனிட் நபர்களிடம் கூறி வந்த சமந்தா, இப்போது அதை தனது டுவிட்டரிலும் வெளியிட்டு விஜய்யின் எளிமையை உலகத்திற்கே வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்.
Cinema - Kollywood
எப்படியாவது தன்னையும் ஆக்சன் ஹீரோவாக ரசிகர்களை நம்ப வைத்து விட வேண்டும் என்பதற்காக நிறையவே மெனக்கெடுகிறார் சித்தார்த். அதற்காக காதலை மட்டுமே மையமாகக் கொண்ட கதைகளை சமீபகாலமாக தவிர்த்து வருபவர், தன்னிடம் கதை சொல்ல வருபவர்களிடம், தன்னை கருப்பாக மாற்றிக்கொண்டு, கரடுமுரடான வில்லன்களுடன் சண்டை போடவும் தயாராக இருக்கிறேன் என்று தான் குஸ்தி கதைகளில் மட்டுமே நடிக்க ஆர்வமாக இருப்பதை சொல்லி வருகிறார் இந்த சூழ்நிலையில், அவர் நடித்து வெளியாகயிருக்கும் படம்தான் ஜிகர்தண்டா.
இந்த படத்தில் டைரக்டராக நடித்துள்ள சித்தார்த், மதுரையில் அரிவாளை தூக்கிக்கொண்டு திரியும் நிஜ தாதாக்களின் கதையை படமாக்கும் பொருட்டு அவர்களை நோட்டமிட சென்ற இடத்தில் அவர்களுடன் மோதுவதுதான் கதை. அதுவும், கில்லி படத்தில் எப்படி முன்ன பின்ன தெரியாத இடத்தில் த்ரிஷாவை அந்த ஏரியா ரவுடியாக பிரகாஷ்ராஜ்டமிருந்து காப்பாற்றுவாரோ, அதேபோல், தான் மதுரைக்கு சென்ற இடத்தில் அந்த ஏரியா ரவுடிக்கு நிச்சயம் செய்த பெண்ணான லட்சுமிமேனனை காதலிப்பாராம் சித்தார்த்.
அதையடுத்து வில்லன் கும்பலுக்கும், சித்தார்த்துக்குமிடையே போர் ஆரம்பமாகுமாம். இதையடுத்து மதுரைக்காரர்களின் அரிவாளுக்கு இறையாகாமல் எப்படி லட்சுமிமேனனை அங்கிருந்து சித்தார்த் அபேஸ் பண்ணி வருகிறார் என்பதுதான் க்ளைமாக்சாம். ஆக, தனக்கு கிடைத்த ஆக்சன் ஹீரோ வாய்ப்பை நன்றாக பயன்படுத்தியுள்ள சித்தார்த், சண்டை காட்சிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆவேசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறாராம். கில்லி விஜய் ரேஞ்சுக்கு சித்தார்த் ஆக்ட் கொடுத்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.
Cinema - Kollywood
ஆரம்ப காலத்தில் கவுண்டமணி-செந்திலுடன் இணைந்து பல படங்களில் நடித்தவர் வடிவேலு. அப்படி படிப்படியாக வளர்ந்து ஒரு கட்டத்தில் நம்பர்-ஒன் காமெடியனானார். ஆனால் எதிர்பாராதவிதமாக அரசியல் புயலில் சிக்கிக்கொண்ட வடிவேலுவின் மார்க்கெட் சரிந்ததையடுத்து, அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த சந்தானம், சூரி போன்ற நடிகர்கள் இப்போது முன்னணி காமெடியன்களாக தலையெடுத்துள்ளனர். இந்த நிலையில், தற்போது 49 ஓ படத்தில் கவுண்டமணியும், தெனாலிராமன் படத்தில் வடிவேலுவும், ஹீரோக்களாக நடித்தபடி ரீ-என்ட்ரி கொடுத்துள்ளனர்.
இந்த நேரத்தில் தற்போதைய முன்னணி காமெடியனான சந்தானமும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், வடிவேலு நடித்த தெனாலிராமன் வருகிற 18-ந்தேதி ரிலீசாகிறது. இதையடுத்து, வடிவேலு வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
இந்தநிலையில், கவுண்டமணியும் மீண்டும் நாயகனாக நடித்திருப்பது பற்றி வடிவேலு கூறும்போது, அண்ணன் நடிப்பது நல்ல விசயம்தானே. அவர் ஒரு நல்ல தொழிலாளி. அவர் வந்தா நல்லதுதான்.
மேலும். மற்ற காமெடியன்களும் ஹீரோக்களாக நடித்திருப்பது பற்றி எனக்கு எந்தவித பயமும் இல்லை. நான் நானாகவே இருக்கிறேன். அதோடு, யாரு ஒருத்தர் மற்றவர்கள் வருவதைப்பற்றி பயப்படுகிறரோ அவர் தோற்று விடுவார். மேலும், எனக்கு எனது நடிப்பு மீது முழு நம்பிக்கை உள்ளது. அதனால் தொடர்ந்து சினிமாவில் கிங்காக வலம் வருவேன் என்கிறார்.
Cinema - Kollywood
யவராஸ் இண்டெர்நேஷனல் தயாரிக்கும் படம் ‘மொழிவது யாதெனில்’. இந்தப் படத்தில் பின்னணி பாடகர் எஸ்.என்.சுரேந்தரின் மகன் விராஜ், ராஜன், ரியாஷ், தேஜ், மீனு கார்த்திகா, லஸ்யா, பாலு ஆனந்த், தேனி முருகன், அஞ்சலிதேவி உட்பட பலர் நடிக்க, கதை எழுதி இயக்கி உள்ளார் எஸ்.கோபாலகிருஷ்ணன். இந்தப் படத்துக்காக நித்யன் கார்த்திக் இசையமைபில் நிகரன் எழுதிய, ‘அட்டக்கத்தி… மொக்க பீசு…. வெத்துவேட்டு… சப்பகேசு…” என்கிற பாடலை கானா பாலா பாடியதுடன், படத்தில் அந்தப் பாடலுக்கு மைக்கேல் ஜாக்சன் கெட்டப்பில் ஆடிப் பாடி நடித்திருக்கிறார். இந்தப் பாடல் பற்றி இசையமைப்பாளர் நித்யன் கார்த்திக் கூறுகையில், “இப்போது வரும் படங்களில் கானா பாலா, தவறாமல் ஒரு பாடலை பாடி நடித்து விடுகிறார்.
