Select Menu

Slider

Powered by Blogger.

Blog Archive

Travel

Performance

‹
›

Cute

My Place

Slider

Racing

Videos

தி.மு.க பொருளாளரும் இளைஞர் அணி அமைப்பாளருமான மு.க.ஸ்டாலின்தான் இப்போது தி.மு.கவின் அரசியல் வாரிசு. ஆனால் அவரது வாரிசான உதயநிதிக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. திரைப்படத் தயாரிப்பாளராக சினிமாவுக்கு வந்த உதயநிதி, இப்போது நடிகராகவும் ஆகிவிட்டார். அவர் சினிமாவில் நடிப்பதே அரசியலில் தனக்கு நட்சத்திர அந்தஸ்த்து தேடிக் கொள்வதற்காகத்தான் என்ற விமர்சனங்கள் உண்டு. ஆனால் தான் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்ற பல்வேறு காலகட்டங்களில் உதயநிதி கூறிவந்திருக்கிறார்.
 இப்போது அதனை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார். மு.க.ஸ்டாலின் தற்போது நீலகிரி தொகுதியில் ஆ.ராஜாவை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். அவருடன் உதநிதியும் சென்று வருகிறார்.
 உதயநிதி பிரச்சாரம் செய்யாவிட்டாலும் தந்தைக்கு உதவியாக இருந்து வருகிறார். சத்யமங்கலம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எல்.பி.தர்மலிங்கம் வீட்டிற்கு விருந்துக்கு வந்த உதயநிதி அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 
அப்பா தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும்போது அவருக்கு துணையாக செல்வது என் வழக்கம். 11 வயதில் இருந்தே இதை கடைபிடித்து வருகிறேன். அப்படித்தான் இப்போதும் உதவிக்கு வந்திருக்கிறேன். ஆனால் எனக்கு அரசியலில் ஈடுபாடு கிடையாது. எனக்கு அரசியல் வேண்டாம். நல்ல நடிகனாக வளர வேண்டும் என்பதே என் ஆசை. அதுவும் பத்து பேரை அடித்து பன்ஞ் டயலாக் பேசுகிற ஆக்ஷன் ஹீரோ ஆசைகூட கிடையாது. 
 ஜாலியாக மக்களை சிரிக்க வைக்கிற நடிகனாக இருந்தால் போதும். தற்போது நண்பேன்டா படத்தில் நடித்து வருகிறேன். முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு இன்னும் 10 நாட்கள் இருக்கிறது. இந்த இடைவெளியில் அப்பாவுக்கு உதவ வந்திருக்கிறேன். என்றார்.
-
தெலுங்கு சினிமா வட்டாரங்களில் சித்தார்த்-சமந்தா பற்றிய காதல் செய்திகள் சில வருடங்களாகவே புகைந்து கொண்டிருக்கிறது. இதுபற்றி சித்தார்த் எதையும் வெளிப்படையாக சொல்ல மறுத்து வருகிறார். அப்படி தான் சொன்னால் சமந்தாவின் சினிமா கேரியர் பாதிக்கும் என்று நினைக்கிறாரோ என்னவோ, ரகசியம் காத்து வருகிறார். ஆனால் இந்த விசயத்தில் சமந்தா சில சமயங்களில் மனதில் உள்ளதை வெளிப்படுத்தி விடுகிறார். அப்படி அவரிடம சமீபத்தில் காதல் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, நான் காதலிப்பது உண்மைதான். ஆனால், நான் காதலிக்கும் நபரை மட்டும் இப்போதைக்கு சொல்ல மாட்டேன் என்று கூறியுள்ளார்.
 அதேசமயம், எனக்கு ரொம்ப பிடித்தமானவர்கள் நடிகர் சித்தார்த் மற்றும் தெலுங்கு டைரக்டர் திரி விக்ரம். அதற்காக இவர்களில் ஒருவர்தான் உங்கள் காதலரா? என்று கேட்காதீர்கள். அதற்கு எனனிடம் பதில் இல்லை என்று கூறியுள்ள சமந்தா, இன்னும் 4 வருடங்களுக்குப் பிறகுதான் கல்யாணம் செய்து கொள்வதைப் பற்றியே யோசிப்பாராம். 
அதுவரைக்கும் லவ் ட்ராக் தான் ஓடிக்கொண்டிருக்குமாம்.
-
தெய்வமகள், மை நேம் இஸ் மங்கம்மா சீரியலில் காமெடியாக நடித்து புகழ்பெற்றவர் ஷப்னம். தற்போது மடிப்பாக்கம் மாதவன், தொடரிலும் காமெடியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சின்னத்திரை ரசிகர்களை சிரிக்க வைப்பது சிரமமான வேலை என்கிறார் ஷப்னம் மேலும் அவர் கூறியதாவது: அழகாக இருந்துகொண்டு காமெடியா நடிக்கிறாயே என்று எல்லோரும் கேட்கிறார்கள். ஏன் அழகான பெண்கள் காமெடி பண்ணக்கூடாதா என்று நான் திருப்பி கேட்கிறேன். சின்னத்திரை சீரியல்கள் என்றாலே அழுவாச்சியாகத்தான் இருக்க வேண்டுமா சிரிக்க வைக்க கூடாதா. ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் சென்ற அவர்களை சிரிக்க வைப்பது பெரிய பாக்கியம்.
 அதோடு சின்னத்திரை ரசிகர்கள் ரொம்பவே சீரியசானவர்கள். அவர்களை சிரிக்க வைப்பது சிரமம். அதை சவாலாக செய்து வருகிறேன். சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை. அதற்காக நடிக்க மாட்டேன் என்று சொல்ல மாட்டேன் நல்ல கேரக்டர்கள் வந்தால், குறிப்பாக காமெடி கேரக்டர் வந்தால் நடிக்கலாம். என்கிறார் ஷப்னம்.
-
தமிழ் சினிமா ஹீரோக்களைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் வில்லனாக நடித்த ரஜினிகாந்த், சரத்குமார் உள்பட பல நடிகர்கள் பின்னர் ஹீரோவாகியிருக்கின்றனர். ஆனால் அவர்கள் அதன்பிறகு மற்ற ஹீரோக்கள் படத்தில் வில்லனாக நடிக்கவில்லை. அப்படியே அழைப்பு வந்தாலும் அவர்கள் ஏற்றுக்கொண்டதில்லை. ரஜினியைக் கொண்டு ஷங்கர் இயக்கிய சிவாஜி படத்தில் கூட முன்னாள் வில்லன் நடிகர் ஒருவரை மீண்டும் ரஜினியுடன் வில்லன் வேடத்தில் நடிக்க சொன்னதற்கு மறுத்து விட்டார். அதன் பிறகுதான் சுமன் அப்படத்தில் வில்லனாக நடித்தார். 
 இந்த நிலையில், மலையாளத்தில் வில்லனாக அறிமுகமாகி பின்னர் சூப்பர் ஸ்டார் நடிகராக திகழ்பவர் மோகன்லால். இப்போதும் தனக்கான இடத்தை தக்க வைத்து வருகிறார். அவர் நடித்த த்ரிஷ்யம் படம் தற்போது 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்திருக்கிறது. இருப்பினும், வில்லன் வேடங்களை அவர் தவிர்க்கவில்லை.
 கதையும், தனக்கு தரப்படும் கதாபாத்திரமும் பிடித்து விட்டால், புதுமுக ஹீரோக்களின் படமாக இருந்தாலும் வில்லன் வேடங்களில் நடித்து வரும் மோகன்லால், தற்போது நம்ம ஊர் பரத் மலையாளத்தில் நடித்து வரும் கூதறா என்ற படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். 
 நான் பெரிய ஹீரோ இந்த மாதிரி வில்லனாகத்தான் நடிப்பேன் என்று எந்த சட்டமும் பேசாமல் கதைக்குத் தேவையான வில்லனாகவே தன்னை மாற்றிக்கொண்டு நடித்து வருகிறார் மோகன்லால்.
-
நகரி, மார்ச் 30– பிரபல கன்னட நடிகர் அந்தன்குமார். இவர் கதா நாயகனாக நடித்த லவ் ஜங்சன் படம் சமீபத்தில் வெளியானது. இவர் தற்போது பக்த தவ்லி என்ற படத்தில் நடித்து வந்தார். அதன் படப்பிடிப்பு பாதியில் உள்ளது. அந்தன்குமார் தனது மனைவி சிந்து, 2 வயது மகன் மோகித் மற்றும் தாயார், தங்கையுடன் கர்நாடகா மாநிலம் கங்காபதி என்ற இடத்தில் இருந்து காரில் ஸ்ரீசைலம் கோவிலுக்கு சென்றார். கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு அவர்கள் நேற்று மாலை வீடு திரும்பினார். ஸ்ரீசைலம் மலைப்பாதையில் சென்றபோது எதிரே வந்த அரசு பஸ் கார் மீது மோதியது. இதில் கார் நொறுங்கியது.
 அதில் இருந்தவர்கள் காயம் அடைந்தனர். நடிகர் அந்தன்குமார் பலத்த காயத்துடன் அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
-
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் ‘ஐ’ படத்தில் நடித்து வருகிறார். அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் வெளிநாடுகளில் நடந்துள்ளது. இதில் விக்ரம் உடல் மெலிந்து ஒல்லியாக வித்தியாசமான கேரக்டரில் வருகிறார். இதற்காக உணவு கட்டுப்பாடு இருந்து கடும் உடற்பயிற்சிகள் செய்து உடம்பை வருத்தியுள்ளார். இதில் நாயகியாக எமிஜாக்சன் நடிக்கிறார். சுரேஷ்கோபி, சந்தானம் ஆகியோரும் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. இப்படத்துக்கு பின் விக்ரம் பூபதி பாண்டியன் இயக்கத்தில் நடிக்கப் போகிறாராம். 
இப்படத்துக்கு 'ராஜவேஷம்' என பெயர் வைத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. பூபதி பாண்டியன், காமெடி கலந்த ஆக்ஷன் படங்களை எடுத்தவர். இதையும் அது மாதிரியே கொண்டுவரப் போகிறாராம்.
வீரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜீத், கவுதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்பட வேலைகள் விரைவில் துவங்க உள்ளன. தற்போது திரைக்கதைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணி நடக்கிறது. இந்த படத்தில் கவுதம்மேனன் முக்கிய கேரக்டரில் நடிக்க போவதாக செய்திகள் பரவின. இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து உள்ளார். அஜீத் படத்தில் நடிக்கப் போவதாக வெளியான செய்திகள் வதந்திதான்.
 அப்படி எந்த திட்டமும் இல்லை என்றார்.
கமல் மகள் அக்ஷராவுக்கும் பழைய நடிகை ரதியின் மகன் தனுஜ்வில்வானிக்கும் காதல் மலர்ந்துள்ளதாக மும்பையில் பரபரப்பு செய்தி பரவி உள்ளது. அக்ஷரா தாய் சரிகாவுடன் மும்பையில் வசிக்கிறார். அக்கா சுருதிஹாசன் நடிகையானதால் அக்ஷராவையும் சினிமாவுக்கு கொண்டு வர முயற்சிகள் நடந்தன. தற்போது தனுஷ் ஜோடியாக இந்தி படமொன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பால்கி இப்படத்தை இயக்குகிறார். 1970 மற்றும் 80 களில் ரதி தமிழ் படங்களில் முன்னணி நடிகையாக கலக்கினார். 
புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள், உல்லாச பறவைகள், முரட்டுக்காளை, கழுகு உள்பட பல படங்கில் நடித்தார். ரதியின் மகன் தனுஜ் இந்திப் படங்களில் நடித்து வருகிறார். அக்ஷரா தனுஜ் இடையே நட்பு ஏற்பட்டு காதலாக மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் கிசுகிசுக்கின்றனர். 
இவர்கள் காதல் விவகாரம் தெரிந்து சரிகா அதிர்ச்சியாகி உள்ளார். அக்ஷரா இப்போது தான் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். காதல் விவகாரங்களில் சிக்கி எதிர்காலத்தை பாழ்படுத்த வேண்டாம் என்று அவர் கவலைப்படுகிறாராம். சினிமாவில் முழு கவனமும் செலுத்தும் படியும் காதலில் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்றும் மகளுக்கு அறிவுரை கூறி வருகிறார்.
வடிவேலு இரு வேடங்களில் நடித்த ஜெகஜால புஜபல தெனாலிராமன் படம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 11–ந்தேதி ரிலீசாகிறது. இதற்கிடையில் இந்த படத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. கிருஷ்ண தேவராயரை இழிவுபடுத்தும் காட்சிகள் படத்தில் இருப்பதாகவும் எனவே படத்தை தடை செய்ய வேண்டும் என்றும், தெலுங்கு அமைப்புகள் வற்புறுத்தி வருகின்றன. தமிழ்நாடு தெலுகு யுவசக்தி தலைவர் ஜெகதீஸ்வர ரெட்டி தலைமையில் இருபது தெலுங்கு அமைப்புகள் நேற்று தணிக்கை அதிகாரி பக்கிரிசாமியை சந்தித்து மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:– வடிவேலு ஏற்கனவே நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் மன்னர்களை கோமாளி போல் சித்தரித்தார். 
தற்போது அவர் நடித்து ரிலீசாக உள்ள ஜெகஜால புஜபல தெனாலிராமன் படத்தில் கிருஷ்ண தேவராயராகவும் தெனாலிராமனாகவும், இரு வேடங்களில் நடித்துள்ளார். இந்த படத்தில் கிருஷ்ண தேவராயரை இழிவுபடுத்துவது போல் காட்சிகள் இருப்பதாக சந்தேகிக்கிறோம். கிருஷ்ணதேவராயர் மக்களுக்கு ஏராளமான நன்மைகள் செய்தவர். 