கானா பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய எதிர்ப்பார்ப்பை அவரது பாடல்கள் உருவாக்கி தருகிறது. அதே போல ‘மொழிவது யாதெனில்’ படத்தில் கானா பாலாவுக்காக ஒரு பாடலை பிரத்யேகமாக வெஸ்டர்ன் போக்கில் உருவாக்கி, அவரை பாட வைத்தோம்.
நிகரன் எழுதிய ”அட்டக்கத்தி… மொக்க பீசு…. வெத்துவேட்டு… சப்பகேசு…” என்கிற வரிகளில் துவங்கும் அந்தப் பாடலை கானா பாலா பாடியதுடன், படத்தில் அந்தப் பாடலுக்கு மைக்கேல் ஜாக்சன் கெட்டப்பில் ஆடிப் பாடி நடித்திருக்கிறார். இந்தப் பாடல் அவருடைய பாடல்களில் மிகவும் முக்கியமானதாக இருக்கும்…” என்றார்
Cinema - Kollywood
ரஜினி நடிக்கும் கோச்சடையான் படத்துக்கு மார்ச் 19 அன்று யு சான்றிதழ் வழங்கியது தணிக்கைக்குழு. யு கிடைத்ததும் கோச்சடையான் படத்தின் இறுதிக்கட்ட வேலைகளைப் பார்க்க உற்சாகமாக சீனாவுக்குக் கிளம்பிப்போனார் அப்படத்தின் இயக்குநரான சௌந்தர்யா ரஜினிகாந்த். அவர் சீனா சென்ற பிறகு கோச்சடையான் படத்தின் நிலவரம் பற்றிய செய்திகள் தினம் தினம் மீடியாக்களில் அப்டேட் செய்யப்பட்டன. அவற்றில் ஒரு தகவலாக, கோச்சடையான் படத்துக்கு இன்னும் பின்னணி இசை சேர்ப்பு பணியே நடைபெறவில்லை. டம்மியான சவுண்ட் ட்ராக்கை வைத்து சென்சார் சர்ட்டிபிகேட் வாங்கிவிட்டனர் என்ற செய்தியும் வெளியானது.
கோச்சடையான் படம் பற்றி வெளியான செய்திகளே தற்போது அந்தப் படத்துக்கு எதிராகத் திரும்பி இருக்கிறது. சென்சார் செய்யப்பட்ட பிறகு ஒரு படத்தில் எந்த மாற்றங்களும் செய்யக்கூடாது என்பது விதி. இந்த விதியை மீறி கோச்சடையான் படத்தின் பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன என்பதை காரணம் காட்டி தணிக்கைக்குழுவுக்கு புகார் வந்திருக்கிறதாம்.
அதன் அடிப்படையில் கோச்சடையான் படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பும்படி சென்சார் போர்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறதாம். இது உண்மையா என சென்சார்போர்டு வட்டாரத்தில் விசாரித்தால், கோச்சடையான் 2டி படத்துக்குத்தான் சர்ட்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளது. அந்தப் படத்தை 3டியிலும் வெளியிடுகிறார்கள். எனவே 3டி வெர்ஷனை எங்களுக்குக் காட்ட வேண்டும் என்று சொல்லி இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
Cinema - Kollywood
பெரும்பாலும் படங்களுக்காக தங்களது கெட்டப்பை மாற்றிக்கொள்ளும் பிரபல நடிகர்கள், அந்த கெட்டப்புடன் வெளியில் தலைகாட்ட மாட்டார்கள். அப்படி வெளியில் லீக்அவுட்டாகி விட்டால் படங்களின் சுவராஸ்யம் குறைந்து விடும் என்பதால் தலைமறைவாக இருப்பார்கள் நடிகர்கள். ஆனால், தற்போது கெளதம்மேனன் இயக்கும் படத்தில் நடிப்பதற்காக தனது உடம்பை சிக்ஸ்பேக்கிற்கு மாற்றி வரும் அஜீத், சமீபத்தில் தனது மேக்கப்மேன் ஷக்தி என்பவரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வெளியில் தலைகாட்டியிருக்கிறார். அப்போது அவர் ஸ்லிம்மாக காட்சி கொடுத்ததோடு, பழைய சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் இருந்து மாறியிருந்தாராம். அதோடு, ஒரு புதுமையான ஹேர் ஸ்டைலில் இருந்தாராம்.
ஆனால் அதைப்பார்த்த சிலர் அதை போட்டோ எடுத்து இணையதளங்களில் பரப்பி விட்டனர். இந்த கெட்டப்பில்தான் அஜீத் புதிய படத்தில் நடிக்கயிருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், படத்தில் நடிக்கத் தொடங்குவதற்கு முன்பே அஜீத்தின் புதிய கெட்டப் இப்படி அவுட்டாகி விட்டதால் அதிர்ச்சியில் இருக்கிறாராம் கெளதம்மேனன்.
Cinema - Kollywood
2005ல் நாகார்ஜூனா நடித்த சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் நடிகையானவர் அனுஷ்கா. முதல் படத்திலேயே முன்னணி ஹீரோவுடன் நடித்த அனுஷ்காவுக்கு அடுத்தடுத்து படங்கள் குவிந்ததால் தெலுங்கில் முன்னணி நடிகையானார். அந்த நேரத்தில் தமிழிலும் ரெண்டு என்ற படத்தில் நடித்தார் ஆனால் படம் ஹிட்டடிக்கவில்லை. ஆனபோதும், அருந்ததி மெகா ஹிட்டானதால் பின்னர் கோடம்பாக்கத்திலும் கொடி ஏற்றிய அனுஷ்கா, இப்போது மீண்டும் தெலுங்கில் ராணி ருத்ரம்மா தேவி, பாகுபாலி போன்ற சரித்திர படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இதையடுத்து தமிழில் ரஜினி, அஜீத் நடிக்கயிருக்கும் புதிய படங்களில் அவர் நடிக்கயிருப்பதாக செய்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன. ஆனால், இந்த நேரத்தில் தெலுங்கு மீடியாக்களுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், கைவசம் உள்ள படங்களை முடித்ததும் திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு முழுக்குப்போடப்போகிறேன் என்று கூறியுள்ளாராம் அனுஷ்கா.
தற்போது 32 வயதை எட்டியுள்ள அனுஷ்காவுக்கு அவரது பெற்றோர் தீவிரமாக மாப்பிள்ளை பார்த்து வருவதோடு, இந்த ஆண்டே திருமணத்தை நடத்தி விட வேண்டும் என்பதிலும் தீவிரமாக உள்ளார்களாம். அதனால்தான் இதுவரை திருமணம் பற்றி வாய் திறக்காமல் இருந்த அனுஷ்கா இப்போது அவரே வெளிப்படையாக அறிவித்துள்ளாராம்.
Cinema - Kollywood
கோச்சடையான் படத்தின் வெளியீட்டு தேதியே இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், தன் அடுத்தப் படத்தை உடனே துவங்குகிறார் ரஜினி. இந்த செய்தி ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி உள்ளது. ரஜினி அடுத்து நடிக்கவிருக்கும் படத்தை ஷங்கர் இயக்குவதாக வந்த செய்திகளில் உண்மையில்லை. ரஜினியின் அடுத்தப்படத்தை இயக்குபவர் கே.எஸ்.ரவிகுமார்தான். இந்தப் படத்தில் இரண்டு கதாநாயகிகள். ஒருவர் அனுஷ்கா மற்றொருவர் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்கா. இருவரிடமும் நடந்த பேச்சுவார்த்தையில் அனுஷ்கா கால்ஷீட் ஓகே. சோனாக்ஷி சின்கா கால்ஷீட்டில் சிறு பிரச்சனைகள் இருப்பதால் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. இப்படத்தின் கதை, வசனத்தை பொன்.
குமரன் எழுதுகிறார். பிரியாமணி நடிப்பில் கடந்த வருடம் வெளியான சாருலதா என்ற படத்தை இயக்கியவர்தான் பொன்.குமரன். இவரது கதைக்கு திரைக்கதை எழுதி, இயக்கவிருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார். எந்திரன் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். கன்னடத்தில் பிரபலமான தயாரிப்பாளரும், தமிழில் மஜா போன்ற படங்களைத் தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ் இப்படத்தினை தயாரிக்கவிருக்கிறார்.
ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்தாலும் இப்படத்தின் தயாரிப்பு நிர்வாகத்தை முழுக்க முழுக்க கவனிப்பவர் நடிகர் அருண்பாண்டியன்தான். ஐங்கரன் இண்டர்நேஷனலில் பார்ட்னராக இருந்த அருண்பாண்டியன் அங்கிருந்து விலகி ராக்லைன் வெங்கடேஷ் நிறுவனத்தில் இணைந்திருக்கிறார். ரஜினியிடம் கால்ஷீட் வாங்கியது கூட அருண்பாண்டியன்தான். ஏப்ரல் 20 ஆம் தேதி இப்படத்தின் பூஜை நடைபெறவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து மைசூரில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.
Cinema - Kollywood
பாராளுமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டிருப்பதால், நடிகர்-நடிகைகளை பிரசாரத்துக்கு பயன்படுத்துவதில் அனைத்து அரசியல் கட்சிகளுமே தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், நடிகை சமந்தாவின் தந்தை ஆந்திராவிலுள்ள ஜெகன்மோகன் கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்படப்போவதாகவும், அதனால் அக்கட்சிக்காக சமந்தா தேர்தல் பிரசாரம் செய்யப்போவதாகவும் ஆந்திராவில் பரபரப்பு செய்திகள் பரவிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து ஆந்திராவிலுள்ள மீடியாக்கள் சமந்தாவை அணுகி விவரம் கேட்டபோது, அப்படியா, இந்த விசயமே நீங்கள் சொல்லித்தான் எனக்கே தெரிகிறது.
தற்போது ஒரே நேரத்தில் 5 படங்களில் நடித்துக்கொண்டிருககும் எனக்கு ஆந்திராவில் போட்டியிடும் வேட்பாளர்களே யார் யார் என்பது தெரியாது. அந்த அளவுக்கு சினிமாவில் பிசியாக நடித்து வருகிறேன். அப்படியிருக்க நானாவது , கட்சிக்காக பிரசாரம் செய்வதாவது என்று அதற்கு மறுப்பு செய்தி வெளியிட்டாராம்.
அதையடுத்து சமீபகாலமாக தனக்கு தோன்றும் விசயங்களை தனது டுவிட்டரில் தவறாமல் பதிவு செய்து வரும் சமந்தா, இந்த விசயத்தையும் உடனடியாக பதிவு செய்து தன்னைப்பற்றிய எழுந்துள்ள வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளாராம். அதோடு, எனக்கு எந்த கட்சிக்கும் பிரசாரம் செய்யும் எண்ணமும் இல்லை, எதிர்காலத்தில் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசையும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Cinema - Kollywood
கோச்சடையான் படத்தில் தீபிகா படுகோனே நடித்திருப்பதையடுத்து, மேலும் சில நடிகைகளுக்கும், தமிழ்ப்படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் மேலோங்கி வருகிறது. ஆனால் முன்னணி ஹீரோக்களின் படங்கள், சரியான சம்பளங்கள் அமையாததால் சிலர் பின்வாங்கிக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அஞ்சான் படத்தில் சமந்தா முக்கிய நாயகியாக நடித்தபோதும், இப்போது இன்னொரு முக்கிய ரோலுக்காக கரீனா கபூரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம்.
விஜய் நடித்த தலைவாவைப் போன்று இப்படமும் மும்பை கதை களத்தில் உருவாவதால் அப்படத்தில் இன்னொரு நாயகியாக இந்தி நடிகை ராகினி நடித்தது போன்று இந்த படத்தில் கரீனா நடிக்கிறாராம்.
தற்போது இந்தி படங்களில் கரீனாகபூர் பிசியாக நடித்துக்கொண்டிருப்பதால், அவரது கால்சீட்டுக்காக காத்திருந்தவர்கள், திடீரென்று அவர் கொடுத்ததும், மும்பையில் லொகேஷனிலேயே அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளையும் படமாக்கி விட்டர்களாம்.
இதையடுத்து, இதுவரை தமிழ்ப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் இல்லாமல் இருந்து வந்த கரீனா, இதன்பிறகு முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் தமிழில் நடிக்கும் முடிவில் இருக்கிறாராம்.
Cinema - Kollywood
வருகிற பாராளமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் ஒரு நடிகர், நடிகைகூட போட்டியிடவில்லை. நடிகர் கார்த்திக் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் ஒரு நடிகை போட்டியிட இருக்கிறார். உறங்காத கண்கள், நிலவே மலரே, செவ்வந்தி படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ரஜினி நிவேதா. தெலுங்கு, கன்னட படங்களில் நடித்த இவர் தற்போது தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் நேற்று தனது ஆதரவாளர்களுடன் (?) தென்சென்னை தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய அடையாறில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்துக்கு வந்தார். வேட்புமனு தாக்கல் செய்தார்.