திருப்பதி கோவிலை அவர் தான் கட்டினார். கிருஷ்ண தேவராயரை கொச்சைப்படுத்தும் காட்சிகள் இருந்தால் தெலுங்கு பேசும் மக்கள் வருத்தப்படுவார்கள். எனவே கிருஷ்ண தேவராயர் வரலாறு தெரிந்தவர்களை வைத்து படத்தை பார்க்க வைக்க வேண்டும். சர்ச்சை காட்சிகள் இருந்தால் அவற்றை நீக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விஷால், லட்சுமிமேனன் இடையே காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் பரவி உள்ளன. இருவரும் பாண்டிய நாடு படத்தில் ஜோடியாக நடித்தனர். தொடர்ந்து நான் சிகப்பு மனிதன் படத்திலும் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தில் விஷாலுடன் முத்த காட்சியில் லட்சுமி மேனன் துணிச்சலாக நடித்துள்ளார். இருவரும் தனிமையிலும், போனிலும் மணிக்கணக்கில் பேசுவதாகவும் கிசுகிசுக்கின்றனர். சமீபத்தில் நடந்த பட விழாவொன்றில் சக நடிகர்கள் விஷாலையும் லட்சுமி மேனனனையும் இணைத்து கிண்டலடித்து பேசி பரபரப்பு ஏற்படுத்தினர். லட்சுமிமேனனை மற்ற நடிகர்கள் கண்களில் காட்டாமல் விஷால் பொத்தி பொத்தி பாதுகாக்கிறார் என்று பேசினார்கள். இந்த காதல் கிசுகிசுகளுக்கு விஷால் பதில் அளித்துள்ளார். 
அவர் கூறும் போது லட்சுமிமேனனும் நானும் நட்பாகத்தான் பழகுகிறோம். எங்கள் இருவர் இடையிலும் நட்பை தாண்டி வேறு எதுவும் இல்லை. லட்சுமிமேனன் திறமையான நடிகை என்றார்.
ரஜினியின் வாழ்க்கையை பின்பற்றி ஒரு படம் தயாராகிறது. தனது வாழ்க்கையை பஸ் கண்டக்டராக அவர் தொடங்கியது முதல், சினிமாவில் நடிக்க வந்தது, சாதித்தது, ஆன்மீகத்தில் ஈடுபட்டது என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி இந்த படம் தயாராகிறதாம். தமிழில் நானே ரஜினிகாந்த், இந்தியில் மை ஹோ ரஜினிகாந்த் என்ற பெயரில் உருவாகும் இப்படத்தை பைசல்பை என்பவர் இயக்குகிறார். இப்படத்தில் ரஜினி வேடத்தில் ஆதித்யா மேனன் என்பவர் நடிக்கிறார். மலையாளம், தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்து வரும் இவர், தமிழில் ஆஞ்சநேயா, சத்ரபதி, நெறஞ்ச மனசு அசல், பில்லா, சிங்கம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.
 ரஜினியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கோலிவுட் நடிகர்களுக்கே கிடைக்காதபோது, தனக்கு கிடைத்திருப்பதை பெரும் பாக்கியமாக கருதும் ஆதித்யாமேனன், இது கிடைப்பதற்கரிய வாய்ப்பு. இந்த படத்தை நாங்கள் ரஜினிக்கு அர்ப்பணிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வசிக்கும் தமிழரான ஜாக் ஏ ராஜசேகர் இங்கிருந்து அமெரிக்கா செல்லும் தமிழ்ப்பட இயக்குனர்களுக்கும் பெரும் உதவியாக இருந்து வருகிறார். ரஜினி மற்றும் ஷங்கரின் 'எந்திரன்' படத்தின் ஹாலிவுட் தொழில்நுட்ப பிரிவின் சிஇஓ.,வாகவும் பணியாற்றியிருக்கிறார். தற்போது தயாரிப்பிலிருக்கும் பூலோகம் படத்தில் ஜாக்.ஏ.ராஜசேகரின் பங்கு பிரதானமாக இருக்கிறது. பூலோகம் படத்தில் நடித்திருக்கும் வெளிநாட்டு வில்லன்களை தந்து உதவியதே இவர்தான். தற்போது ஹாலிவுட்டில் ஒரு ஆங்கில படத்தை தயாரித்திருக்கிறார் ஜாக் ஏ ராஜசேகர். 
 இந்த படத்தின் பெயர் 'பிளட் அண் கர்ரி'. ஆங்கில படத்தை எடுத்தாலும், அதை இந்தியர்களின் அடையாளத்தோடு எடுத்திருக்கிறார். பிளட் கர்ரி படத்தின் கதை என்ன வெளிநாட்டிற்கு திருமணமாகி செல்லும் இந்திய பெண்களுக்கு ஏற்படும் துயரங்களை சொல்லுகிற படம்தானாம் இது. மனைவி இறந்து கிடக்கிற காட்சியிலிருந்து படம் துவங்குகிறது.
 அதிர்ச்சியான கணவன் அமெரிக்காவின் அவசர உதவிக்கான 911 எண்ணை உதவிக்கு அழைக்க முற்படுகிறான். அந்த நேரம் பார்த்து வாசலில் காலிங் பெல் ஒலிக்கிறது. கதவு லென்ஸ் வழியாக பார்த்தால், மனைவியால் பார்ட்டிக்கு அழைக்கப்பட்ட நண்பர்கள் நிற்கிறார்கள். வேறு வழியில்லாத அந்த கணவன், மனைவியின் உடலை வீட்டுக்குள் மறைத்து வைத்துவிட்டு அவர்களை உள்ளே அழைக்கிறான். 
 அவர்களுக்கு சந்தேகம் வந்துவிடாதபடி அவன் சமாளிப்பது நகைச்சுவையாகவும், பரபரப்பாகவும் நகர்ந்து கொண்டிருக்கிறது. அவள் ஏன் இறந்தாள்? அவளது பிணத்தை என்ன செய்தான்? என்பதை படத்தின் முடிவில் அதிர்ச்சியடைகிற விதத்தில் சொல்லியிருக்கிறாராம் படத்தின் இயக்குனர் அதுல் ஷர்மா. உலகம் முழுவதும் ஒரே நாளில் இந்த படத்தை வெளியிடும் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார் ஜாக் ஏ.ராஜசேகர்.
கமலுடன் தேவர் மகன், குருதிப்புனல் உள்பட சில படங்களில் வில்லனாகவும் நடித்தவர் நாசர். ஆனால் வில்லனாக வேகமாக வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில் அவதாரம் படம் மூலம் திடீரென நாசர் ஹீரோவாக மாறினார். அதனால், அதையடுத்து அவரை வில்லன் வேடங்களுக்கு யாருமே அழைக்கவில்லை. அதனால் அப்பா, மாமா என்று முழுநேர கேரக்டர் நடிகராக மாறினார் நாசர். இந்தநிலையில், தனது விஸ்வரூபம் படத்தில் நாசருக்கு ஒரு தீவிரவாதி வேடம் கொடுத்த கமல், இப்போது தனது உத்தம வில்லன் படத்தில் மீண்டும் அவரை வில்லனாக்கியிருக்கிறார். இப்படத்தில் 8-ம் நூற்றாண்டு, 21ம் நூற்றாண்டு என இரண்டு காலகட்டத்து நடிகராக கமல் நடிக்கும் நிலையில், 8-ம் நூற்றாண்டு கமலுடன் மோதும் வில்லனாக நாசர் நடிக்கிறாராம்.
 அதிலும் சமீபகாலத்து படங்கள் போல் இல்லாமல், எம்ஜிஆரும், நம்பியாரும் சீன் பை சீன் மோதிக்கொள்வது போன்று இருவரும் மோதிக்கொள்கிறார்களாம். அதனால் இப்படத்தில் நடிக்க 25 நாட்களுக்கு மேல் கால்சீட் கொடுத்திருக்கிறார் நாசர். அதோடு, நீண்ட நாளைக்குப்பிறகு ஒரு பெரிய வில்லன் வேடம் கிடைத்திருப்பதால், தற்போது பிரகாஷ்ராஜ் போன்ற வில்லன் நடிகர்கள் சரிவை சந்தித்திருக்கும் இந்த நேரத்தில் அந்த காலி இடத்தை தான் நிரப்பி விட வேண்டும் என்றும் வரிந்து கட்டியிருக்கிறார் நாசர்.
-
சமீபகாலமாக மாஜி நடிகைகள் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுப்பது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், ராதிகா, மீனா, ரோஜா, நதியா, அம்பிகா, ஊர்வசி, சிம்ரன், தேவயானி, மதுபாலா உள்ளிட்ட பல நடிகைகள் மீண்டும் சினிமாவில் கோலோச்சி வருகின்றனர். குறிப்பாக, தமிழ், மலையாளத்தில் அதிகமாக நடித்து வரும் இவர்களில் இப்போது கெளசல்யாவும் என்ட்ரி கொடுத்துள்ளார். தாமிரபரணிக்கு பிறகு டைரக்டர் ஹரியும், விஷாலும் இணையும் பூஜை படத்தில் கெளசல்யாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடம் கொடுத்திருக்கிறார்களாம். காலமெல்லாம் காதல் வாழ்க என்ற படத்தில் முரளியுடன் நடித்த கெளசல்யா அதன்பிறகு சொல்லாமலே, ப்ரியமுடன், ஆசையில் ஓர் கடிதம், வானத்தைப்போல என பல படங்களில் நடித்தார்.
 பின்னர் கதாநாயகி வாய்ப்பு குறைந்தபோது, ஜெயம்ரவி நடித்த சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் அவருக்கு அண்ணியாக நடித்தார். தொடர்ந்து படங்கள் இல்லாததால் சொந்த ஊரான பெங்களூருக்கு சென்று விட்ட கெளசல்யா, இப்போது மீண்டும் பூஜை படம் மூலம் தமிழுக்கு வந்திருப்பவர், வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க விருப்பம் தெரிவித்து தீவிர முயற்சி எடுத்து வருகிறார். 
 மேலும் சில நடிகைகளைப்போன்று வெட்டி பந்தா பண்ணாத இயல்பான நடிகை என்பதால், கெளசல்யாவின் மீது சில படாதிபதிகளின் பார்வை விழுந்திருக்கிறது. அதனால், அடுத்து கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக அவர் ஒரு பெரிய ரவுண்டு வரும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது.
-
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் 2வது படம் கத்தி. இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்க்கு இது 57வது படமாகும். நல்லவன், கெட்டவன் என இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடிக்கும் கத்தியில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். தமிழில் ஒரு சரியான என்ட்ரிக்காக காத்திருந்த சமந்தா, சூர்யாவுடன் அஞ்சான் படத்தில் நடித்த கையோடு இப்போது விஜய்யுடன் கத்தியில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆரம்பத்திலிருந்தே ஆக்ஷன் சம்பந்தப்பட்ட காட்சிகளையே படமாக்கி வந்த முருகதாஸ், இப்போது ரொமான்ஸ், பாடல் என்று அடுத்த கட்டத்துக்கு சென்றிருக்கிறார். அதனால், இதுவரை சமந்தாவை கண்டுகொள்ளாமல் இருந்தவர் இப்போது, அவரையும் வரவைத்து விஜய்யுடன் ரொமான்ஸ் காட்சிகளாக படமாக்கிக்கொண்டிருக்கிறார்.
 ஆரம்பத்தில் கலகலப்பு, கிளுகிளுப்பு என்று காட்சிகளை நகர்த்தியவர், தற்போது ஐதராபாத்தில் விஜய்-சமந்தா கலக்கல் நடனமாடும் பாடலை படமாக்கி வருகிறார். ஏற்கனவே நடனத்தில் புயலான விஜய், இந்த பாடல் காட்சியில் சமந்தாவே அசறும் அளவுக்கு சில நடன அசைவுகளில் பின்னி பெடலெடுத்து விட்டாராம். அதைப்பார்த்து சமந்தா அசந்து விட்டாராம். 
நானும் இதுவரை எத்தனையோ நடிகர்களுடன் நடனமாடியிருக்கிறேன். ஆனால் விஜய்யின் துடிப்பும், வேகமும் வேறு யாரிடத்திலும் கண்டதில்லை. மேலும், அவரைப்போலவே நாமும் அதிரடியாக நடனமாட வேண்டும் என்ற உற்சாகமும் எனக்குள் ஏற்பட்டது என்கிறார்.
-
கடந்த கால நடிகைகளுக்கு ரஜினியுடன் ஒரு படத்திலேனும் நடிக்க வேண்டும் என்று இருந்து வந்த கனவு இப்போது, அப்படியே அஜீத் பக்கம திரும்பி விட்டது. என்றாலும், ரஜினி என்ற அந்த ஒரு வார்த்தைக்கு இருக்கிற ஈர்ப்பு இன்னமும் நடிகைகளுக்கிடையே இருக்கத்தான் செய்கிறது. அதிலும் குக்கூ என்ற படத்தில் நடித்துள்ள மலையாள வரவு நடிகை மாளவிகா, ரஜினியின் தீவிரமான ரசிகையாம். அவரது ஸ்டைலான நடிப்பு அவருக்கு ரொம்ப பிடிக்குமாம். அப்படிப்பட்டவர், சமீபத்தில் தான் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுக்க சென்றிருநதபோது, அதே சேனலுக்கு ரஜினியும் பேட்டி கொடுக்க வந்திருக்கிறார் என்ற செய்தி காதுக்கு வந்ததும் துள்ளிக்குதித்து விட்டாராம். 
ரஜினியை டிவியில் பார்த்தாலே குதூகலிக்கும் நடிகைக்கு, அவரும் தான் இருக்கிற சேனலுக்கு வந்திருக்கிறார் என்றதும் தான் கொடுத்துக்கொண்டிருந்த பேட்டியை பாதியில் நிறுத்தி விட்டு ரஜினியை காண ஆவலோடு ஓடினாராம். ஆனால், ரஜினி பேட்டி அளிக்கும் ஸ்டுடியோவுக்குள் அதிகமான நபர்கள் அனுமதிக்கப்படவில்லையாம். 
இருப்பினும் ரொம்ப தூரத்தில் நின்றபடியே அவரை பார்த்து ரசித்தாராம் மாளவிகா. அதோடு, அவர் பேட்டி அளித்துவிட்டு செல்லும் வரைக்கும் அங்கே நின்று கொண்டிருந்தவர் அவர் செல்லும்போது அருகில் வந்து ரஜினியை பார்த்து மகிழ்ந்தாராம். தமிழ் சினிமாவுக்கு வந்து ரஜினியுடன் நடிக்கிறேனோ இல்லையோ அவரை பக்கத்தில் நின்று பார்த்து விட்டேன். அந்த ஒரு திருப்தி போதும் என்று தனது மகிழ்ச்சியை தெரிவித்துக்கொண்டிருக்கிறார்