வங்கி கணக்கு தொடர்பான டாக்குமெண்டுகள் சரியாக இல்லாததால் அவரது வேட்புமனுவை தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொள்ளவில்லை. ஏமாற்றத்துடன் வெளியில் வந்த ரஜினி நிவேதா. “நான் இந்த தொகுதியல் சுயேட்சையாக போட்டியிட இருக்கிறேன். அவசர அவசரமாக வந்ததால் டாக்குமெண்டுகளை சரிபார்க்கவில்லை. நாளை எல்லா டாக்குமெண்டுகளுடனும் முறையாக வேட்புமனு தாக்கல் செய்வேன்” என்று கூறிவிட்டுச் சென்றார்
Cinema - Kollywood
நீயா நானா நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் கோபிநாத். நிமிர்ந்து நில் படத்தின் மூலம் சினிமா நடிகராகிவிட்டார். இனி தொடர்ந்து நடிக்கவும் முடிவு செய்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: நிமிர்ந்து நில் படத்திற்கும், அதில் நடித்த எனக்கும் தொடர்ந்து பாராட்டுகள் கிடைத்து வருவது சந்தோசமாக இருக்கிறது. இயக்குனர் சமுத்திரகனி இரண்டு மாதங்கள் எனக்கு பயிற்சி கொடுத்து நடிக்க வைத்தார். சின்னத்திரையில் நான் இயல்பாக செய்து வரும் வேலை என்பதால் எளிதாக நடிக்க முடிந்தது. நிமிர்ந்து நில் படத்துக்கு பிறகும் சின்னத்திரை செய்தி வாசிப்பாளராக, தொகுப்பாளராக நடிக்க வந்த வாய்ப்புகளை தவிர்த்து விட்டேன்.
நான் நானாக நடிப்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது. அதனால் நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் தொடர்ந்து நடிப்பேன். சினிமாவில் பிசியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் சின்னத்திரையை விட மாட்டேன் என்கிறர் கோபிநாத்
Cinema - Kollywood
மங்காத்தா, ஆரம்பம், வீரம் படங்களின் வெற்றிக்குப்பிறகு மேல்தட்டு இயக்குனர்களின் கவனத்துக்கு வந்து விட்டார் அஜீத். அவரது வியாபார வட்டமும் அதிகரித்து விட்டதால், அவரை வைத்து பிரமாண்ட பட்ஜெட்டில் படம் பண்ணலாம் என்று ஷங்கர் உள்ளிட்ட டைரக்டர்கள் அஜீத் பக்கம் திரும்பியுள்ளனர். வீரம் படத்தையடுத்து கெளதம்மேனன் இயக்கும் படத்தில் இரண்டு வேடங்களில நடிப்பதற்காக தன்னை தற்போது தயார்படுத்திக்கொண்டிருக்கும் அஜீத், சமீபத்தில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கருடன் ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு நடத்தினாராம்.
அப்போது, தன்னிடமிருந்த ஒரு கதையை அஜீத்திடம், ஷங்கர் சொன்னபோது, அதில் நான் நடிக்கிறேன் என்று தனது விருப்பத்தை தெரிவித்தாராம் அஜீத். அதனால் தற்போது ஐ படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் ஷங்கர், அடுத்து அஜீத்திடம் சொன்ன கதையை திரைக்கதை அமைப்பார் என்று தெரிகிறது.
ஆக, இந்த மாதம் முதல் கெளதம் படத்தில் நடிக்கும் அஜீத், இந்த ஆண்டு இறுதியில் ஷங்கர் இயக்கும் படததில் நடிப்பார் என்று தெரிகிறது.
Cinema - Kollywood
இப்போதெல்லாம் ஒரு படத்தை முடித்து விட்டு அடுத்து யாருடைய படத்தில் நடிப்பது என்கிற விசயத்தில் ரொம்பவே தடுமாறிப்போகிறார்கள் பிரபல ஹீரோக்கள். அந்த வகையில், ஐ படத்தை முடித்த விக்ரமிடம் பல இயக்குனர்கள் கதை சொல்லியிருக்கிறார்கள் என்றாலும், யார் படத்தில் முதலில் நடிப்பது என்பதை இன்னமும் அவர் முடிவெடுக்கவில்லையாம். அதேபோல்தான் கத்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய்யும், அடுத்த படம் குறித்து இன்னும முடிவெடுக்காமல் இருக்கிறாராம். விஜய்யிடம் கதை சொல்லியிருப்பதாக டைரக்டர்கள் சமுத்திரகனி, அட்லி இருவருமே வெளிப்படையாக கூறி வருகின்றனர்.
ஆனபோதும், அதுகுறித்து விஜய் தரப்பில் இருந்து எந்தவித ரெஸ்பான்சும் வரவில்லையாம். ஆனால் இதுபற்றி விஜய் வட்டாரத்தை விசாரித்தால், அடுத்து விஜய்யை இயக்க பல டைரக்டர்கள் கதை சொல்லியிருப்பது உண்மைதான். ஆனால், அவருக்கு அந்த கதைகள் பிடித்திருந்தாலும் அப்படங்களில் உடனடியாக நடிக்கும் முடிவில் இல்லை.
அவர் மனதில் வேறு சில இயக்குனர்கள் இருக்கிறார்கள். அவர்கள் படத்தில்தான் அடுத்து பணியாற்ற ஆசைப்படுகிறார். அதனால் கத்தி முடிந்த பிறகுதான் அதுபற்றிய பேச்சுவார்த்தையை விஜய் தொடங்குவார் என்கிறார்கள்.
Cinema - Kollywood
விஷால் நடித்த நான் சிகப்பு மனிதன் ஏப்ரல் 11 ஆம்தேதி வெளியாகிறது. இப்படத்தில் லட்சுமிமேனனின் உதட்டில் விஷால் முத்தமிடுகிற காட்சி இடம்பெறுகிறது. இந்தக்காட்சியில் லட்சுமி மேனனின் உதட்டில் நிஜமாகவே விஷால் முத்தம் கொடுத்து நடித்திருக்கிறார்.. இல்லை இல்லை..முத்தம் கொடுத்திருக்கிறார். விஷாலுக்கும் லட்சுமி மேனனுக்கும் காதல் இருப்பதாக திரையுலகில் செய்திகள் பரவி இருப்பதால், இதை புருஷன் பொண்டாட்டி சமாச்சாரமாக திரையுலகினர் ஈஸியாக எடுத்துக் கொண்டுவிட்டனர். லட்சுமிமேனனின் உதட்டைக் கவ்வுகிற புகைப்படங்கள் சில தினங்களுக்கு முன் மீடியாக்களில் வெளியானது. அந்தப் புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சி அடையாதவர்களே இல்லை.
அந்தளவுக்கு விஷால், லட்சுமி மேனன் முத்தக்காட்சி பல தரப்பினரிடமும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக பெண்கள் அமைப்பினரை கடும் கோபத்துக்குள்ளாக்கி இருக்கிறது. எனவே இந்த விஷயத்தை அவர்கள் கையில் எடுத்திருக்கின்றனர். லட்சுமி மேனன் – விஷால் முத்தக்காட்சியை நான் சிகப்பு மனிதன் படத்தில் அனுமதிக்கக் கூடாது என்று தணிக்கைக்குழுவில் புகார் மனு அளிக்க உள்ளனர். மேலும் இதுபோன்ற காட்சிகளை அனுமதிக்க கூடாது என போலீஸ் மற்றும் நீதிமன்றத்திடமும் முறையிட உள்ளனராம்.
Cinema - Kollywood
அம்மாவின் கோபம் தீர்ந்திருக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் அரிதாரம் பூசியிருக்கிறார் வடிவேலு. ஆனால் நடக்கும் சம்பவங்களை எல்லாம் வைத்துப் பார்த்தால், வடிவேலு மீதான அம்மாவின் கோபம் இம்மியளவும் குறையவில்லை என்றே தோன்றுகிறது. தெனாலிராமன் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை, ஆளும்கட்சியின் டி.வி.க்குக் கொடுப்பதன் மூலம் அம்மாவை குளிர்வித்துவிடலாம் என்று கணக்குப்போட்ட வடிவேலு, தன் எண்ணத்தை தயாரிப்பாளர்களிடம் கூறினாராம். அதன்படியே தயாரிப்பு தரப்பு காய் நகர்த்தியது. சேனல் நிர்வாகமோ இந்த டீலுக்கு அசைந்து கொடுக்கவில்லையாம்.
அடுத்து தெலுங்கு யுவசக்தி என்ற அமைப்பு சார்பாக ஜெகதீஸ்வர ரெட்டி என்பவர் தெனாலிராமன் படத்தில் தெலுங்கர்களை இழிவு செய்திருப்பதாகவும், எனவே படத்தை தடை செய்ய வேண்டும் என்று தணிக்கைக்குழுவில் மனு கொடுக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இவர் அ.தி.மு.க.வை சேர்ந்தவர். எனவே இவரது புகாருக்குப் பின்னால் ஆளும்கட்சியின் உள்குத்து இருக்குமோ என்று தெனாலிராமன் படக்குழுவினருக்கு சந்தேகம் எழுந்தநிலையில்..
நேற்று தெனாலிராமன் படத்தின் இசைவெளியீட்டுவிழா நடைபெற்றது. வழக்கமாக இதுபோன்ற இசைவெளியீட்டுவிழா நிகழ்ச்சியில் திரைப்படத்துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் அணி திரண்டு வருவார்கள். குறிப்பாக தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட இயக்குநர்கள் சங்கம், ஃபெப்சி ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள். அவர்களை மேடைக்கு அழைத்து கௌரவிக்கவில்லை என்றால் கோபப்படுவார்கள்.
தெனாலிராமன் இசைவெளியீட்டு விழாவிலோ திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்களோ, திரைப்பட அமைப்புகளைச் சேர்ந்தவர்களோ ஒருவர் கூட வரவில்லை. எனவே தெனாலிராமன் இசையை அப்படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் வெளியிட, இசையமைப்பாளர் இமான் பெற்றுக் கொண்டார்.
Cinema - Kollywood
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கோச்சடையான் படத்தின் இந்தி பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. அமிதாப்பச்சன் வெளியிட ஐஸ்வர்யா பச்சன் பெற்றுக் கொண்டார். விழாவில் ரஜினி பேசியதாவது: இந்த படம் அதி நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் எனக்கு தொழல்நுட்பம் பற்றி தெரியாது. இதுபோன்ற படங்களில் நான் திணிக்கப்பட்டுள்ளேன். இது கடவுளின் சித்தம். எனக்கு சவாலாகவும் இருந்தது, நல்ல அனுபவமாகவும் இருந்தது. படத்தை இயக்கிய என் மகளை எல்லோரும் பாராட்டும்போது மகிழ்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது. சவுந்தர்யா சிறு வயதிலேயே அமர் சித்ரா கதைகளை விரும்பி படிப்பாள்.
அதை படமெடுக்க விரும்புவாள். அதனை இப்போது நிறைவேற்றிக் கொண்டாள். கோச்சடையானை ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நம்புகிறேன் என்றார். விழாவில் அமிதாப்பச்சன் பேசியதாவது: தமிழ் நாட்டில் ரஜினியின் செல்வாக்கு ஆச்சர்யப்பட வைக்கும்.
அவரது படத்தை முதல் நாளில் ரசிகர்களைத் தவிர வேறு யாரும் பார்க்க முடியாது. பல நாட்கள் கடந்த பிறகும் தியேட்டரில் ரசிகர்களின் ஆரவாரம் இருந்து கொண்டே இருக்கும். நானும் ரஜினியும் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறோம். சொந்த வாழ்க்கை பற்றி இருவரும் பரிமாறிக்கொள்வோம்.
எந்திரன் படத்திற்கு பிறகு சினிமா எனக்கு போரடித்துவிட்டது. இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றார் நான்தான் நடிப்பதை நிறுத்தக்கூடாது என்று கேட்டுக் கொண்டேன். ரஜினி கருணையும், மனிதாபிமானமும் மிக்க அற்புத மனிதர். இந்திய சினிமா, இனி கோச்சடையானுக்கு முன், கோச்சடையானுக்கு பின் என்று தான் பேசப்படும். இவ்வாறு அமிதாப் பச்சன் பேசினார்.
Cinema - Kollywood
கோவில்பட்டி வீரலட்சுமி படத்தில் அறிமுகமானவர் அக்ஷயா, கலாபகாதலன், உயிரின் ஓசை, எங்கள் ஆசான், உயர்திரு 420 உள்பட பல படங்களில் நடித்தார். ஐம்பதுக்கும் ஆசை வரும், மன்மத ராஜ்யம், பட்டிக்காட்டு மாப்பிள்ளை, தசையினை தீச்சுடினும் படங்களில் நடித்துள்ளார். அவைகள் ரிலீசாகமால் நிற்கிறது. தற்போது புதிய வாய்ப்புகள் எதுவும் இல்லாத அக்ஷயா ஸ்மைல் ப்ளீஸ் என்ற தமிழ் மியூசிக் ஆல்பத்தில் பிரேம்ஜியுடன் குத்தாட்டம் போட்டிருக்கிறார். மகேஷ் என்பவர் தயாரித்து இயக்கி உள்ள இந்த ஆல்பத்தில் 6 பாடல்கள் இடம்பெற்றிருக்கிறது.