-
இது கதிர்வேலன் காதல் படத்தில் நடித்தபோது நயன்தாராவை தனது ஆஸ்தான நாயகி போன்று பில்டப் கொடுத்தார் உதயநிதி. எனது முதல் படமான ஒரு கல் ஒரு கண்ணாடியில் நடிக்கவே அவரைத்தான் அழைத்தோம். ஆனால் அப்போது அவர் நடிக்கிற மூடில் இல்லாததால்தான் ஹன்சிகாவை புக் பண்ணினோம் என்றுகூட சொன்னார். அதோடு தனது மூன்றாவது படமான நண்பேன்டா படத்திற்கும் அவரையே புக் பண்ணியவர் இனி எனது படங்களில் அதிகமாக நயன்தாராதான் நடிப்பார் என்றும் சொன்னார். 
 ஆனால், இப்போது பார்த்தால், நண்பேன்டா படத்திற்கு இரண்டு வாரம் மட்டுமே கால்சீட் கொடுத்து நடித்த நயன்தாரா, சிம்பு, ஜெயம்ரவியுடன் நடிக்கும் படங்களுக்கு கால்சீட் கொடுத்து நடித்து வந்தவர், இப்போது சில தெலுங்கு படங்களுக்கும் கால்சீட்டை வாரி வழங்கி விட்டு உதயநிதி படத்திற்கு கேட்ட நேரத்தில் கால்சீட் கொடுக்காமல் டீலில் விட்டுக்கொண்டிருக்கிறாராம். இதனால் அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு செல்ல முடியாமல் நின்று கொண்டிருக்கிறார்கள்.
 அதோடு, ஏற்கனவே நண்பேன்டா படத்தில் நடிக்க காத்திருநத காஜல்அகர்வாலை கழட்டிவிடடுவிட்டு, நயன்தாராவை கமிட் பண்ணியதை நினைத்து வருத்தத்தில் இருக்கிறாராம் உதயநிதி. ஆக, இதன்பிறகு உதயநிதியின் படங்களில் நயன்தாரா இருக்க மாட்டார் என்று தெரிகிறது
-
தெய்வத்திருமகள் படத்திற்கு பிறகு விக்ரம் நடித்த ராஜபாட்டை, தாண்டவம், டேவிட் என பல படங்கள் வரிசையாக அவருக்கு தோல்வியை கொடுத்தன. அந்த சமயத்தில் கரிகாழன் போன்ற சில படங்கள் ஆரம்பிக்கப்பட்டபோது பிரச்னைகளில் சிக்கியதால் முடக்கப்பட்டன. இதனால் அடுத்தகட்டததுக்கு தாவ முடியாமல் அவர் தடுமாறிக்கொண்டு நின்ற நேரமதான் ஐ படத்துக்கு அழைப்பு விடுத்தார் ஷங்கர். அதனால், மற்ற படங்களை அப்படியே மறந்து விட்டு ஷங்கர் படத்திற்காக தன்னை தயார்படுத்தினார்.
 ஒவ்வொரு கெட்டப்புகளுக்கேற்பவும் தன்னை முழுசாக மாற்றிக்கொண்டு நடித்து வந்தவர், புதிய படங்களுக்கான கதைகள் கேட்ககூட மறுத்து வந்தார். ஆனால், இப்போது ஐ படப்பிடிப்பு முடிந்து விட்டதால் அடுத்து நடிப்பதற்காக சில டைரக்டர்களிடம் கதை கேட்டு வருகிறார். ஆனபோதும், சில படங்களில நடிக்க சம்மதம் சொல்லியிருக்கும் விக்ரம், இன்னமும் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளாமல் காலதாமதம் செய்து வருகிறார். 
என்ன காரணம் என்று கேட்டவர்களிடத்தில், ஐ படத்தை ரொம்ப எதிர்பார்க்கிறேன். மேலும், பல படங்கள் ஓடாததால் எனது சம்பளமும் இறங்கி விட்டது. அதனால் ஐ படத்தின் ரிலீசுக்குப்பிறகுதான் புதிய படங்களில் நடிப்பதற்கான சம்பளம் பேசுவேன் என்று கூறிக்கொண்டிருக்கிறார். ஆக, ஐ படத்தின் வெற்றியை பொறுத்து விக்ரமின் படக்கூலி கடுமையாக எகிறும் என்று தெரிகிறது.
-
சமீபத்தில் வெளியான நெடுஞ்சாலை படத்தில் நடித்திருப்பவர் ஷிவதா. நெடுஞ்சாலை படத்திற்காக இரண்டு பட வாய்ப்புகளை தவிர்த்தேன் என்கிறார் மேலும் அவர் கூறியதாவது: நெடுஞ்சாலை எனது முதல் படம் என்று மீடியாக்களில் எழுதி வருகிறார்கள். அது தவறு நெடுஞ்சாலைக்கு முன்பு மலையாளத்தில் பாசில் சார் இயக்கிய லிவிங் டூ கெதர் படத்தில் நடித்து விட்டேன். அந்தப் படத்தை பார்த்துவிட்டுதான் கிருஷ்ணா சார் நெடுஞ்சாலை படத்துக்கு அழைத்தார். நெடுஞ்சாலையின் கதை அற்புதமானது. மங்கா கேரக்டர் என் மனசுக்கு பிடித்த கேரக்டர், அதனால் அந்தப் படம் முடியும் வரை வேறு படங்களில் நடிக்ககூடாது என்று முடிவு செய்தேன். 
இரண்டு பட வாய்ப்புகளை தவிர்த்தேன். நெடுஞ்சாலை இரண்டு வருடங்கள் தயாரிப்பில் இருந்தது. பொறுமையாக காத்திருந்து நடித்தேன். 6 மாதங்கள் வரை பயிற்சி எடுத்தேன். படத்தில் மலையாள பெண் கேரக்டர் என்பதால் நானே டப்பிங் பேசியிருக்கிறேன். இப்போது படம் ரிலீசாகி என் நடிப்பை எல்லோரும் பாராட்டும்போது சந்தோஷமாக இருக்கிறது. 
இனி அடுத்த படங்களில் நடிக்க தயாராகிவிட்டேன். தீவிரமாக கதை கேட்டு வருகிறேன். இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று எந்த வரைமுறையும் வைத்துக் கொள்ளவில்லை. கேரக்டருக்கு என்ன தேவையோ அப்படி நடிப்பேன் என்கிறார் ஷிவதா.
-
தமிழில் வாமணன் படத்தில் அறிமுகமானவர் ப்ரியா ஆனந்த். வாமணன் வெற்றி பெறாததால் ப்ரியாவுக்கும் பெரிதாக சான்ஸ் கிடைக்கவில்லை. தெலுங்கு படங்களுக்கு போய்விட்டார். பிறகு திடீரென இங்கிலீஸ் விங்கிலீஸ் இந்திப் படத்தில் நடித்தார். நாடோடிகள் இந்தி ரீமேக்கில் நடித்தார். அசின், ஸ்ருதி மாதிரி ப்ரியா ஆனந்தும் இந்தி நடிகையாகிவிட்டார் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென்னு எதிர்நீச்சல் மூலம் தமிழுக்கு யூ டேர்ன் அடித்து விட்டார். இப்போது வை ராஜா வை, அரிமா நம்பி, ஒரு ஊர்ல ஒரு ராஜா, இரும்பு குதிரை என ஒரே நேரத்தில் 4 படங்களில் நடித்து வருகிறார். இந்திப்பக்கம் திரும்பவில்லை. 
அது ஏன் என்பதற்கு ப்ரியா அளித்துள்ள விளக்கம்: வாமணன் சரியாக போயிருந்தால் தமிழ்ல நல்ல இடத்துல இருந்திருப்பேன். தெலுங்கு, இந்தின்னு எதிர்நீச்சல் போட்டு எதிர்நீச்சல் படம் மூலமாக இப்போ பிசியாயிட்டேன். இந்திப் படத்துல நடிக்கணுங்ற ஆசையெல்லாம் கிடையாது, இங்கிலீஷ் விங்கிலீசுக்கு ஆடிசன் நடந்தப்போ சும்மா கலந்துகிட்டேன் ஓகே ஆயிடுச்சு. அதற்கு பிறகு இந்திப் பட சான்ஸ் நிறைய வந்தது. 
ஆனால் அவர்கள் கேட்ட தேதிகளை தெலுங்கு படத்துக்கு கொடுத்திருந்தேன். அதனால நடிக்க முடியல. இப்பவும் இந்திப் படங்கள் வருது ஆனால் தமிழ் படத்துல பிசியா இருக்குறதால நடிக்க முடியல. விரைவில் இந்திப் படம் ஒன்றில் நடிப்பேன். அதுக்கான பேச்சு வார்த்தை முடிஞ்சிருக்கு. அவர்களே முறைப்படி அறிவிப்பாங்க. என்கிறார் ப்ரியா.
-
இளையராஜா துவங்க இருக்கும் ரசிகர்மன்றத்திற்கு அவரது வாரிசும், பிரபல பாடகியுமான பவதாரணி தலைவராகிறார். இசைஞானி இளையராஜா சினிமாவுக்கு வந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இளையராஜாவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களை ஒரு குடையின் கீழ் இணைக்க அவர் முடிவு செய்திருக்கிறார். இதற்காக இளையராஜா ரசிகர் மன்றம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. வருகிற ஏப்ரல் 5ந் தேதி மதுரை தமுக்கம் மைதனாத்தில் நடக்கும் விழாவில் இது முறைப்படி துவக்கி வைக்கப்பட இருக்கிறது. முன்னதாக இந்த ரசிகர் மன்றத்தின் தலைவராக இளையராஜாவின் மகனும், பிரபல இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜா செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 
இந்நிலையில், கார்த்திக் ராஜாவுக்கு நிறைய பணிகள் இருப்பதால் அவரால் அந்த பொறுப்பு வகிக்க முடியாத சூழல் உள்ளது. இளையராஜா, எவ்வளவோ சொல்லியும் கார்த்திக் ராஜா தலைவர் பொறுப்பு வகிக்க மறுத்துவிட்டார். கார்த்திக் பதிலாக யுவனிடமும் பேசி பார்த்துள்ளனர்.
 ஆனால் அவரும் படங்களின் இசையில் பிஸியாக இருப்பதால் மறுத்துவிட்டார். அதனால் இவர்களுக்கு பதில் அவர்களது சகோதரியான பவதாரணி தலைவராக பொறுப்பேற்கிறார். மதுரையில் நடக்கும் இசை நிகழ்ச்சியின் போது இதற்கான அறிவிப்புகள் வெளியாக இருக்கின்றன. இதுகுறித்து பவதாரணி கூறுகையில், அப்பாவின் ரசிகர் மன்றம் மூலம் நிறைய நற்பணிகளை செய்ய உள்ளோம்.
 முதற்கட்டமாக பண்ணபுரத்தில் பள்ளிக்கூடம் ஒன்றை கட்ட இருக்கிறோம். தொடர்ந்து எங்களது ஜீவா அறக்கட்டளை சார்பிலும், அப்பாவின் ரசிகர் மன்றம் மூலம் நிறைய நல்ல காரியங்களை செய்ய இருக்கிறோம். தற்போது வரை சுமார் 1 கோடிக்கும் அதிகமானபேர் அப்பாவின் ரசிகர் மன்றத்தில் இணைந்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
-
மலையாள சினிமாவின் அனைத்து ரெக்கார்டுகளையும் உடைத்து எறிந்துவிட்டு 100 நாளை கடந்து விட்டது த்ரிஷ்யம். மோகன்லால், மீனா நடித்த இந்தப் படம் 150 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. இதில் 60 தியேட்டர்களில் தொடர்ந்து ஒடி 100 நாட்களை கடந்திருக்கிறது. சென்னை, பெங்களூரு, புனே, மும்பையில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்களிலும் 100 நாளை கடந்திருக்கிறது. கேரள தியேட்டர்களில் மட்டும் 40 கோடி வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் 10 கோடி வசூலித்துள்ளது. 
தொடர்ந்து ஷிப்டிங் தியேட்டர்களிலும் ஓடி வசூலைக் கொட்டிக் கொண்டிருக்கிறது. தொலைக் காட்சி உரிமம், ரீமேக் உரிமம் அனைத்தையும் சேர்த்தால் த்ரிஷ்யத்தின் வியாபார மதிப்பு 100 கோடியை எட்டும் என்கிறார்கள். இது மலையாள சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனை. 
 த்ரிஷ்யம் தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி மொழிகளில் ரீமேக் ஆகிறது. ஒரே நேரத்தில் அதிக மொழிகளில் ரீமேக் ஆகும் மலையாளப்படமும் த்ரிஷ்யம்தான்.
-
சந்தோஷ் சிவன் இயக்கியுள்ள 'இனம்' படத்திற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. சிங்களர்களுக்கு ஆதரவாக படம் எடுக்கப்பட்டுள்ளதாக எதிர்ப்பு எழுந்துள்ளநிலையில், தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் 'இனம்' படத்திற்கு ஆதரவாக சில கருத்துக்களை வெளியிட்டது. திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் திரைப்படங்களை உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் தமிழர்கள் புறக்கணிக்க முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதை கருத்தில் கொண்டு இனம் படத்திலிருந்து ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கி விட்டதாக திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் லிங்குசாமி தெரிவித்திருக்கிறார்.. 
 “இலங்கையில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம் தமிழர்களின் துன்பங்களையும், துயரங்களையும் உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே 'இனம்' திரைப்படத்தை வாங்கி வெளியிட்டோம். இந்நிலையில் சில முரண்பாடான கருத்துக்கள் உருவானதைத் தொடர்ந்து 'இனம்' படத்தை தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க உறுப்பினர்களுக்கும், சில தமிழ் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் திரையிட்டுக் காட்டினோம்.
 படத்தைப் பார்த்த பிறகு தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கமும், தமிழ் அமைப்பைச் சேர்ந்தவர்களும் கேட்டுக் கொண்டதன்படி கீழே குறிப்பிட்டுள்ள,