ஸ்ரீகாந்த் தேவா, போபோ சசி, பாடி உள்ளனர், தயா சைரஸ் இசை அமைத்துள்ளார். “தமிழில் இசை ஆல்பத்திற்கு அவ்வளவு வரவேற்பு இல்லை என்பது தெரியும். ஆனால் வருங்காலத்தில் இசை ஆல்பங்களின் மார்க்கெட் பெரிதாக இருக்கும். அதனை இந்த ஆல்பம் ஆரம்பித்து வைக்கும். முதல்கட்டமாக டி.விக்களிலும், யூ டியூப்பிலும் வெளியிட இருக்கிறோம்” என்கிறார் இயக்குனர் மகேஷ்.
Cinema - Kollywood
சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடித்துள்ள மான்கராத்தே சூப்பர் ஸ்டாரின் பட ரேன்ஞ்சுக்கு எதிர்பார்ப்பில் எகிறிகிடக்கிறது. காரணம் சிவகார்த்திகேயனின் தொடர் வெற்றி, ஹன்சிகாவின் காதல் பிரேக்அப்பிற்கு பிறகு வெளிவரும் படம். ஏ.ஆர்.முருதாசின் கதை. எப்படியும் காமெடிக்கு கியாரண்டி இருக்கும் என்பதால் இந்த எதிர்பார்ப்பு. படத்தின் தயாரிப்பு பட்ஜெட்டை விட படம் நான்கு மடங்கு அதிக தொகைக்கு விற்பனையாகி இருக்கிறது. இந்த நிலையில் வருகிற 4ந் தேதி படம் ரிலீசாகிறது.
தமிழ்நாடு முழுவதும் 350 முதல் 400 தியேட்டர்கள் வரை ரிலீசாகிறது. சென்னை நகரில் மட்டும் 30 தியேட்டர்களில் ரிலீசாகிறது. உலக நாடுகளில் 160 தியேட்டர்கள் வரை ரிலீசாகிறது. தென்னிந்திய மாநிலங்களையும் சேர்த்தால் மொத்தம் சுமார் 600 தியேட்டர்களில் ரிலீசாகிறது. வளர்ந்து வரும் ஒரு புதுமுக நடிகரின் படம் இத்தனை அதிகமான தியேட்டர்களில் ரிலீசாவது இதுவே முதன் முறை என்கிறார்கள்.
ரிலீசுக்கு பிறகு கூடுதல் பிரிண்டுகள் தேவைப்பட்டால் அதற்கும் தயாராகவே இருக்கிறார்களாம்.
Cinema - Kollywood
தமிழ் சினிமாவில் ஒரு ஆண்டிற்கு 60 படங்கள் ரிலீசான காலம் உண்டு. இப்போது மார்ச் 31 வரைக்குமான முதல் காலாண்டிலேயே 60 நேரடி தமிழ் படங்கள் ரிலீசாகி அசர வைத்திருக்கிறது. இதே ரீதியில் போனால் 2014ம் ஆண்டு 250 படங்களுக்கு மேல் ரிலீசாகி உலக சாதனை படைக்கும். முதல் காலாண்டில் வெளிவந்த 60 படங்களில் வீரம், கோலிசோடா, குக்கூ, தெகிடி படங்கள் மட்டுமே தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுத்து ஹிட்டாகி உள்ளது. ஜில்லாவை ஹிட் லிஸ்டில் சேர்த்தாலும் அந்தப் படம் தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கவில்லை. தெகிடி படம் சூதுகவ்வும், பீட்சா பாணியில் புதியவர்களால் புதுமையாக கொடுக்கப்பட்டு வரவேற்பை பெற்றிருக்கிறது.
நம்ம கிராமம், ஆஹா கல்யாணம், பண்ணையாரும் பத்மினியும், வல்லினம், நிமிர்ந்துநில், நெடுஞ்சாலை, ஒரு ஊர்ல ஆகியவை மீடியாக்கள், விமர்சகர்களிடம் பரவலான பாராட்டுகளை குவித்தது. ஆனால் வசூலை குவிக்கவில்லை. நிமிர்ந்து நில், நெடுஞ்சாலை, படங்கள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருப்பதால் மவுத் டாக் மூலம் படம் பிக்அப் ஆகி தயாரிப்பாளருக்கு லாபம் தரும் சாத்தியக் கூறுகள் உள்ளது.
இங்க என்ன சொல்லுது, ரம்மி, புலிவால், இது கதிர்வேலன் காதல், மாலினி 22 பாளையங்கோட்டை, சந்த்ரா, பிரம்மன் படங்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு அதனை பூர்த்தி செய்யாமல் போனது. இனம் படம் தமிழ் சினிமா சரித்திரத்திலேயே இல்லாத வகையில் திரையிடப்பட்ட மூன்றே நாட்களில் வெளியிட்டவர்களாலேயே திரும்ப பெறப்பட்டது. படத்துக்கு எழுந்த கடுமையான எதிர்ப்பால் பின்னர் வர இருக்கும் தனது பெரிய பட்ஜெட் படங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இயக்குனர் லிங்குசாமி துணிச்சலுடன் திரும்ப பெறவும் முடிவு எடுத்தார்.
தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து ஏறுமுகத்தில் இருந்த விஜய்சேதுபதி, சசிகுமாருக்கு இந்த காலாண்டு இறங்கு முகமாகியது. ஓகே ஓகே வெற்றிக்கு பிறகு அடுத்து ஒரு வெற்றி கொடுத்தே ஆகவேண்டும் என்று நீண்ட நாள் காத்திருந்து கதை தேர்வில் கவனமாக இருந்த உதயநிதி ஸ்டாலினுக்கும் இது கதிர்வேலன் காதல் ஸ்பீட் பிரேக்காக அமைந்தது.
மலையாளத்தில் ஹிட்டான (பீமேல் 11 கோட்டையம், சாப்பாகுரிசு) படங்கள் தமிழ் ரீமேக்கில் (மாலினி 22 பாளையம்கோட்டை, புலிவால்) வரவேற்பை பெறவில்லை. குறைந்த பட்ஜெட் நிறைய வசூல், லாபம் என்ற வகையில் முதல் காலாண்டு தேர்வில் முதல் இடம் பிடிக்கிறது கோலிசோடா.
Cinema - Kollywood
நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் வடிவேலு கதா நாயகனாக நடித்து வரும் படம் தெனாலிராமன். இரட்டை வேடங்களில் நடிக்கும் வடிவேலுக்கு ஜோடியாக மீனாட்சி தீக்சித் நடிக்கிறார். இப்படத்திற்கு இசை இமானும், ஒளிப்பதிவை ராமநாத் செட்டியும் கவனிக்கின்றனர். கதை, திரைக்கதை எழுதி யுவராஜ் தயாளன் இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீடு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் வடிவேலு, படத்தின் நாயகி மீனாட்சி தீக்சித், இசையமைப்பாளர் இமான், படத்தின் தயாரிப்பாளர்கள் ஏஜிஎஸ் சகோதரர்கள் மற்றும் படக்குழுவினர்கள் கலந்துக் கொண்டனர்.
இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் வடிவேல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 2 வருடங்களுக்குப் பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நிறைய பேர் என்னிடம், ஏன் இந்த 2 வருட இடைவெளி என்று கேட்டனர். நடந்தது எல்லாம் உங்களுக்கே தெரியும். பிறகு புலிகேசி மாதிரியான கதைக்கு நீண்ட நாட்களாக காத்திருந்தேன். அப்போதுதான் யுவராஜ் தயாளன் எனக்கு கதை சொன்னார்.
அவருடைய கதை எனக்கு பிடித்தது அதனால்தான் நடிக்க ஒத்துக் கொண்டேன். தயாரிப்பாளர்கள் ஏஜிஎஸ் எனக்கு போன் செய்து நீங்கள் நடியுங்கள், நாங்கள் இப்படத்தை தயாரிக்கிறோம் என்று கூறினர். மேலும் இப்படத்தை தயாரித்தால் படம் வெளிவராது என்று தயாரிப்பாளர்களுக்கு போன் செய்து பலர் கூறினர். அதையும் மீறி படம் தயாரித்த ஏஜிஎஸ் சகோதர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இப்படத்தின் நாயகி தேர்வின்போது, பல நடிகைகளை தேர்வு செய்தோம்.
அப்படி தேர்வு செய்த நடிகைகளுக்கு எல்லாம், இவருடன் நடித்தால் படம் வெளிவராது, வந்தால் படம் நன்றாக ஓட விடமாட்டார்கள் என்று கூறினர். அதனாலயே பலர் நடிக்காமல் போனார்கள். ஏஜிஎஸ். நிறுவனம் டிக்கெட் போட்டு அழைத்து வந்தால், இங்கு உள்ளவர்கள் சொந்த செலவில் டிக்கெட் போட்டு அவர்களை ஊருக்கு அனுப்பி வைப்பார்கள்.
இவ்வளவு பிரச்சினைகளையும் கடந்து, இப்படத்தில் நடித்த நாயகி மீனாட்சி தீக்சித்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஷூட்டிங் முடிந்து செட்டைக் கலைத்தால் வடிவேலின் படம் நின்றுவிட்டது என்று கூறுவதற்காக வாடகை சைக்கிள் எடுத்து சுற்றியவர்கள் கூட உண்டு. ஒவ்வொரு வீட்டின் ரேஷன் கார்டுகளிலும் என் பெயர் இல்லையே தவிர, அந்த குடும்பங்களில் ஒருவனாக என்னை ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள். சிலர் எனக்கு படவாய்ப்பு கொடுக்கவே பயந்தார்கள்.
அந்த நேரத்தில் மலையாளத்தில் இருந்தும், தெலுங்கில் இருந்தும் படவாய்ப்புகள் வந்தன. அந்த மொழி படங்களில் நான் நடித்திருந்தால் வடிவேல் ஊரை காலி செய்துவிட்டு போய்விட்டான் என்று பேசியிருப்பார்கள். அதனால்தான் அந்த படங்களை ஒப்புக்கொள்ளவில்லை. இவ்வாறு வடிவேல் கூறினார்.
மேலும், அரசியல் பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்? என்று அவரிடம் நிருபர்கள் கேட்டபோது, என்னை அரசியலில் இழுத்து விடாதீர்கள். நான் ஒரு காமெடி நடிகன். இனி அனைவரையும் சிரிக்க வைப்பதையே கடமையாகக் கொண்டு செயல்படுவேன் என்று தெரிவித்தார்.
Cinema - Kollywood
மிக வித்தியாசமான கதை, வித்தியாசமான கதைக்களம் என்ற வகையில் எல்லோராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுவரும் படம் – திருமணம் எனும் நிக்காஹ். புரிதல் அவசியம் என்ற உன்னத கருத்தை வலியுறுத்தும் இந்த படம் காதலுக்கும் ஊடலுக்கும் இடையே புரிதலின் முக்கியமான பங்களிப்பை பற்றி கூறும் படமாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட திருமணம் எனும் நிக்காஹ் படம் முடிவடைந்து பல மாதங்களாகிவிட்டநிலையில், எப்போது வெளியாகும் என்றே தெரியாதநிலையில் கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்நிலையில், திருமணம் எனும் நிக்காஹ் அடுத்த மாதம் வெளி வரும் என அப்படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் அறிவித்திருக்கிறார்.
திருமணம் எனும் நிக்காஹ் படத்தைப் பற்றி அப்படத்தின் இயக்குனர் அனீஸ், “இந்த படம் நமது நாட்டின் பிரதானமான இரு மதங்களின் சம்பிரதாயங்களையும், கலாசாரத்தையும் பின்னணி ஆக வைத்து எடுக்கப்பட்ட படம். நஸ்ரியாவின் நடிப்பும் சரி, தோற்றப்பொலிவும் சரி, அவருக்கு ஏன் இப்படி ஒரு புகழ் கிடைத்தது என்பதற்கு இந்தப் படம் விடை சொல்லும். எங்கேயும் எப்போதும் எல்லோரையும் எப்போதும் கவரும் வகையில் சிறப்பான நடிப்பைப் பொடுத்திருக்கிறார் ஜெய்.
திருமணம் எனும் நிக்காஹ் படத்தின் வெற்றிக்கு இசை அமைப்பாளர் கிப்ரானின் இசை பெரிய அளவில் உதவும். தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிசந்திரன் சாருக்கு என் மீது நம்பிக்கை வைத்து படம் தந்தமைக்கு இந்த நேரத்தில் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். திருமணம் எனும் நிக்காஹ் குடும்பத்தோடு பார்த்து மகிழும், ஒரு மெல்லிய காதல் இழை ஓடும், மெய்மறக்க செய்யும் இசை கலந்த படம் என்கிறார்
Cinema - Kollywood
நடிகை மனோரமாவுக்கு நேற்று முன்தினம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. மூச்சு விடவும் திணறினார். இதையடுத்து ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். செயற்கை சுவாசமும் பொறுத்தப்பட்டது. உடல் நிலை கவலைக்கிடமாகவே இருந்தது. உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடினார்கள். மாலையில் இவரது உடல் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனாலும் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பிலேயே அவர் வைக்கப்பட்டு உள்ளார்.