 1. பள்ளிக்கூடக் காட்சி 

 2. புத்தமதத் துறவி தமிழ்க் குழந்தைகளுக்கு மாதுளம்பழம் கொடுக்கும் காட்சி

 3. சிங்கள ராணுவத்தான் குழந்தை போட்டோ வைத்திருக்கும் காட்சி 

 4. தலைவர் கொல்லப்பட்டார் என்ற ஒரு காட்சியின் வசனம் 

 5. படத்தின் இறுதியில் காட்டப்படும் கார்டில் 38,000 பேர் கொல்லப்பட்டார்கள் 

என்ற தகவல், என்கிற ஐந்தும் படத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன், ” என்று குறிப்பிட்டுள்ளார் லிங்குசாமி. இதை முதலிலேயே செய்திருந்தால் இத்தனை பிரச்சனை வந்திருக்காதே..
-
பிரபல நடிகை சீதாவின் தந்தை பி.எஸ்.மோகன்பாபு வயது 76 அவர் சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த அவர் இன்று அதிகாலை மூன்று மணியளவில் மாரடைப்பால் காலமானார். இறந்த மோகன்பாபு அவர்களுக்கு பி.எஸ்.சந்திராவதி என்ற மனைவியும் பாண்டு, துஷ்யந்த் என்ற இரண்டு மகன்களும் சீதா என்ற ஒரு மகளும் உள்ளனர். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள புஷ்பா காலனியில் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப் பட்டுள்ளது.
 பின்பு இறுதி சடங்குகள் இன்று மாலை 3.30 மணியளவில் போரூரில் உள்ள மின்மயானத்தில் நடைபெற உள்ளது.
-
தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தின் மகனான சுப்பு பஞ்சு, 'அரசி' தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிகராக அறிமுகமானவர். 2008 ஆம் ஆண்டு வெளிவந்த 'சரோஜா' படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் நடிகராக அறிமுகமான சுப்பு பஞ்சு, தொடர்ந்து 'பாஸ் (எ) பாஸ்கரன்' படத்தில் ஆர்யாவின் அண்ணனாக நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் யதார்த்தமாக நடித்து தமிழ் சினிமாவில் தன்னை ஒரு சிறந்த குணச்சித்திர நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டார். 
அதையடுத்து “மங்காத்தா, கலகலப்பு, மாலைப் பொழுதின் மயக்கத்திலே, சென்னையில் ஒரு நாள், சேட்டை, பட்டத்து யானை, தலைவா, நவீன சரஸ்வதி சபதம், பிரியாணி, சமீபத்தில் வெளிவந்த நிமிர்ந்து நில்' உட்பட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். 
தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். நடிகராக மட்டுமல்லாமல் அவருடைய அருமையான குரல் மூலம் 'வாய்ஸ் ஆக்டர்' ஆகவும் சிவாஜி, கந்தசாமி படங்களில் பின்னணிக் குரல் கொடுத்து 'எங்கேயோ கேட்ட குரல்' மாதிரி இருக்கிறதே என அவரைப் பற்றி பேச வைத்தார். 'சிவாஜி' படத்தில் வில்லனாக நடித்த சுமன், 'கந்தசாமி' படத்தில் வில்லனாக நடித்த முகேஷ் திவாரிக்கும் அவர்களே பேசியது போன்ற பின்னணிக் குரலைக் கொடுத்தார்.
 தற்போது, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில், இந்தியா முழுவதும் மே 1ம் தேதி வெளிவர இருக்கும் 'தி அமேசிங் ஸ்பைடர் மேன் 2' ஹாலிவுட் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ள 'ஜேமி ஃபாக்ஸ்'-க்கு பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார் சுப்பு பஞ்சு. 2012 ஆம் ஆண்டு வெளிவந்த 'தி அமேசிங் ஸ்பைடர்மேன்' படத்தின் அடுத்த பாகமாக வெளிவர உள்ள 'தி அமேசிங் ஸ்பைடர்மேன் 2' திரைப்படம் உலக அளவில் மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 இத்திரைப்படம் 2டி, 3டி, ஐமேக்ஸ் 3டி மற்றும் ஆரோ 11.1, டால்பி அட்மாஸ் தொழில்நுட்பங்களில் திரையிடப்பட உள்ளது. 'மிகப் பிரம்மாண்டமான ஹாலிவுட் படமான 'தி அமேசிங் ஸ்பைடர்மேன் 2' படத்தில் மிக முக்கிய கதாபாத்திரம் ஒன்றுக்கு பின்னணி குரல் கொடுத்தது மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்துப் பார்க்கும் படமாக இந்த படம் அமையும். ஜேமி ஃபாக்ஸ் நடித்துள்ள கதாபாத்திரத்திற்கேற்ப ஏற்ற, இறக்கங்களுடன் இருக்கிற என்னுடைய பின்னணிக் குரலும் இந்தப் படத்தில் பேசப்படும் விதத்தில் இருக்கும், ” என ஹாலிவுட் படத்தில் குரல் கொடுத்ததைப் பற்றி மகிழ்ச்சி பொங்கக் கூறுகிறார் சுப்பு பஞ்சு.
-
முன்பெல்லாம் நாடகங்களில் நடித்து நடிப்பு பயிற்சி பெற்ற பிறகே திரைப்படங்களில் நடிக்க வருவார்கள். எம்ஜிஆர், சிவாஜி போன்ற ஜாம்பவான்கள் சினிமாவுக்கு வந்தது அப்படித்தான். இன்றைக்கு காலம் மாறிப்போச்சு. யார் வேண்டுமானாலும் ஹீரோவாகலாம் என்ற நிலை. ஆனாலும், நாடகங்களில் நடித்து முறையாக ஏழு ஆண்டுகள் பயிற்சி பெற்று சினிமாவுக்கு வந்துள்ளார் நெடுஞ்சாலை படதத்தின் நாயகனான ஆரி. மேஜிக் லாந்தர்ன், தியேட்டர் நிஷா மற்றும் இன்லேன்ட் தியேட்டர்ஸ் போன்ற நாடகக் குழுக்களில் நடித்த இவர், இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் தாமிரா இயக்கத்தில் 2010-ல் ரெட்டைச் சுழி படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர். 
இந்திய சினிமாவின் சிகரங்களான பாலச்சந்தர் மற்றும் பாரதிராஜாவுடன் நடித்த பெருமைக்குரியவர். பிரகாஷ் ராஜ் தயாரித்த இனிது இனிது காதல் இனிது படத்தில் நடித்த புதுமுகங்களுக்கு நடிப்புப் பயிற்சி கொடுத்தவர் ஆரிதான். இதுபோல பல புதுமுகங்களுக்கு இவர் பயிற்சி அளித்துள்ளார். இவர் ஒரு ஃபிட்னஸ் பயிற்சியாளரும் கூட.
 நடிகர்களை வயதுக்கேற்ற தோற்றத்துக்குக் கொண்டு வருவதில் ஸ்பெஷலிஸ்ட். கற்றது தமிழில் ஜீவா, மிருகம் படத்தில் ஆதி, சுப்பிரமணியபுரம் படத்தில் சசிகுமார், ஆயிரத்தில் ஒருவன் பார்த்திபன், யோகியில் அமீர் ஆகியோருக்கு இந்த ஃபிட்னெஸ் மற்றும் வயதுக்கேற்ற தோற்றம் கொண்டு வந்தவர் ஆரிதான். இதுதவிர ஆடும் கூத்து படத்திலும் ஆரி நடித்துள்ளார்.
 2011-ல் மாலைப் பொழுதின் மயக்கத்திலே படத்தில் நாயகனாக நடித்தார் ஆரி. அடுத்து அவர் நடித்த படம்தான் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியாகியுள்ள நெடுஞ்சாலை. ஆரியின் நடிப்பும் விறுவிறுப்பான கதையோட்டமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. திரையுலகில் ஆரி எதிர்ப்பார்த்த அவருக்கான இடத்தை இந்த நெடுஞ்சாலை பெற்றுத் தந்துள்ளதாகவே இயக்குநர்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.
-
கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் விரைவில் தொடங்கயிருக்கிறது. ஆனால், அப்படத்திற்கான வேலைகள் தொடங்கப்பட்டதில் இருந்தே சில முன்னணி நடிகைகளிடம் கால்சீட் கேட்டு வந்தார் கெளதம். ஆனால் அவர் எதிர்பார்த்த நடிகைகளை விட, எதிர்பார்க்காத த்ரிஷா உள்ளிட்ட சில நடிகைகளே கால்சீட் கொடுக்க நான் நீ என்று முட்டி மோதிக்கொண்டிருந்தார்கள். இதனால், த்ரிஷா தனது விண்ணைத்தாண்டி வருவாயா ஹிட் படத்தில் நடித்தவர் என்பதால் செண்டிமென்ட் கருதி அவரை இரண்டில் ஒரு கதாநாயகியாக்க நினைத்தார். 
ஆனால், அஜீத்துடன் அவர் நடித்த ஜீ, கிரீடம் என இரண்டு படங்கள் தோல்வியடைந்த செண்டிமென்டும் இருப்பதால், இந்தமுறை ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று த்ரிஷாவை தள்ளி வைத்துவிட்டார். அதற்கடுத்துதான், அஜீத்துடன் இதுவரை ஜோடி சேராத நடிகைகளாக பட்டியலிட்ட கெளதம்மேனன், அனுஷ்காவிடம் பேசினார்.
 அஜீத் படம் என்பதால் தெலுங்கில் பிசியாக நடித்து வந்தபோதும், எப்படியாவது கால்சீட் தந்து விடுகிறேன் என்று நம்பிக்கை வாக்குறுதி அளித்தார். அதனால், ஒரு கதாநாயகி ஓ.கே, அடுத்து இன்னொரு நாயகியாக யாரை கமிட் பண்ணலாம் என்று பாலிவுட் பக்கம் அலைந்து திரிந்து கொண்டிருந்தார் கெளதம்.
 ஆனால், இப்போது அஜீத் தரப்பே முன்வந்து, எதற்கு பாலிவுட் நடிகை, அதான் ஐ படத்தில் நடித்துள்ள ஹாலிவுட் நடிகை எமிஜாக்சன் இருக்கிறாரே என்று கெளதமுக்கு எடுத்துக்கொடுத்துள்ளனர். அதனால், என்ன சம்பளம் கேட்டாலும் கொடுத்து எமியை புக் பண்ணி விடுவது என்று அவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் கெளதம்மேனன்.
 ஆக, தாண்டவம் படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்த அனுஷ்கா-எமி ஜாக்சன் ஆகிய இருவரும் மீண்டும் அஜீத்துடன் இணைகின்றனர்
-
கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று எந்த டைரக்டர் லட்சுமிமேனனைப்பார்த்து சொன்னாலும், கோபக்கனல் பறக்க அவர்களைப்பார்த்து கண்களை உருட்டுவார். அதில் தெரியும் ஆவேசம் டைரக்டர்களை அடுத்த வார்த்தை பேச விடாமல் செய்து விடும். அந்த அளவுக்கு கவர்ச்சிக்கு தான் ஜென்ம எதிரி போன்று தன்னை வெளிப்படுத்தி வந்தார் லட்சுமிமேனன். ஆனால், தற்போது விஷாலுடன் நடித்துள்ள நான் சிகப்பு மனிதன் படத்தில், இன்னொரு நாயகியாக நடிக்கும் இனியாவின் கவர்ச்சி தாக்கம் அதிகமாக இருப்பதால், தன்னை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியாக, கவர்ச்சிக்கதவுகளை ஓப்பன் பண்ணி விட்டிருக்கிறார் லட்சுமிமேனன். 
அதன் எதிரொலியாக பாண்டியநாடு படத்தை விடவும் விஷாலுடன் ஓவர் நெருக்கம் காட்டியிருப்பவர், படம் முழுக்க மாடர்ன் காஸ்டியூமில் கலக்கியிருக்கிறாராம். அதோடு, விஷாலுடன் ஒரு காட்சியில் தண்ணீருக்கு அடியில் முங்குவது போன்று ஒரு செமத்தியான காட்சி உள்ளதாம்.
அதில் லட்சுமிமேனனின் கட்டுப்பாட்டையும் மீறி அவரது கவர்ச்சி வெளிப்பட்டுள்ளதாம். இந்த செய்தி கோலிவுட்டில் வேகமாக கசிந்ததையடுத்து, லட்சுமிமேனனும் கவர்ச்சி கட்சியில் சேர்ந்து விட்டார் என்று, அவரை மனதில் கொண்டு கதை பண்ணியிருக்கும் இயக்குனர்கள், இப்போது சில கிளாமர் காட்சிகளையும் எக்ஸ்ட்ராவாக ஸ்கிரிப்டில் இணைத்து வருகிறார்கள்.
-
விஷாலை வைத்து ஹரி இயக்கும் பூஜை படத்தில் சந்தானத்துக்கு இடமில்லை. படத்தின் பிரதான காமெடியனாக சூரியை ஒப்பந்தம் செய்திருக்கிறார். சிங்கம் - 2 படத்தில் சந்தானம்தான் காமெடியனாக நடித்தார். அப்படத்தில் இடம்பெற்ற அவரது காமெடி சிங்கம்-2 படத்தின் வெற்றிக்கும் பெரிதும் உதவிகரமாக அமைந்தது. அப்படி இருந்தும் தன் அடுத்தப்படமான பூஜையில் சந்தானத்துக்கு கல்தா கொடுத்துவிட்டாரே ஹரி? என்ன காரணம்? என்று விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் இதோ... சிங்கம் -2 படத்தில் நடித்தபோது இயக்குநர் ஹரியை அநியாயத்துக்குப்படுத்தி எடுத்துவிட்டாராம் சந்தானம்.
+ சொன்ன நேரத்தில் படப்பிடிப்புக்கு வராமல் இருந்தது, காமெடி வசனங்களை என் குழுவினரை வைத்துத்தான் எழுதுவேன் என்று கண்டிஷன் போட்டது, படத்தின் புரமோஷனுக்கு அழைத்தும் வராமல் முரண்டு பிடித்தது என்று சந்தானம் கொடுத்த டார்ச்சரினால் ஏகத்துக்கும் ஹரிக்கு பிபி எகிறியிருக்கிறது. 
 அப்போது சூர்யாவின் ஆதரவும் சந்தானத்துக்கு இருந்ததால் ஹரியால் அப்போது தன் எதிர்ப்பைத் தெரிவிக்க முடியவில்லை. அதனால் சந்தானம் விஷயத்தில் அப்போது தன் கடுப்பை கட்டுப்படுத்தி வைத்திருந்தவர் இப்போது பூஜை படத்தில் சூரியை காமெடியனாக்கிவிட்டார். பூஜை படத்தில் சந்தானத்தை கழற்றிவிட்டு சூரியை ஒப்பந்தம் செய்ததற்கு விஷாலின் பரிபூரண ஆசியும் உண்டாம்.
-
சில தினங்களுக்கு முன் தணிக்கைக் குழுவினருக்கு கோச்சடையான் படத்தை திரையிட்டுக்காட்டினார் சௌந்தர்யா ரஜினிகாந்த். படத்தைப் பார்த்தத் தணிக்கைக் குழுவினர் கோச்சடையான் படத்துக்கு யு சான்றிதழ் வழங்கினார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால்… கோச்சடையான் படத்தின் ரீ ரெக்கார்டிங் பணியே இன்னும் தொடங்கப்படவில்லை. ஏப்ரல் மாதம்தான் தொடங்கப்படவிருக்கிறது. கோச்சடையான் படத்தின் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் இறுதிக்கட்ட பணிகள் சீனாவில் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகளை விரைந்து முடித்து அவுட்புட்டை வாங்கி வருவதற்காக சீனாவுக்குச் சென்றிருக்கிறார் சௌந்தர்யா ரஜினிகாந்த். சீனாவிலிருந்து அவர் வந்த பிறகே ரீ ரெக்கார்டிங் பணிகளை தொடங்க இருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். இந்தநிலையில் கோச்சடையான் படத்துக்கு எப்படி தணிக்கை சான்றிதழ் கிடைத்தது என்பதுதான் திரையுலகில் பலரும் கேட்கும் கேள்வியாக இருக்கிறது.
 தணிக்கையின்போது கடைசி நேரத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு அதனால் கோச்சடையான் படத்தின் வெளியீட்டில் சிக்கல் வரக்கூடாது என்று நினைத்தாராம் ரஜினி. எனவே முன் எச்சரிக்கை காரணமாக டம்மியாக ஒரு மியூஸிக் ட்ராக்கைப் பயன்படுத்தி தணிக்கைக் குழுவினருக்கு கோச்சடையான் படத்தைப் போட்டுக்காட்டினார்களாம். 
 கோச்சடையான் படத்தின் ரிலீஸ் பற்றி லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா? மே 1 ஆம் தேதி படம் வெளியாவது உறுதி. தியேட்டர்களை புக் பண்ண ஆரம்பித்துவிட்டனர்.
-
முன்னணி ஹீரோக்களை பொறுத்தமட்டில் வளர்ந்து வரும் டைரக்டர்கள் அவர்களிடம் கதை சொன்னால், மொத்த கதையையும் கேட்டு விட்டு, பின்னர் தாங்கள் முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை எப்படி எப்படி வைக்கலாம் என்று ஒரு புதிய ஸ்கிரிப்ட்டையே சொல்லிவிடுவார்கள். அதேசமயம், முன்னணி டைரக்டர்கள் என்றால் மட்டும் தங்களது தலையீடை குறைத்துக்கொள்வார்கள். ஆனால், கெளதம்மேனன், பாலா போன்றவர்களிடம் எதுவுமே சொல்ல முடியாது. காரணம், அவர்கள் எந்த ஹீரோக்களிடமும் முழுக்கதையையும் சொல்வதே இல்லை. இந்தநிலையில், சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த சிவகார்த்திகேயனிடம், நீங்கள் கதையை எப்படி செலக்ட் பண்ணுகிறீர்கள்? என்று மீடியாக்கள் கேள்வி எழுப்பியபோது, கூடுமான வரை கதைகளில் நான் திருத்தமெல்லாம் செய்வதில்லை.
 கதையை கேட்டுவிட்டு எனக்கு பிடித்தால் ஓ.கே சொல்வேன். இல்லையேல் பிடிக்கவிலலை என்பதை நேரடியாகவே சொல்லிவிடுவேன் என்றார். குறிப்பாக, நிஜத்தில் நான் தண்ணி அடிப்பதில்லை, அதேபோல் புகைப்பிடிக்கும பழக்கமும் எனக்கு கிடையாது. அதற்காக நான் நடிக்கும் படங்களிலும் அந்த மாதிரி காட்சியில் நான் நடிக்க மாட்டேன் என்று சொல்ல முடியாது.
 அப்படி சொன்னால், கதைக்கு தேவைப்படுகிறது வைத்திருக்கிறோம் என்பார்கள். அதனால்தான் எனது படங்களில் டாஸ்மாக் பாட்டு இடம் பெற்றாலும் நான் கண்டுகொள்வதில்லை என்றுசொன்ன சிவகார்த்திகேயன், ஒருவேளை எதற்காக இந்த மாதிரி காட்சியெல்லாம் வைக்கிறீர்கள். படம் பார்க்கும் ரசிகர்களை தவறான வழிக்கு திருப்புவது போல் இருக்குமே என்று நான் சமூக அக்கறையுடன் சொன்னால், சிவகார்த்திகேயன் கதையில் தலையிடுகிறார் என்பார்கள். 
அதன்காரணமாக, பீல்டில் கெட்ட பேர்தான் ஏற்படும். அதனால்தான் நான் உண்டு என் வேலை உண்டு என்றிருக்கிறேன் என்கிறார் சிவகார்த்திகேயன்.
-
கடந்த சட்டமன்றத் தேர்தலில் பணத்தை பெற்றுக் கொண்டு தி.மு.க.வுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்தார் வடிவேலு. தி.மு.க. தோற்று அ.தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது வடிவேலுவுக்கு ஆன்ட்டி க்ளைமாக்ஸ் ஆனதால், திரையுலகிலிருந்து ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டப்பட்டார். ஏறக்குறைய மூன்று வருடங்களை நெருங்கிவிட்டநிலையிலும் ஆளும்கட்சியிடமிருந்து வடிவேலுவுக்கு பாவமன்னிப்பு கிடைக்கவில்லை. அ.தி.மு.க. அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் மதுரை ஏரியாவைச் சேர்ந்த அமைச்சர்கள் பலர் தனிப்பட்டமுறையில் வடிவேலுவுக்கு நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள்.
 அவர்களின் நெருக்கத்தைப் பயன்படுத்தி எப்படியாவது தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துவிட கடந்த சில வருடங்களாகவே முயற்சி செய்தார் வடிவேலு. அவரது இந்த முயற்சி நிறைவேறாமல் இழுத்துக்கொண்டே போக, எப்படியும் ஜெயலலிதாவை சந்திக்க வைத்துவிடுவதாக அமைச்சர்கள் வடிவேலுவுக்கு ஆறுதல் சொல்லி வந்தனர். அவர்கள் சொன்னதை நம்பித்தான், ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன் படத்திலேயே நடிக்க முடிவு செய்தார் வடிவேலு.
 தற்போது ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. விரைவில் இசைவெளியீட்டுவிழா நடைபெறவிருக்கிறது. படத்தின் ரிலீஸ் தேதியும் நெருங்கிவிட்ட நிலையிலும் கூட ஜெயலலிதாவை சந்திக்க அப்பாயின்ட்மெண்ட் கிடைக்கவில்லை. எனவே, ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை ஆளும்கட்சி டி.வி.க்கு இலவசமாகக் கொடுக்கவும் தயாரானார்கள். அப்படி கொடுப்பதன் மூலம் ஜெயலலிதாவின் கோபத்தைக் குறைத்து, அவரின் குட் புக்கில் வடிவேலு இடம் பிடித்துவிடலாம் என்று கணக்குப் போட்டனர். 
 இந்த டீலுக்கு சேனல் தரப்பிலிருந்து பாசிட்டிவ்வான ரியாக்ஷன் வரவில்லை. எனவே மேலும் காத்திருப்பது வீண் வேலை என்று முடிவுக்கு வந்து, ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை நான்கரை கோடிக்கு வேறு ஒரு டி.வி.க்கு விற்றுவிட்டனர். இவ்விஷயத்தைக் கேள்விப்பட்ட ஆளும்கட்சி தரப்பு வடிவேலு மீது கூடுதல் கடுப்பில் இருக்கிறதாம். அச்சச்சோ…வடை போச்சே..!
-
தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தில் அறிமுகமானவர் ஸ்ரேயா, என்றாலும் அதன்பிறகு ஜெயம்ரவிக்கு ஜோடியாக அவர் நடித்த மழை படம்தான் அவரை பேச வைத்தது. அப்படத்திலேயே தொப்பலாக மழையில் நனைந்தபடி நடனமாடியவர் இளசுகளின் இதயங்களிலும் ஈரத்துணியாய் ஒட்டிக்கொண்டார். அதையடுத்து, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, அழகிய தமிழ் மகன், கந்தசாமி என முன்னணி ஹீரோக்களின் படங்களாக நடித்தவர், ஒரு கட்டத்தில் மார்க்கெட் ஆட்டம் கண்டதால், மீண்டும் இந்தி, கன்னடம் என்று சென்று விட்டவர், தற்போது ராமானுஜம் படம் மூலம் மீண்டும் கோடம்பாக்கத்தில் என்ட்ரி கொத்திருக்கிறார். 
 முன்னதாக, இந்த படத்திற்கு முன்பு பாலா இயக்கவிருக்கும் தாரை தப்பட்டை படத்தில் ஸ்ரேயாதான நடிப்பதாக இருந்தார். அப்படத்துக்காக கரகாட்ட பயிற்சி எடுப்பதற்கும் சென்னை வர தயாரானார் ஸ்ரேயா. ஆனால், அதற்குள் ஸ்ரேயா வேடத்துக்கு வரலட்சுமி ஒப்பந்தமாகி விட்டதாக ஸ்ரேயாவுக்கு தகவல் அனுப்பி விட்டனர். 
 இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சென்னை வந்து விசாரித்திருக்கிறார். அப்போதுதான், இரண்டு இளவட்ட ஹீரோக்கள்தான் தனக்கு வர இருந்த வாய்ப்பை வரலட்சுமிக்கு திருப்பி விட்டது தெரியவந்திருக்கிறது. இதனால் ஆவேசமடைந்த ஸ்ரேயா மேற்படி நடிகர்களின் பெயரைக் குறிப்பிட்டு தனது கோலிவுட் நண்பர்களிடம் சூடான வார்த்தைகளை உதிர்த்துக்கொண்டு திரிகிறார்.
-
பஹ்ரைனில் பிறந்த மம்தா மோகன்தாசுக்கு கேரளா பூர்வீகம். 2005ம் ஆண்டு மயோஹம் என்ற மலையாளப் படத்தில் அறிமுகமானார். மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னட மொழிகளில் இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் சிவப்பதிகாரம், குரு என் ஆளு, தடையற தாக்க படங்களில் நடித்தார். குசேலன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். சிறந்த பின்னணி பாடகியான மம்தா சிறந்த பின்னணி பாடகிக்காக ஆந்திர அரசின் நந்தி விருது பெற்றார். சிறந்த நடிகைக்கான கேரள அரசு விருதும் பெற்றார். சினிமாவில் புகழின் உச்சியில் இருந்தபோது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மம்தா ஒரு வருடம் சினிமாவில் இருந்து விலகி புற்றுநோயுடன் போராடி ஜெயித்தார்.
 தனது அடர்த்தியான கூந்தலை இழந்தபோதும் மீண்டும் தைரியமாக சினிமாவில் நுழைந்து முன்னணி நடிகையானர். 2011ம் ஆண்டு தனது பள்ளிக் கால தோழனும், குடும்ப நண்பரும், தொழிலதிபருமான பிரஜித் பத்மநாபனை திருமணம் செய்து கொண்டார். 
அவர்களுக்குள் என்ன கருத்து வேறுபாடு ஏற்பட்டதோ ஒரு வருடத்துக்குள் பிரிந்த வாழ்ந்து, விவாகரத்தும் செய்து கொண்டனர். விவாகரத்துக்கு பிறகு மனதளவிலும் சோர்ந்துவிட்ட மம்தா படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு மீண்டும் புற்றுநோய் தாக்குதல் ஏற்பட்டது. அதை மறைத்தும், மறுத்தும் நடித்து வந்தார். கடந்த ஆண்டு மட்டும் 5 படங்களில் நடித்தார். இந்த ஆண்டு 4 படங்களில் நடித்து வருகிறார். அவைகள் முடியும் தருவாயில் இருக்கிறது. இப்போது நோய் தாக்குதல் தீவிரமாகிவிட்டால். தினமும் வேதனையில் துடிக்கிறார்.
 இதை பார்த்த அவரது பெற்றோர் நடித்தது போதும் என்று அவரிடம் கூறிவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் சினிமாவை விட்டு விலகி இருக்கப்போவதாக அறிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: இரண்டு முறை ஏற்பட்ட புற்று நோய் பாதிப்பால் நான் மனதளவிலும், உடல் அளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு விட்டேன். ஒரு மாதம் தீவிர சிகிச்சை, தாயின் மடியில் ஒரு வருடம் ஓய்வு என என் காலம் கழிந்தது. எனது மனஆறுதலுக்காகவும், நோயின் கொடுமையிலிருந்து விடுபடுவதற்காகவும் சரியாக குணமாகாத நிலையில் மீண்டும் நடிக்க ஆரம்பித்தேன். 
இப்போது என் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. படப்பிடிப்பில் என்னால் உற்சாகமாக செயல்பட முடியவில்லை. இதனால் தற்காலிகமாக சினிமாவில் இருந்து விலகி இருக்க முடிவு செய்திருக்கிறேன். என்றாலும் பின்னணி பாடகியாக எனது பணிகளை தொடர்ந்து செய்வேன். 
பாடுவது எனது மனதிற்கும், ஆன்மாவிற்கும் ஆறுதலாக இருக்கும். இவ்வாறு மம்தா கூறியிருக்கிறார். தமிழில் அதிகமாக நடிக்காவிட்டாலும். மம்தா மிகச் சிறந்த நடிகை என்பதில் சந்தேகம் இல்லை. சொந்த வாழ்க்கையின் சோகங்களிலிருந்தும், புற்றுநோய் அரக்கனின் பிடியிலிருந்தும் விடுபட்டு, மம்தா மீண்டும் பழைய உற்சாகத்தாடு சினிமாவுக்கு திரும்ப இறைவனை பிரார்த்திப்போம்.
-
கோச்சடையான் படம் மே முதல் தேதி வெளியாவதாக உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியானதும், ரஜினியின் அடுத்தப் படத்தை இயக்கப்போவது யார் என்று அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்து விட்டனர். கோச்சடையான் படம் துவங்குவதற்கு முன்பிருந்தே ரஜினியை வைத்து கே.எஸ்.ரவிகுமார் ஒரு படம் இயக்க இருக்கிறார் என்ற தகவல் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. அதன் பிறகு, ஒளிப்பதிவாளர் கேவி.ஆனந்த் சொன்ன கதையில் இம்ப்ரஸ் ஆன ரஜினி, அவரது இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டார். அந்தப் படத்தை கல்பாத்தி அகோரம் தயாரிக்கிறார் என்று சொல்லப்பட்டது.
 சில மாதங்கள் பரபரப்பாக இச்செய்தி அடிபட்டநிலையில், தனுஷை வைத்து கே.வி.ஆனந்த் அனேகன் என்ற படத்தை ஆரம்பித்த பிறகு அப்படியே அமுங்கிப்போனது. கே.எஸ்.ரவிகுமார், கே.வி.ஆனந்ததைத் தொடர்ந்து ரஜினியின் அடுத்தப் படத்தை இயக்கப்போகிறார் என்ற செய்தியில் அடிபட்டவர் - ஷங்கர். தற்போது ஐ படத்தை இயக்கி வரும் ஷங்கரை ரஜினியே தேடிப்போய் அடுத்தப்படத்தை இயக்க அழைத்ததாகவும் உடனடியாய் அதற்கு ஷங்கர் உடன்பட்டதாகவும் அப்போது சொல்லப்பட்டது.
 ரஜினி - ஷங்கர் இணையும் படத்துக்கு 250 கோடி செலவாகும் என்பதால், கல்பாத்தி அகோரத்தை அணுகினார்கள் என்றும், 140 கோடி வரை என்றால் தயாரிக்கிறேன், அதற்கு மேல் என்றால் என்னால் முடியாது என்று அவர் விலகிக்கொண்டதாகவும் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டது.
 இந்நிலையில் கோச்சடையான் படத்தில் டைரக்ஷன் சூப்ரவைசராக பணியாற்றியபோது கே.எஸ்.ரவிகுமார், ரஜினிக்கு ஒரு கதை சொன்னதாகவும், அக்கதை ரஜினிக்குப் பிடித்துப்போனதால் அடுத்தப்படமாக அதை பண்ண முடிவு செய்துவிட்டார் ரஜினி என்று இப்போது சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் - திரையுலகில். அதுமட்டுமல்ல, ரஜினியின் ஒப்புதலோடு அனுஷ்காவிடம் கால்ஷீட் கேட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.
-
முன்னாள் தமிழ் பட ஹீரோயின் நக்மா தற்போது காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவர். கவர்ச்சியான தலைவராகவும் வலம் வருகிறார். வருகிற பாராளுமன்ற தேர்லில் அவர் உத்தர பிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தொகுதியில் உள்ள ஹாபூர் என்ற இடத்தில் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைக்கச் சென்றார். அப்போது ஹாபூர் சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ கஜராஜ் நக்மாவை காருக்கு வழியனுப்பச் சென்றபோது அவரது முகத்தை தன் கையால் இழுத்து முத்தமிட்டார். இந்தக் காட்சி வீடியோவாக வெளியானது. இது பற்றி பெரும் சர்ச்சை எழுந்தது. 
கஜராஜை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று உள்ளூர் காங்கிரசார் போர்க்கொடி தூக்கினர். இப்போது இந்த பிரச்சினைக்கு நக்மாவே முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: எம்.எல்.ஏ கஜராஜ் என்னை முத்தமிடவில்லை. நான் நடிகை என்பதால் மீடியாக்கள் அதை முத்தம் என்று பெரிது படுத்தி எழுதிவிட்டன. 
அங்கு நல்ல கூட்டம் இருந்ததால் அவர்தான் என்னை பாதுகாப்பாக அழைத்துச் சென்றார். போகும் வழியில் ஒரு தலைவர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு போங்கள் என்பதை அவர் என் காதருகில் சொன்னார். கூட்டமும், சத்தமும் அதிகமா இருந்ததால் அப்படிச் சொல்ல வேண்டிய நிலை அவருக்கு. மேலும் நான் அப்போது தலையில் முக்காடு அணிந்திருந்தேன். அவர் என்னை தன் பெற்ற மகள் போல் பார்க்ககூடியவர் என்று கூறியுள்ளார். கஜராஜா நக்மாவை முத்தமிட்டது உண்மைதான். 
அவர் தன் தலையை பிடித்த கஜராஜாவின் கையை வேகமாக அகற்றியதை வைத்து இதனை உறுதி படுத்ததலாம். அவர் இதுகுறித்து காங்கிரஸ் மேலிடத்தில் புகார் செய்திருக்கிறார். தேர்தல் நேரத்தில் இதை பெரிது படுத்தினால் கட்சி இமேஜ் பாதிக்கப்பட்டு அது உங்கள் வெற்றியையும் பாதிக்கும் அதனால் மவுனமாக இருங்கள் தேர்தலுக்கு பிறகு அவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று மேலிடம் தெரிவித்ததை தொடர்ந்து நக்மா இவ்வாறு கூறியிருப்பதாக அரசியல் பார்வையளர்கள் கூறுகிறார்கள்.
-
வல்லவன் படத்தில் சிம்பு-நயன்தாரா இருவரும் ஜோடி சேர்ந்து நடித்ததில் இருந்தே அவர்களைப்பற்றிய பரபரப்புகளுக்கும் பஞ்சமில்லை. காரணம், அப்படத்தில் நயனுடன் அதிக டச்சிங் கொடுத்து நடித்த சிம்பு, அவரது உதடு கவ்வி முத்தம் கொடுத்து நடித்து பெரும் பரபரப்பை கூட்டினார். அதையடுத்து, காதல், காதல் முறிவு என பலவிதமாகவும் பரபரப்புக்குள் சிக்கியிருந்த சிம்பு-நயன்தாரா ஜோடி மீண்டும், 'இது நம்ம ஆளு' படத்தில் இணைந்ததையடுத்து அவர்களைப்பற்றி தினமொரு பரபரப்பு செய்தி பரவிக்கொண்டேயிருக்கிறது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிம்பு நாயகனாக நடித்த எந்த படமும் திரைக்கு வராதபோதும பரபரப்பு ரீதியாக பேசப்படும் நடிகராகியிருக்கிறார்.