தொடர்ந்து சில நாட்கள் ஆஸ்பத்திரியிலேயே அவர் இருப்பார் என தெரிகிறது. மனோரமாவுக்கு ஏற்கனவே மூட்டு வலி இருந்தது. அதற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Cinema - Kollywood
ஸ்ருதிஹாசன் இந்தி, தெலுங்கு படங்களில் நடிக்கவே முன்னுரிமை அளிக்கிறார் என்றும், தமிழ் படங்களில் நடிக்க மறுக்கிறார் என்றும் செய்தி பரவி உள்ளன. தற்போது அவர் கைவசம் இரண்டு இந்திப்படங்கள் உள்ளன. ‘பூஜை’ என்ற தமிழ் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். இது தவிர மேலும் சில தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும் ஸ்ருதி அவற்றில் நடிக்க மறுத்துவிட்டதாகவும் செய்தி பரவி உள்ளது. ‘பூஜை’ படத்தை முடித்து விட்டு இந்தி, தெலுங்கு படங்களில் கவனம் செலுத்த முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்பட்டது.
இது குறித்து ஸ்ருதிஹாசனிடம் கேட்ட போது மறுத்தார். ‘‘நான் தமிழ் படங்களில் நடிக்க மறுப்பதாக வதந்திகள் பரவி உள்ளன. இதில் உண்மை இல்லை. தமிழ் படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தன. அப்போது, வேறு படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருந்ததால் என்னிடம் கால்ஷீட் இல்லை. அதனால் அவற்றில் நடிக்க முடியாமல் போனது.
இதை வைத்து தமிழ் படங்களை புறக்கணிக்கிறேன் என்று தவறான செய்தி பரவிவிட்டது. தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆசை உள்ளது. கால்சீட் இருந்தால் நிச்சயம் நடிப்பேன்’’ என்றார்.
Cinema - Kollywood
சென்னை, மார்ச் 31- நடிகர் கமலஹாசனுக்கு 2014 ஆம் ஆண்டிற்கான பத்ம பூஷன் விருது வழங்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2014 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு தேர்வானவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். அதன்படி, கமலஹாசனுக்கு பத்ம பூஷன் விருதை பிரணாப் வழங்கினார்.
இந்த விருதினைப் பெற்றுக் கொண்டு இன்றிரவு சென்னை திரும்பிய கமலஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். கடந்த ஆண்டு 'விஸ்வரூபம்' படம் தொடர்பான சர்ச்சை எழுந்து, படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்ட போது பேட்டியளித்த கமலஹாசன், 'உலக நாயகன் என்று சொல்வதால், என்னை தமிழகத்தைவிட்டு வெளியேற்றிவிட நினைக்கிறார்கள் என்று கருதுகிறேன். தமிழகம் எனக்கு இல்லாமல் போனால் மதசார்பற்ற மாநிலத்தையோ, நாட்டையோ தேடிச் செல்வேன்.
என்னை எங்கு குடியமர்த்துவது என்பது என் ரசிகர்களுக்கு தெரியும்' என்று குறிப்பிட்டிருந்தார். இன்று பத்மபூஷன் விருது பெற்றபோது, சுற்றிலும் ஜாம்பவான்கள் நிற்க, தனக்கு ஏற்பட்ட உணர்வு குறித்து கருத்து தெரிவித்த கமலஹாசன், 'என்னைச் சுற்றிலும் இருந்த சிறப்புக்குரியவர்களுடன் இணைந்து நானும் ஒருவனாக இந்த விருதைப் பெற்றமைக்காக பெருமிதம் அடைந்தேன். அவர்களின் திறமை மற்றும் சாதனைகளை நினைத்து பூரிப்படைந்தேன்.
இந்தியனாக இருப்பதில் பெருமைக் கொண்டு, இந்த நாட்டுக்கு நான் ஆற்றவேண்டிய கடமையை எண்ணி, மீண்டும் ஒருமுறை அதற்காக சூளுரைத்தேன். எதிர்காலத்தில், கோபப்பட்டு இந்த நாட்டை விட்டு வெளியேறுவது என்று முடிவெடுப்பதில்லை என்று உறுதியாக தீர்மானித்தேன்' என்று உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.
Cinema - Kollywood
தலைவா’ படத்திற்கு பிறகு இயக்குனர் விஜய் இயக்கும் புதிய படம் ‘சைவம்’. இப்படத்தில் நாசர், பேபி சாரா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் இப்படத்தில் நா.முத்துக்குமார் வரிகளில் உருவான ‘அழகே... அழகே’ என்ற பாடல் சமீபத்தில் பதிவானது. இப்பாடலை பாடியிருப்பவர் பிரபல பின்னணி பாடகரான உன்னிக்கிருஷ்ணனின் மகள் உத்ரா உன்னி கிருஷ்ணன்.
இப்படத்தில் நடிக்கும் பேபி சாராவுக்கு பொருத்தமான குரல் வேண்டும் என்று இயக்குனர் தேடிக் கொண்டிருந்த வேளையில்தான், உன்னிகிருஷ்ணனின் மகள் உத்ராவின் குரல் பொக்கிஷமாக அவருக்கு கிடைத்துள்ளது. இப்பாடல் மிக வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்று இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, இயக்குனர் விஜய் உடன் இணைந்து நான் பணியாற்றிய படங்கள் அனைத்தும் இசையில் பெரும் வெற்றி பெற்ற படங்கள். அதற்கு இந்த படமும் விதிவிலக்கல்ல என்று கூறினார். உத்ரா உன்னிகிருஷ்ணன் குரலில் உருவான இப்பாடலின் டீஸர் இன்று வெளியிடப்பட்டது. இப்படத்தின் பாடல்களுக்கான உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் 5-ந் தேதி இப்படத்தின் பாடல்களை வெளியிடவுள்ளனர்.
Cinema - Kollywood
Subscribe to:
Posts (Atom)

.jpg)

.jpg)
.jpg)
.jpg)

.jpg)
.jpg)
.jpg)
.jpg)

.jpg)


.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)



.jpg)
.jpg)


.jpg)


.jpg)
.jpg)

.jpg)

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)



Recent Comments