  இந்தநிலையில், எரியுற நெருப்பில் எண்ணெயை ஊற்றும் விதமாக, தற்போது நயன்தாராவின் கழுத்தில், சிம்பு தாலி கட்டுவது போன்று ஒரு காட்சியை படமாக்கியுள்ளாராம் பாண்டிராஜ். இதற்கு முன்பு ராஜாராணியில் ஆர்யா-நயன்தாராவுக்கு திருமணம் நடந்தது போன்று வினோதமான முறையில் பப்ளிசிட்டி செய்ததைப்போன்று, இப்போது இது நம்ம ஆளு படத்துக்காகவும் சிம்பு-நயன்தாராவுக்கு திருமணம் நடந்தது போன்று ஒரு செய்தியை வெளியிட்டு பரபரப்பு கூட்ட திட்டமிட்டுள்ளார்களாம்.
-
சமுத்திரகனி இயக்கத்தில், ஜெயம்ரவி இரண்டு வேடங்களில் நடித்த படம் நிமிர்ந்து நில். லஞ்சத்தை மையமாகக்கொண்டு ஷங்கர் இயக்கிய இந்தியன், அந்நியன் பட வரிசையில் இப்படத்தையும் லஞ்சத்தை மையமாகக்கொண்டு இயக்கியிருக்கிறார் சமுத்திரகனி. இப்படம் பல ஊர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால், சில தியேட்டர்களுக்கு சென்று நேரடியாக ரசிகர்களை சந்திதது வருகிறார் சமுத்திரகனி. மேலும், தனது படங்களின் வெற்றிக்கு பிறகு காங்கேயன் சிவன்மைலைக்கு சாமி தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ள சமுத்திரகனி, இந்த முறையும் அந்த கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார்.
 அதையடுத்து, தான் இயக்கும் புதிய பட வேலைகளிலும் விரைவில் இறங்க திட்டமிட்டுள்ள அவர், ஏப்ரல் 14-ந்தேதி நிமிர்ந்து நில் படத்தை தெலுங்கில் வெளியிடுகிறாராம். அதையடுத்து, அப்படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்கான முயற்சிகளிலும் ஈடுபடப்போகிறாராம். இந்தியைப்பொறுத்தவரை முன்னணி நடிகர்தான் வேண்டும் என்றில்லாமல், எந்த நடிகர் கால்சீட் தர முன்வந்தாலும் அவர்களை வைத்து இயக்குவாராம் சமுத்திரகனி.
-
மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடனமாடி சினிமாவுக்கு வந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அட்டகத்தியில் ஓரளவு பேசப்பட்ட இவர் பின்னர் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் படங்களில் விஜயசேதுபதியுடன் நடித்ததால் பேசப்படும் நடிகையானார். இரண்டு படங்களிலுமே வில்லேஜ் கெட்டப்பில் நடித்ததால் இப்போது மேலும் சில கிராமத்து படங்களுக்கும அவரை ஒப்பந்தம் செய்திருக்கின்றனர். இந்த நிலையில், மற்ற கமர்சியல் நடிகைகளைப்போன்று கிளாமராக நடிக்கும் எண்ணம் இல்லையா? என்று ஐஸ்வர்யாவைக்கேட்டால், கவர்ச்சியாக யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். 
ஆனால் பர்பாமென்ஸ் நடிகையாக எல்லோராலும் முடியாது. எனக்கு அந்த வாய்ப்பு ஆரம்பத்திலேயே கிடைத்திருப்பதால், இதே ரூட்டில் தொடர்ந்து பயணித்து வில்லேஜ் நாயகி என்ற இமேஜூடன் வலம்வரவே ஆசைப்படுகிறேன். மேலும், அதற்காக நான் சிட்டி சப்ஜெக்ட்டுகளை தவிர்க்கிறேன் என்ற அர்த்தம் அல்ல. 
நல்ல கதாபாத்திரம் அமைந்தால் நடிப்பேன். எனது உடல்கட்டைப்பொறுத்தவரை கிளாமருக்கு பெரிதாக செட்டாகாது. அதனால் மிதமான கிளாமர் காண்பித்து, பர்பாமென்சுக்கு முதலிடம் கொடுத்து நடிப்பேன் என்று சொல்லும் ஐஸ்வர்யா ராஜேஷ், தனது தாய்மொழியான தெலுங்கு படங்களில் நடிக்கவும் தற்போது முயற்சிகளை முடுக்கி விட்டிருக்கிறாராம்.
-
மதராசப்பட்டினம், தாண்டவம் படங்களில் மாடர்ன் பெண்ணாக நடித்த ஹாலிவுட் நடிகை எமிஜாக்சனை, ஐ படத்தில் பக்கா கிராமத்து பெண்ணாக மாற்றியிருக்கிறார் ஷங்கர். அர்ஜூன் நடித்த முதல்வன் படத்தில எப்படி மனீஷா கொய்ராலாவை கிராமத்து தேவதையாக மாற்றினாரோ அதேபோன்று இப்படத்தில் எமிக்கு பாவாடை தாவணி அணிந்து விட்டு அழகு பார்த்திருக்கிறார் ஷங்கர். மேலும், இந்த கிராமத்து போர்ஷனை படமாக்கும்போது விக்ரமை விட எமிதான் அதிக உற்சாகத்தில் இருந்தாராம். காரணம், தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கியதில் இருந்தே, தமிழ்நாட்டு கலாச்சாரத்தின்பால் ஈர்க்கப்பட்ட எமி, கிராமப்புறங்களுக்கு படப்பிடிப்புக்கு செல்லும்போது அங்குள்ள மக்களிடம் அன்பாக பழகியவர், இளவட்ட பெண்கள் அணிந்திருக்கும் பாவாடை தாவணியை ஆச்சர்யமாக பார்த்து ரசித்தாராம். 
 அதனால், அப்போதில் இருந்தே தானும் ஒரு படத்திலாவது தமிழ்நாட்டு கிராமத்து பெண்ணாக நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு ஏற்பட்டதாம். அதையடுத்து, ஐ படத்தின் கதையை ஷங்கர் சொன்னபோது அதில் கிராமத்து கெட்டப்பில் தான் நடிக்க வேண்டும் என்றதும் செம குஷயாகிவிட்டாராம். 
அதனால் அந்த காட்சிகளை படமாக்கியபோது அதிக உற்சாகத்துடன் ஈடுபாடு காட்டி நடித்தாராம் எமி. நம்ம ஊர் பெண்களெல்லாம் பாவாடை தாவணியிலிருந்து சுடிதார், ஜீன்ஸ் என்று மாறிக்கொண்டிருக்க, ஒரு ஹாலிவுட் நடிகை நம்ம ஊர் பாவாடை தாவணி உடையணிந்து நடிப்பதை பெருமையாகவும், சந்தோசமாகவும் கருதியதை அப்படக்குழுவினர் ஆச்சர்யமாக சொல்கிறார்கள்.
-
சுசீந்திரன் இயக்கத்தில், தான் நடித்த பாண்டியநாடு படத்தை தயாரித்து நடித்த விஷால், அப்படத்தை ஆரம்பிக்கும்போதே ரிலீஸ் தேதியையும் அறிவித்து, அதே நாளில் படத்தை வெளியிடவும் செய்தார். அதையடுத்து, இப்போது நான் சிகப்பு மனிதன் படத்தை தயாரித்து நடித்து வரும் அவர், இப்படத்தை ஏப்ரல் 11-ந்தேதி அன்று வெளியிடுகிறார். அதேபோல், அன்றைய தினமே தாமிரபரணியைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் தான் தயாரித்து, நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பையும் தொடங்குகிறார் விஷால். ஏற்கனவே சூர்யாவைக்கொண்டு ஹரி இயக்கிய, சிங்கம் படத்தின் கதை எப்படி தூத்துக்குடியில் தொடங்கி சென்னையில் முடிந்ததோ, அதேபோல் இப்படத்தின் கதை கோவையில் தொடங்கி பீகார் மாநிலம் பாட்னாவில் முடிகிறதாம்.
 சிங்கம், சிங்கம்-2 படங்களை விடவும் படு விறுவிறுப்பாக இப்படத்தை இயக்கவிருக்கும் ஹரி, இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசனை ஒப்பந்தம் செய்திருக்கிறார். மேலும், சமீபகாலமாக ஸ்ருதி தான் இடம்பெறாத படங்களிலும பின்னணி பாடி வரும் நிலையில், இப்படத்தில் அவருக்கென்று ஒரு சாப்ட்டான டியூனை ரெடி பண்ணி பாட வைத்திருக்கிறாராம் யுவன்ஷங்கர்ராஜா.
 அவரைத் தொடர்ந்து விஷாலும் ஒரு பாடலை பாடவிருப்பதகாவும் கூறப்படுகிறது.
-
நடிகர்களுக்காக ஒரு கூட்டம் தியேட்டருக்குள் வருவதைப்போன்று நடிகைகளுக்காகவும் இளைஞர் பட்டாளம் தியேட்டர்களை முற்றுகையிடுகிறது. அதனால், இப்போதைய சில ஹீரோக்கள், தங்கள் படங்களில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நடிகைகள் தங்களுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். மார்க்கெட்டில் பின்தங்கியிருக்கும் ஹீரோக்கள் மட்டுமின்றி முன்னணியில் இருப்பவர்களும் இதை பின்பற்றுகிறார்கள்.
 அந்த வகையில், தற்போது யான் படத்தில் கடல் துளசியுடன் நடித்து வரும் ஜீவா, தனது அடுத்தடுத்த படங்களில் ஹன்சிகா, காஜல்அகர்வால் போன்ற நடிகைகள் நடிக்க வேண்டும் என்று சொல்லி அப்பட டைரக்டர்களை முடுக்கிவிட்டிருக்கிறார். அதேபோல், ஜெயம்ரவியும் இந்த முன்னணி கதாநாயகி விசயத்தில் ஆர்வம் காட்டுகிறார்.
 சமுத்திரகனி இயக்கத்தில் நடித்த நிமிர்ந்து நில் படத்தில் அமலாபாலுடன் நடித்த அவர், தற்போது நடித்து வரும் பூலோகம் படத்தில் த்ரிஷாவுடன் நடித்துள்ளார். அதையடுத்து, தனது அண்ணன் ஜெயம்ராஜா இயக்கும் தனி ஒருவன் படத்தில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்திருப்பவர், அடுத்து நடிக்கவிருக்கும் ரோமியோ ஜூலியட் என்ற படத்தில் ஹன்சிகாவுடன் இணைகிறார். ஏற்கனவே தனுசுடன் மாப்பிள்ளை படத்தில் நடித்த ஹன்சிகா, அப்படத்தையடுத்து பிரபுதேவா இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்த எங்கேயும் காதல் படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து, இப்போது மீண்டும் ஜெயம்ரவியுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
 இப்படத்தில் புதுமுக நடிகை ஒருவரை நடிக்க வைக்க முயற்சி நடந்தபோது, ஜெயம்ரவி குறுக்கிட்டு ஹன்சிகா மாதிரி முன்னணி நடிகைகளை புக் பண்ணுங்கள். அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள. அதனால் படத்தின் வெற்றிக்கு ஹன்சிகாவும் கைகொடுப்பார் என்று தனது கருத்தை சொன்னாராம. அதையடுத்தே, ஹன்சிகா என்ட்ரியாகியிருக்கிறார். ஜீவா, ஜெயம்ரவியைத் தொடர்ந்து ஆர்யா உள்ளிட்ட மேலும் சில ஹீரோக்களும் ஹன்சிகாவுக்கு தற்போது வெளிப்படையாக சிபாரிசு செய்யத் தொடங்கியுள்ளனர்.
-
தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் அறிமுகமான டாப்சி, முதல் படத்திலேயே ரசிகர்களை அட்டாக் செய்தார் என்றபோதும், கோடம்பாக்கமே அவரை கண்டுகொள்ளவில்லை. அதனால் அதையடுத்து வந்தான் வென்றான் படத்தில் ஜீவாவுடன் நடித்தவர் பின்னர் சரியான படங்கள் இன்றி பாலிவுட்டுக்கு சென்று விட்டார். இந்தியில் ஒரு படம், தெலுங்கில் ஒரு படம் என நடித்து வந்தவர், அஜீத்தின் ஆரம்பம் படத்தில் ஆர்யாவுடன் நடித்தார். ஆனால், அது ஒரு சாதாரணமான துணை நடிகை நடிக்கக்கூடிய வேடம் என்பதால், அந்த ரோல் டாப்சிக்கு கைகொடுக்கவில்லை. 
அதையடுத்து இப்போது லாரன்சின் முனி-3 கங்கா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே 3 படத்தையடுத்து ஐஸ்வர்யா தனுஷ், கடல் கெளதமை நாயகனாகக்கொண்டு இயக்கி வரும் வை ராஜா வை படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்கிறார் டாப்சி, எதிர்நீச்சல் ப்ரியாஆனந்த் நாயகியாக நடிக்கும் இப்படத்தில், முதலில் நட்புக்காக டாப்சியை உள்ளே இழுத்த ஐஸ்வர்யா தனுஷ், பின்னர் அவரது கேரக்டரை சற்று பெருசுபண்ணி, இப்போது கதையை நகர்த்தி செல்லும் ஒரு முக்கிய வில்லியாக்கி விட்டார்.
 முதலில் நெகடீவ் ரோல் என்றதும் நடிக்கத் தயங்கிய டாப்சி, பின்னர் கதையில் தனக்கு இருந்த முக்கியத்துவத்தை உணர்ந்து ஓ.கே சொல்லி நடித்திருக்கிறாராம். அதனால் இந்த படம் மூலம் டாப்சிக்குள் இருக்கும் அதிரடி வில்லி வெளிச்சத்துக்கு வரப்போகிறார்.
-
அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் காதல் ஜோடிகளாக நடித்த பிரசன்னா-சினேகா இருவரும் நிஜத்திலும் காதலர்களாகிப்போனார்கள். அதன்பிறகு அவர்கள் ஜோடி சேராதபோதும் காதல் பயணம் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் சினேகாவின் மார்க்கெட் சரிந்தபோது, திருமணம் செய்ய இதுதான் சரியான நேரம் எனறு இருவருமே முடிவெடுத்து காதலை பெற்றோரிடம் ஓப்பன் செய்தனர். இதற்கு பிரசன்னா வீட்டில் பலத்த எதிர்ப்பு. கூடவே ஜாதிப்பிரச்னை வேறு. ஆனபோதும், ஒரு வழியாக பேசி தீர்த்த பிரசன்னா-சினேகா இருவரும் இப்போது தம்பதிகளாக வளைய வருகின்றனர். 
அதோடு சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்த சினேகா, இப்போது வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ் நாயகனாக நடித்து, இயக்கும் உன் சமையல் அறையில் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதையடுத்தும், சில படங்களில் நடிக்க தீவிரமாக பேசிக்கொண்டிருக்கிறார். ஆனால், பிரசன்னாவுக்கு மனைவி சினேகா தொடர்ந்து சினிமாவில் நடிப்பதில் போதிய விருப்பம் இல்லையாம்.
 அதனால், இத்தோடு நடிப்புக்கு குட்பை சொல்லி விடலாம் என்கிறாராம். ஆனால், சினேகாவோ, திருமணத்துக்கு முன்பே நான் நடித்துக்கொண்டேயிருப்பேன் என்பதை வாய்மூலம் ஒப்பந்தம் போட்டிருக்கிறேன். அதனால் அதை மதித்து நடந்து கொள்ளுங்கள் என்கிறாராம். ஆக, பிரசன்னாவின் தடா உத்தரவை மீறி தொடர்ந்து நடிக்கத்தயாராகிக்கொண்டிருக்கிறார் சினேகா
-
விஷாலுடன் லட்சுமிமேனன் ஜோடி சேர்ந்த முதல் படமான பாண்டியநாடு படத்திலேயே பை பை பை கலாச்சி பை என்றொரு பாடலில் கிட்டத்தட்ட குத்தாட்டம் போடுவது போல்தான் குதித்து குதித்து ஆடியிருந்தார் லட்சுமிமேனன். அந்த பாடலும் ஹிட் அடித்ததால் இனி ரொமான்டிக் பாடலாக இருந்தாலும் நாலு ஹெவியான மூவ்மென்ட் கொடுத்து விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் அவர். அதை மீண்டும் விஷாலுடன் நடித்து வரும் நான் சிகப்பு மனிதன் படத்திலும் பின்பற்றியிருக்கிறார் லட்சுமிமேனன். ஆனால், இதே படத்தில் இன்னொரு நாயகியாக நடிக்கும் வாகை சூடவா இனியாவோ, ஒரு பாடல் காட்சியில் விஷாலுடன் அதிரடி குத்தாட்டம் போட ஓ.கே சொல்லியிருக்கிறார்.
 குடும்ப நடிகையாக வேண்டும் என்று களமிறங்கிய இனியாவுக்கு எதிர்பார்த்தபடி மார்க்கெட் இல்லாததால், கண் பேசும் வார்த்தைகள் படத்திலேயே கவர்ச்சிக்கு பிள்ளையார் சுழி போட்ட இனியா, இந்த படத்தில் இன்னும் தூக்கலாக கவர்ச்சி கலந்த குத்தாட்டம் போடுகிறார்.
 இந்த பாடலுக்கான ரிகர்சல் நடக்கிற விசயத்தை லட்சுமிமேனனின் காதுக்கு சொன்னவர்கள், இந்த படத்தில் இனியாவின் அட்டாக் அதிகமாக இருக்கும் போலிருக்கே என்று அவரது வயிற்றில் புளியை கரைத்து விட்டுள்ளனர். இருப்பினும், எத்தனை கவர்ச்சி நடிகைகள் வந்தாலும், எனது பர்பாமென்ஸ்க்கு முன்பு அவர்கள் காணாமல் போய் விடுவார்கள் என்று நெஞ்சை நிமிர்த்தி பேசிக்கொண்டிருக்கிறார் லட்சுமிமேனன்.
-
சேட்டை படத்திற்கு பிறகு தமிழ்நாட்டையே காலி பண்ணி விட்டு ஆந்திராவுக்கு இடம்பெயர்ந்த அஞ்சலி, அதன்பிறகு தெலுங்கில் சில படங்களில் நடித்தார். ஆனால் அந்த படங்கள் ஓடவில்லை. அதனால் அவரது மார்க்கெட் அவுட்டானது. அதோடு, அடிக்கடி அஞ்சலி காணாமல் போய் விடுவதாகவும் செய்திகள் வந்தவண்ணமிருந்தன. அப்படி காணாமல் போகும் அஞ்சலி திடீர் திடீரென்று வெளி உலகத்துக்கு முகம் காட்டினார். இதையடுத்து, அவர் அமெரிக்காவைச்சேர்ந்த ஒருவருடன் செட்டிலாகி விட்டார் என்று வேறுவிதமாக செய்திகள் வெளிவந்தன.
 அதற்கேற்ப, அஞ்சலியின் உடல்கட்டும் பூதாகரமாக பெருத்து நின்றதால் அதை அனைவரும் நம்பியாக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள். ஆனால். இப்போது கடந்த சில மாதங்களாக கடினமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை குறைத்துக்கொண்டு மீண்டும் ஒரு புதிய தெலுங்கு படத்தில் கமிட்டாகியிருக்கிறார் அஞ்சலி. இதையடுத்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், நான் அமெரிக்ககாரர் யாரையும் திருமணம் செய்யவில்லை. நான் எதிர்பார்க்கிற மாதிரியான கதைகள் அமையாததால், நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருந்தேன்.
 அந்த சமயத்தில் சில வெளிநாடுகளுக்கு சென்று வந்தேன். ஆனால், இப்போது நான் எதிர்பார்ப்பது போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படம் கிடைத்திருப்பதால் மீண்டும் நடிக்க வந்திருக்கிறேன் என்று சொல்லும அஞ்சலி, என்னைப்பற்றி பரவும் தவறான வதந்திகளை தவிர்க்க இனிமேல் தொடர்ந்து சினிமாவில் நடித்துக்கொண்டேயிருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
-
தர்மபத்தினி, கடமை, கன்னியம் கட்டுப்பாடு, பிறந்தேன் வளர்ந்தேன். இதுதாண்டா போலீஸ் உள்பட பல படங்களில் நடித்தவர் ஜீவிதா. நடிகர் டாக்டர் ராஜசேகரை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஐதராபாத்தில் செட்டிலாகிவிட்டார். டாக்டர் ராஜசேகர் அரசியலில் பல ஆண்டுகளுக்கு முன்பே குதித்து விட்டார். கடந்த 2008ம் ஆண்டு ஆண்டு இருவரும் காங்கிரஸ் கட்சியல் இணைந்தனர். இப்போது ஜீவிதா காங்கிரசிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து விட்டார். ஆந்திர மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவர் கிஷன் ரெட்டி முன்னிலையில் அவர் பாரதிய ஜனதாவில் தன்னை இணைத்துக் கொண்டார். 
ஐதராபாத்தில் பாரதி ஜனதா கட்சியின் மகளிர் பிரிவு தலைவி சுனிதா ரெட்டி தலைமையில் இந்த இணைப்பு விழா நடந்தது. அவருக்கு ஏதாவது ஒரு தொகுதியும் ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது.
-
வழக்கு எண் 18/9, படத்தில் பெண் தொழில் அதிபராக நடித்து புகழ்பெற்றவர் ரித்திகா ஸ்ரீனிவாஸ். தற்போது வெளியாகி உள்ள நிமிர்ந்து நில் படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். "பணத்துக்காக நான் நடிக்க வரவில்லை. மேலும் அவர் கூறியதாவது: சின்ன வயதிலிருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. ஆனால் ஆச்சாரமான எங்கள் குடும்பம் என்னை சினிமால நடிக்கிறதுக்கு அனுமதிக்கல. அன்னிக்கு அனுமதிச்சிருந்தாங்கன்னா இன்னிக்கு ஹீரோயினா இருந்திருப்பேன். இப்போ கல்யாணமாகி துபாயில செட்டிலாகிட்டேன். 
என்னோட கணவர் துபாய், லண்டன் அமெரிக்காவில் பிசினஸ் செய்கிறார். நான் ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நடத்துறேன். தீடீர்னு ஒரு நான் சினிமால நடிக்கட்டுமான்ன ஹஸ்பண்ட்கிட்ட பர்மிஷன் கேட்டேன். உனக்கு விருப்பமுன்னா நடி என்றார். நடிக்க வந்து விட்டேன். 
 நான் பணத்துக்காக நடிக்க வரவில்லை. சினிமா மேல உள்ள பக்தியில நடிக்க வந்திருக்கேன். அதனால கேரக்டர்களை செலக்ட் பண்ணி நடிக்கிறேன். என்னோட வாழ்க்கை ரொம்ப மார்டன்தான். அதனால வில்லேஜ் கேரக்டர்ல நடிக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆயிரத்தில் இருவர்ங்ற படத்துல அந்த சான்ஸ் கிடைச்சிருக்கு. நல்ல கதையோட வந்த இரண்டு சின்ன பட்ஜெட் படங்கள்ல நடிச்சிட்டிருக்கேன்.
 என்னோட திறமையை வெளிப்படுத்துற மாதிரி நல்ல கேரக்டரோடு வந்தால் நடிக்க ரெடி. என்கிறார் ரித்திகா.
-
ஜெயம் ரவியும் ஹன்சிகாவும் ஏற்கனவே ‘‘எங்கேயும் காதல்’’ படத்தில் ஜோடியாக நடித்தனர். பிரபுதேவா இயக்கினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ரோமியோ ஜுலியட் என்ற பெயரில் தயாராகும் படத்தில் மீண்டும் ஜோடியாக நடிக்கிறார்கள். இந்த படத்தை லட்சுமண் இயக்குகிறார். இதுகுறித்து ஹன்சிகா கூறும்போது, ‘‘ஜெயம் ரவியுடன் ‘ரோமியோ ஜுலியட்’ படத்தில் நடிக்க நான் ஒப்பந்தமாகி இருப்பது உண்மைதான். பிரமாதமான கதை. நல்ல கேரக்டர். எனக்கு மிகவும் பிடித்தது.
 படத்தை பற்றி வேறு விஷயம் எதுவும் இப்போது சொல்ல முடியாது’’ என்றார்.
-